Pages

Sunday, 31 October 2010

:-((((((((((

சமீப காலத்தில் நான் இப்படி யாருடைய செய்தியோ கேட்டு அழுததில்லை...கோவையை சேர்ந்த தொழிலதிபரின் இரண்டு குழந்தைகளை கடத்தி கொன்ற செய்தி என் தலையிலுள்ள முடியெல்லாம் எழுந்து நிறக செய்து விட்டது..ஒரு பக்கம் கொலையாளிகளை வெட்டிக் கொள்ள வேண்டும் போல ஆத்திரம்
   குழந்தைகளின் முகத்தை கண்டால் தங்கட்டிகள் போல இருக்கிறார்கள்...இரண்டு குழந்தைகளையும் கொடூரமான முறையும் பரிகொடுத்த அவ்வீட்டினருக்கு இனி என்ன தான் ஆறுதல் சொன்னாலும் தேறுவார்களா?கடவுள் தான் வழிகாட்ட வேண்டும்.
  இது சம்மந்தமான இரண்டு விஷயங்கள் என் மனதில் வந்தது.
ஒன்று நம்மால் செய்ய முடிகிற காரியம்..எல்லோரையும் ஒரு சந்தேகக் கண்ணோடயே காணலாம்..குழந்தைகளை என்றுமே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளலாம்..பள்ளிக்கு விரும்போது லிஃப்டில் மாளில் என எங்குமே நம் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்...நாமே சில சமயம் பெரிய பிள்ளைகளாச்சே என்று குழந்தைகளை லிஃப்டில் தனியாக ஸ்கூள் வேனுக்கு போக சொல்வோம்...பொல்லாத காலம் கயவர்கள் எங்கு பதிங்கியிருக்கிறார்கள் என்றே சொன்ன முடியாது..இது போன்ற ஆட்கள் என்றுன்மே அவர்களுடையா வாய்ப்புக்காக காத்துக் கொண்டே இருப்பார்கள்.
   சமீப காலத்தில் இங்கு நடந்த சம்பவம்.சுமார் 14 வயதான ஒரு சிறுமி கீழே ப்ரெட் வாங்க லிஃப்டில் இறங்கி கீழே வந்ததும் ஒரு நபர் பிந்தொடர்வதை உணர்ந்தாளாம்...குழந்தைகள் தானே அதுகளுக்கு என்ன தெரியும் அதுக்கு உடனே தோன்றின புத்தி உடனே திரும்பி லிஃப்டில் ஏறி வீட்டுக்குள் ஓடி விடலாம் என்று பயந்து லிஃடில் ஏற அவனும் பின்னால் துரத்தி ஏறிக் கொண்டு லிஃப்டிலேயே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் ஃப்லாட் உள்ள அதே ஃப்லோரில் லிஃப்ட் நின்றௌ சிறிமி இற்னக்கி ஓடியபின் அழகாக அவன் பாட்டுக்கு கீழே இறங்கி போய்விட்டான்..இது தொடர்பான விசாரனையில் தான் அவன் மேலும் பல சிறுமிகளை இப்படி செய்திருப்பதும் வீட்டினர் பயந்து கம்ப்லெயின்ட் கொடுக்காமல் போனதும் தெரிய வந்தது..
  அதே போல் 2 வயது குழந்தையின் கழுத்திலுள்ள மாலைக்காசைப்பட்ட குழந்தையின் சித்தப்பா மறைவான இடத்தில் கடத்தி செல்ல குழந்தை கத்தியது உடனே பயந்து அவன் காட்டிக் கொடுத்து விடுமோ என்று கழுத்தை நெரித்து கொன்று விட்டு போய்விட்டான்...அழகிய அக்குழந்தையின் அழுகிய சடலத்தை கண்டு குழந்தையின் தந்தை பித்துப் பிடித்தது போல் ஓடிய காட்ச்சி கண்டு நான் பல நாள் உறக்கமில்லாமல் தவித்தேன்.இப்படி எத்தனை எத்தனையோ கேஸ் நடந்து கொன்டே இருக்கு.
  இருந்தாலும் நம்மாட்கள் எனக்கென்ன என்றபடி கொஞ்சம் குழந்தைகளை அலட்சியமாக தான் விடுகிறார்கள்..அம்மா அம்மா என்று அழுது கொண்டு அம்மாவை தேடி இங்கு தினம் தினம் மாளில் குழந்தைகளை நடப்பதை காணலாம்..இம்மாதிரி ஆட்கள் கண்ணில் பட்டால் என்னாகும்?
   இரண்டாவதாக நான் நினைக்கும் விஷயம் இதுக்கெல்லாம் காரணம் நம்முடைய இந்திய சட்டம் சரியே இல்லை..ஆயிரத்தெட்டு வழிகள் அவனுக்கு வெளியே வர..அதுவுமில்லையா ஜம்முன்னு மூனு நேரம் சாப்பிட்டு உள்ள ஒரு வருஷம் உட்கார்ந்து விட்டு வந்துவிட வேண்டியது.இவர்களை தண்டிக்க வேண்டாமா..
  இப்படி குழந்தைகளை கொல்லும் அரக்கர்களை எப்படி கொல்ல வேண்டும் என்று கேட்டால் நான் சொல்வேன்
1)இரண்டு கைய்யையும் வெட்டி வாழவிடலாம்
2)ஊர் மக்கள் முன்னே தலையை வெட்டி விடலாம்
3)கல்லால் எறிந்து கொல்லலாம்
4)தூக்கில் இடலாம்
இந்த நாலாவதாக உள்ள option அவ்வளவா போதாது என்று நினைக்கிறேன்..இவ்வளவு மிருகத்தனமாக நான் இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் ஆமாம் என்று தான் பதில்..
  ஒவ்வொரு தாயும் கர்பமாகும் முன்னேயே தன் குழந்தையை நேசிக்க தொடங்கி விடுகிறார்கள்..ஒன்பது மாதம் சுமந்து பிறகு ரசித்து வளர்த்த பூ போன்ற குழந்தைகளை கொல்பவர்களை சும்மா ஒரு அறையில் பூட்டி வைப்பது தான் தண்டனையா..அது போதுமா?
   ஏனோ எனக்கு புரியவில்லை..இப்படிப்பட்ட விஷயத்தில் சிலர் தான் கடுமையான தண்டனைகளுக்கு சப்போர்ட் ...நிறைய பேர் இந்திய நாட்டுக்கே உரிய அது இது என்று கடுமையான தண்டனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
   இப்பொழுதெல்லாம் என் மகள் பள்ளி சென்றாலே திரும்பி வரும்வரை ஒரு வித பயம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது..மக்களே உணருங்கள்...கடுமையான தண்டனையே இதற்கு தீர்வாகும்...
 நாலு பேரை கண்டு நாட்பது பேர் திருந்துவார்கள்.ஒரு பயத்தினாலாவது தயங்குவார்கள்.

தனலக்ஷ்மி டீச்சர்

 எனக்கு அன்று 14 வயது ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்..
 தனலக்ஷ்மி டீச்சர் எங்களுக்கு முன்னால் போனாலே பிள்ளைகள் காதோடு பேசி சிரிப்பார்கள்.அவர்கள் கடந்து போன பிறகு பின்னால் செய்கை காட்டுவார்கள்.பிள்ளைகள் மட்டுமில்லை மற்ற டீச்சர்களும் தனலக்ஷ்மி டீச்சருடன் ஒட்டவே மாட்டார்கள்..என்றும் ஒரு தனிமையுடனேயே நடப்பார்.
   எல்லோருக்கும் இப்படி கேலிக்காளான டீச்சரை எனக்கு மட்டும் ரொம்ப இஷ்டம் ஏன் என்று காரணமெல்லாம் இல்லை..என்னையும் டீச்சருக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் ஏனென்றால் அதுவரை யாரிடமும் அப்படி வாய் விட்டு சிரித்திருக்க மாட்டார் ஆனால் என்னை கண்டால் சிரிப்பார்..என்னுடைய கைய்யெழுத்தை அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்பார்.
   பள்ளி விட்டு வீடு செல்லும்போது ஒருவரோடு ஒருவார் முட்டி மோதி பிள்ளைகள் ஆட்டம்போட்டுக் கொண்டு வழியே செல்கிறபோதும் எனக்கு மட்டும் ஏனோ தனகஷ்மி மிஸ்ஸுடன் மெல்ல பேச்சு கொடுத்துக் கொண்டே நடக்க பிடிக்கும்.
  என்னை பிள்ளைகள் கிண்டலும் செய்வார்கள்..தோ உன் ஃப்ரென்ட் வந்தாச்சு என்று கிண்டலடிப்பார்கள்..ஆனால் நான் கண்டுகொண்டதே இல்லை..எதுவோ ஒரு நல்ல மனது அவரிடம் இருப்பதாக எனக்கு தோணும்.
   எல்லோரும் இப்படி கிண்டலடிக்க என்ன காரணம்னு நினைக்கிறீங்க?அவருடைய தோற்றம் தான்.
  குள்ளமான ஒல்லியான உருவம்,கறுப்பு நிறமும் சுத்த கிராமத்து ஸ்டைலில் சேலையும் கட்டுவார்..ஏறக்குறைய கீழே இருக்கும் படத்தில் இருப்பவரை போல தான் இருப்பாங்க..பார்த்தால் சத்தியமா டீச்சர்னா ஒரு பய நம்ப மாட்டாங்க..ஆனால் அவருடைய அறிவோ எனக்கு தெரிந்து எந்த ஆசிரியரும் அவருடைய அறிவை தொட முடியாது..நல்ல படித்தவர் ஆயிரதெட்டு மேற்படிப்புகள் படித்திருக்கிறார்.தனலக்ஷ்மி டீச்சர் எங்கள் பள்ளிக்கு அமைந்ததை பெருமையாக நினைத்துக் கொள்வேன்.
   தான் உண்டு தன் வழியுண்டு என்று மதிய வேளை சாப்பாடை கூட தனியே உட்கார்ந்து சாப்பிடுவார்..எனக்கு பார்க்க பாவமாக இருக்கும்.ஆனால் எங்களுக்குள் மட்டும் ஏனோ ஒரு இனம் புரியாத பாசம்..என்னை கண்டால் தோளில் தட்டி விட்டு ஒரு சிரிப்போடு போவார்.
   அன்று காலை ஒரு கிளிபச்சை நிறத்தில்  ஒரு சேலையை கட்டிக் கொண்டு சைக்கிளை ஓட்டிகொண்டே அவர் பள்ளிக்கு வந்தார். டீச்சர்கள் முதல் பிள்ளைகள் வரை அனைவரும் ஒரு சேர கூஉ என கத்தி கிண்டலடிக்க ஆர்ம்பித்து விட்டார்கள்..எதையும் கண்டுகொள்ளாமல் அவமானம் என கருத்தாமல் அவர் பாட்டுக்கு எல்லோரையும் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு ஸ்டாஃப் ரூமுக்கு போய் விட்டார்.
   பிள்ளைகளுக்கு சொல்லவா வேண்டும்..இன்டெர்வல் நேரத்திலெல்லாம் டீச்சரை நடித்துக் காட்டி ஒரே சிரிப்பு மழை பொழிந்து கொண்டாடிட்டிருந்தாங்க..மதியம் லன்சுக்கு மணி அடிச்சுட்டாங்க.
   வழக்கம் போல் எல்லாரும் சாப்பிட உக்காந்தோம்.அப்ப என் க்லாஸிலிருந்த ப்ரியா அழுது கொண்டு ஓடி வந்தாள்...அவளுடைய புதிய வைர கல் பதித்த மோதிரம் கழிவறையில் க்லோசெட்டுக்குள் விழுந்து விட்டது என்றாள்.
   பிள்ளைகள் எல்லோரும் பின்னால் சென்று பார்த்தார்கள்..ஆயம்மாக்களை கூப்பிட்டாங்க சில டீச்சர்கள் மட்டும் வந்து எட்டி பாத்து விட்டு கண்டுகொள்ளாமல் போய்ட்டாங்க..ப்ரியா அழுகையை நிறுத்தவே இல்லை.
   ஆயம்மாக்களும் இதை எப்படி எடுக்க என்று போய் விட்டனர்..அப்பொழுது தனலக்ஷ்மி டீச்சர் விவரம் அறிந்து ஓடி வந்தார்...சற்றும் அவர் யோசிக்கவே இல்லை.சட்டென அறுவறுப்பு எதுவும் பார்க்காமல் சில பாலிதின் பைகளை கைய்யில் சுற்றி கட்டிக் கொண்டு உள்ளே கைவிட்டு துழாவி மோதிரத்தை எடுத்து சோப் போட்டு கழுகி டெட்டாளில் போட்டு ப்ரியாவின் கைய்யில் கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் போய் விட்டார்.படிக்கும்போதே முகம் சுழிக்கிறோமா இல்லையா??யாருடைய மோதிரமோ அதை இவ்வளவு அசுத்தத்தில் கைய்யிட்டு எடுத்துக் கொடுத்தார் என்றால் அவருக்கு எவ்வளவு நல்ல மனசாக இருக்க முடியும்
  அன்றிலிருந்து பிள்ளைகளும் டீச்சர்களும் அவரை கேலி செய்ததே இல்லை...இவ்வளவு வருடங்களுக்கு பின்னும் அவருடைய  முகம் தான் என் கண்ணில் மின்னி மறைகிறது.

Friday, 29 October 2010

குட்டி பாப்பா

சமீபத்தில் வெளிய போயிருந்தேன்..அப்ப மகனின் டயப்பர் மாற்ற மாளில் உள்ள பேபி ரூமில் போனேன்..வழக்கத்துக்கு மாறாக எனக்கு முன் 2 பேர் பேபி போர்டுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்கள்..கதவின் மூலையில் ஒரு பக்கமாக போர்ட் இருப்பதால் என்னால் உள்ளே யார் என்று பார்க்க முடியவில்லை..நானும் காத்திருக்கேன் மத்தவங்களும் நிக்கிறாங்க எல்லாரும் தலையை சொரியுறாங்க ஊஹூம் அந்தம்மா குழந்தையின் ட்யபரை மாத்தி வெளியே வரக் காணோம்..20 நிமிடம் ஆயிற்று இதற்கிடையில் அங்கு ரைம்ஸ் ,பாட்டு ,தாலாட்டு என சகல இசையும் ஒரு குழந்தை சொல்லிக் கொண்டிஉர்ப்பது மட்டும் எனக்கு கேக்குது..டயபர் குழந்தையின் அக்காவோ தம்பியாகவோ இருக்கும் என்று நானும் மனதில் நினைத்துக் கொண்டேன் ..ஒரு வழியாக அந்தம்மா டயபரை மாற்றி பிள்ளையை தள்ளிக் கொண்டு ப்ராமோடு வெளிய வந்தாங்க..நான் ஆடிப் போயிட்டேன்..அந்த பயலுக்கு சுமார் 4 வயதிருக்கும்.எடையோ கண்டிப்பா 40 கிலோக்கு மேல இருக்கும்:-0..அதுக்கு தான் டயபரை மாத்துகிட்டிருந்தாங்க..எல்லோருக்கும் கடுப்போ கடுப்பு..எனக்கு முன் இருந்தவங்க அஞ்சே நிமிஷத்தில் டயபரை மாற்றி விட்டு வந்துட்டாங்க..அடுத்தது நான் போய் போர்ட் பக்கமா நின்னு திரு திருன்னு முழிச்சுட்டே இருந்தேன்..அங்கு  க்லீன் பன்னும் ஒரு பெண் என்னை கண்டு சிரித்தது..ஏன் இப்படி நிக்கிறீங்கன்னு எனக்கு புரிஞ்சது அந்த போற்ட் உடையுமான்னு தானே பாத்துகிட்டிருக்கீங்கன்னு கேட்டாங்க...
  ஆமாம் அதே அதே:-(...என்ன கொடுமை சார் இது?

என்னாது டிப்ஸ் மட்டும் தரனுமா?வெட்டி பேச்சு கூடாதா?

சுட சுட பழைய சாதம்

நேற்று வைத்த மீந்து போன சாதம் இன்று புத்தம் புதிதாக வேண்டுமா?ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்ததும் குக்கரில் கொட்டி 1/2 கை தண்ணீர் தெளித்து குக்கரை மூடி விசில் போடாமல் தீயை மிதமாக வைக்கவும்..10 நிமிடத்தில் மேலே ஆவி பறக்க துடங்கும்.சுட சுட புது சாதம் ரெடி

Thursday, 28 October 2010

குழந்தைகளுக்கு திட உணவு


Add caption
 6 மாதம் முதற்கொண்டு குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க துவங்கிய பின்  பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..ஆப்பிள்,பியர்ஸ்,கேரட் முதலியவற்றை ஒன்றாக வேக வைத்து பாலுடன் அரைத்து கொடுக்கலாம்.விரும்பினால் 3 ஸ்பூன் வேக வைத்த பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

குழந்தையுடன் வெளியே செல்லும்பொழுது

குழந்தையுடன் வெளியே செல்லும்பொழுது
2 டயப்பர்,1 பாக்கெட் வைப்ஸ்,1 பாக்கெட் டிஷூஸ்,டயபர் டிஸ்போசபில் சேக்ஸ்,டயபர் சேங்ஜிங் மேட்  எப்பவுமே எடுத்து செல்லலாம்..

   நாம ரொம்ம்ப குழந்தையில் சருமத்தில் அக்கரையா இருப்போம் ஒத்துக்கிறேன்..அதனால் வீட்டில் நறுமணமில்லாத வைப்ஸ் உபயோகிப்போம்..அதுக்காக வெளியே போகிற பொழுதும் அதையே உபயோகித்து அடுத்தவங்களை கொடுமைபடுத்தாமல் நல்லமணமுள்ள வைப்ஸை கொண்டு செல்லலாம்.

ஃபலூடா

ஃபலூடா செய்யும்பொழுது பல வகை ஃப்லேவரிலான ஐஸ்க்ரீம்களை கடைசியாக வைத்து பரிமாறுவார்கள்..அதில் சாக்கலேட் ஃப்லேவர் மட்டும் தவிர்ப்பது நல்லது ..சிறிது நேரத்தில் உள்ளே இருக்கும் மற்ற பழங்கள் சேமியா,ஜெல்லி எல்லாமே அழுக்கு பிடித்த நிறம் போல் ஆகிவிடும்

துணியை மடக்கும்பொழுது

துணியை மடக்கும்பொழுது இனியும் எடுக்க தானே போறோம் பின்ன எதுக்கு மடக்கிட்டு என்று நொண்டி சாக்கெல்லாம் சொல்லப்படாது..ஒவ்வொரு மூலையையும் சமமாக கைகளால் அழுத்தி தேய்த்து தேய்த்து துணைகளை மடக்கி வைத்தால் துணியை எடுக்கவும் சுலபம்..வார்ட்ரோபில் கிடந்து உருளாது..எனக்கு தெரிந்த ஒரு பெண் துணியை மடக்கிறேன்னு சொல்லிட்டு உருட்டி உருட்டி வைப்பதை பார்த்தேன்:-D
  அக்காலத்து பாட்டிகள் சொல்வாங்க ஒரு வீட்டிலுள்ள துணியை கண்டு தான் அந்த வீட்டு பெண்ணை மதிப்பிடுவாங்களாம்..வெள்ளை துணி வெளுக்காமல் இருந்தால்,மடித்த துணி அலங்கோலமாக இருந்தால் அது சுத்த சோம்பேரி என்று கணக்கு போடுவாங்களாம்

Friday, 22 October 2010

குழந்தைகளை கற்பித்தல்

 ஒரு பத்து மாதம் போல் குழந்தைகளுக்கு கண்,முக்கு,வாய்,கை கால்,தலை காட்ட பழக்கலாம்..அவர்களே அழகாக தொட்டு காட்டுவார்கள்..
 அதன் பின் அப்பா,அம்மா,டாடா,அது,இது என பழக்கலாம் மெல்ல மெல்ல பேச துவங்குவார்கள்..அதை விட்டுட்டு இப்பவே என் புள்ள எல்லாத்திலும் ஃபஸ்ட் நு சொல்லலாம்னு கணவு கண்டு எல்லாத்தையும் திணித்தால் புள்ள மக்குப்புள்ளயா போகும்

கிழே இறங்க பழக்க

சின்ன பிள்ளைகள் தவழும் வயதில் எதிலெல்லாமோ ஏறி கீழே விழ வாய்ப்புண்டு..அவர்களை முதலில் கட்டிலிலிருந்து இறங்க பழக்கி விட வேண்டும்.ஒரு 8 மாதம் போல் அவர்களை மெல்ல கட்டிலின் ஓரத்தில் வர வைத்து குப்புற படுக்க வைத்து மெல்ல கீழே அவர்களை இறக்கி காட்ட வேண்டும்...தினசரி சில முறை இப்படி காட்டினால் தானாக இறங்க பழகுவார்கள்..கட்டிலிலென்றாலும் தைரியமாக விடலாம் தானாக இறங்கி விடுவார்கள்

அதே போல் கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு அறையிலுள்ள கதவு தாழ்களையும் எப்படி திறப்பது என்று சொல்லிக் கொடுப்பது நல்லது..நிறைய பிள்ளைகள் கதவை தாழிட்டு விடும் திறக்க தெரியாமல் பெரிய ட்ராமாவே உண்டு பண்ணியிருக்கும்..ரூமுக்குள்ளிருந்து எப்படி திறப்பது என்று சொல்லிக் கொடுத்தால் போதும்

புத்தம் புதுசு

புதியதாக வாங்கிய துணிகளை எக்காரணம் கொண்டும் அப்படியே போடும் பழக்கம் கூடாவே கூடாது..கொஞ்சம் உக்காந்து யோசிச்சா புரியும் யார் யார் என்னென்ன அசுத்தமெல்லாம் அதிலிருக்குமோ...சும்மா ஃபிட்டிங் ரூமில் போனாலே ஆயிரத்தெட்டு துணி அங்கு தரையில் திண்டாடிக் கொண்டிருக்கும் அதைத் தான் நாம புதுசா போட்டு ஷோ காட்டிட்டு போய்ட்டிருப்போம்..மென்மையா ஷாம்பூ போட்டு துவைக்கவோ ட்ரை க்லீன் கொடுக்கவோ செய்த பின் அது ஆயிரத்தெட்டு முறை போட்டாலும் பரவாயில்லை

பொருட்களை அடுக்க

நம்முடைய வார்ட்ரோப்களை சவுகரியமாக சுத்தமாக வைக்க அதன் அளவுக்கு தகுந்த ஸ்டோர்J பாக்ஸ்களை வாங்கி அதில் பொருட்களை ,துணிகளை அடுக்கி வைக்கவும்.பார்க்க அழகாகவும்,பொருட்களை வெளியில் எடுக்க எளிமையாகவும் இருக்கும்

துணி துவைக்க கல்

வீடு கட்டுகிறவர்கள் பின்பக்கம் இடவசதி இருந்தால் சிறிய சாதாரண ஆடம்பரமல்லாத குளியலறையும் அதனுள் துணி துவைக்கும் கல்லும் பொருத்தலாம்..குடும்ப அங்கத்தினர்கள் அவரவர் துணி அவரவர் அலசி போடலாம் அல்லது மழைகாலங்களில் நமக்கோ அல்லது வேலைக்கு வருபவருக்கோ சிரமமில்லாமல் துவைக்கலாம்

வீடு கட்டுகிறவர்கள்

வீடு கட்டுகிறவர்கள் மெயின் கேட்டின் அருகேயே சின்னதாக தடுப்பு அமைத்து ஒரு டேப்பை பொருத்துவது நல்லது..மழைக்காலத்தில் சகதியாகாது.காலை கழுகிவிட்டு உள்ளே போகலாம்

குளியலறை

 வீடு கட்டுகிறவர்கள் குளியலறையில் குளிக்க மட்டும் தனியாக உள்ளே கண்ணாடி தடுப்பு அமைப்பதோ அல்லது சின்னதாக நிலத்தில் தடுப்பு வைப்பதோ நல்லது..குளிக்கும் தண்ணீர்,கை கால் கழுகும் தண்ணீர் என்றும் தேங்கி நின்று குளியலறை அசிங்கமாக தெரியாது...ட்ரைய்யாக பளிச்சென்று இருக்கும்

fitted sheet

குழந்தைகள் உள்ள வீட்டில் கட்டில் மெத்தைக்கு ஃபிட்டட் ஷீட் வாங்கவும்..போட்டால் போட்ட இடத்தில் இருக்கும்..இல்லையென்றால் அவர்கள் போடும் ஆட்டத்துக்கு எப்பவும் மெத்தை அசிங்கமா கிடக்கும்

Monday, 18 October 2010

தயிரும் ஆன்டிபயாடிக்கும்

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பேக்டீரியல்  இன்ஃபெக்ஷன் வரும் பட்சத்தில் ஆன்டிபயாடிக்கை மருத்துவர் பரிந்துரைப்பார்.
அதனை உட்கொள்ளுகையில் நம் உடம்பிலுள்ள நல்ல பேக்டீரியாக்களும் அழிந்து விடும்..அதனால் தான் ஆன்டிபயடிக்கின் கோர்ஸ் முழுவதும் முடிந்ததும் தினசரி உணவில் நல்ல பேக்டீரியாக்கள் கிடைப்பதற்காக தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  ஆனால் ஆன்டிபயாடிக் எடுக்கும் சமயத்தில் தயிர் கூடாது வயிற்றினுள்ளேயே தயிரிலுள்ள பேக்டீரியாக்களும் செத்துப் போகும்

காய்ச்சல் மருந்து

சின்ன குழந்தைகள்க்கு காய்ச்சல் வந்தால் ரொம்ப ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்..ரொம்ப டெம்பெரேசர் கூடினால் வலிப்பு வர வாய்ப்பு உண்டு..
 ஆனால் பலருக்கும் மருந்துகொடுப்பதில் சந்தேகம் எழும்..குழந்தைகளுக்கு உடற்சூடு 36.5 ஐ தாண்டிவிட்டாலே காய்ச்சலுக்கான சிரப் கொடுக்கலாம்..
 ஆனால் அதையும் மீறி குறையாமல் 39 ஐ தாண்டும் பட்சத்தில் சப்போசிடரி தான் வைக்க வேண்டும்..அதனால் மருந்தை ஊற்றின நேரத்தை பார்க்க தேவையில்லை.உடனே சப்போசிட்டரி வைத்திடலாம்.
  ஆனால் ஒரு சப்போசிடரிக்கும் அடுத்த சப்போசிட்டரிக்கும் அதற்கானபோதிய நேர இடைவெளி இருக்க வேண்டும்.
  சப்போசிடரியையும் மீறி காய்ச்சல் கூடினால் குளிர்ந்த நீரில்(ரொம்பவும் குளிர்ந்ததல்ல) துணையை நனைத்து உடம்பில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்..காய்ச்சல் இறங்கும்.

Saturday, 16 October 2010

அடை பாயாசம்

அடை பாயாசம் செய்கிற பொழுது முதலில் அடையை வேகவைத்ததும் அதனை நெய்யில் நன்கு வதக்கி விட்டு பின் வெல்லப்பாகில் போட்டு கிளறி வேக விட்டு அதில் இரண்டாம் பால்,முதல் பால் ஊற்றி வற்ற விடலாம்..இம்முறையில் செய்தால் அடை சுவையாக இருக்கும்

ஆணி அடிக்கறீங்களா?

சுவற்றில் ட்ரில்லிங் வேலை நடந்து முடிந்ததும் வீடே தூசியாகி கிடக்கும்..ட்ரில்லிங் எங்கு செய்கிறோமோ அந்த இடத்திற்கு சற்று கீழ் ஒரு ப்லாஸ்டிக் கவரை டேப் கொண்டு சுவற்றில் ஒட்டி விட்டால் விழுகிற தூசி நேரடியாக கவரில் விழும்...நோ மோர் மெஸ்


அதே போல் விருந்தினர்கள் வருகையில் டிஸ்போசபிள் பாத்திரங்கள் அவர்கள் எங்கு போடுவது என்று தெரியாமல் அங்கங்கு வைத்திருப்பார்கள்..அவர்கள் சாப்பிட உட்காரும்பொழுதே அந்த அறையில் எதாவதொரு ஓரமாக சுவற்றில் பெரிய கார்பேஜ் கவரை  ஒட்டிவிட்டால் எல்லோரும் அதில் தட்டுகளை போடுவார்கள்..உடனுக்குடன் அதனை அப்புறப்படுத்திவிடலாம்

Wednesday, 13 October 2010

சொய்ய்ய்ய்ங்

குளியலரையிலும்,படகிலும் வழுக்கி விழுந்தா பிறகு அவர்களை கடாசி விடலாம் என்று ஒரு பழஞ்சொல் உண்டு..ஏனென்றால் அப்படி உடம்பில் அடிபடும்.
டாய்லெட்டை கழுவ கண்ட கண்ட ஃப்லோர் க்லீனர் பயன்படுத்தாமல் சாதாரண விம் பவுடர் பயன்படுத்தினால் குளியலறை பளிச்ச் பளிச்.வழுக்கவே வழுக்காது

பழம் வெட்டாத கத்தி??

நம்முடைய சமையலரையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருள் கத்தி..நல்ல கத்தி வாங்குவதில் கஞ்சத்தனம் செய்யாமல் நல்ல கூர்மையான கத்திகளை வாங்கி வைக்கவும்.
சாதாரண வெங்காயம் ,தக்காளி நறுக்க சின்ன கத்தியும்
நான் வெஜ் சமைப்பவர்களுக்கான பெரிய சைஸ் கத்தியும்
குட்டி குட்டியாக சாப் செய்வதற்கான கத்தியும் கிச்சனில் இருந்தால் சமையல் மிக வேகமாகவும் சமைத்தது அழகாகவும் இருக்கும்
 

வாடை நீங்க

  நம் இந்திய சமையலுக்கு எது சமைத்தாலும் நமக்கு தெரியாது ஆனால் நம்முடைய எல்லா பொருட்களிலும் உடையிலும் அதன் வாடை இருக்கும்..வெளியில் நாலு பேருடன் நடக்கையில் தனியா நம் வாடை தெரியும்.
  நமூரில் கூட சர்வ சாதாரணமாக எண்ணை கொண்டையும்,கூவமும்,அழுகிய பழங்களுமாக ஒட்டி உரவாடுவதால் இது தெரியாது வெளிநாட்டில் என்றால் நம்மை தனியாக காட்டும்
 தினசரி சமையல் முடிந்து எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் பாத்திரங்களை கழுகி,கிச்சனை சாப்பாடு மேஜையை எல்லாம் டெட்டால் கொண்டு துடைத்தால் பாதி வாடை போய்விடும்..அதன் பின் நல்ல தரமான ஊத்(அகர்வுட்) கரியில் புகைத்து வைக்கவும்..வார்ட்ரோபை எல்லாம் திறந்து வைத்து புகைத்தால் நம்முடைய ட்ரெஸ்ஸில் பொருட்களில் நறுமணம் வீசும்...இது உடலுக்கு தீங்கும் இல்லை .

Add caption


மீனை ஒட்டாமல் வறுக்க

மீனை ஒட்டாமல் வறுக்க வேண்டுமா?எண்ணை காய்ந்தபின் கழுகிய இரண்டு அல்லது மூன்று கருவேப்பிலை தண்டுகளை இலைகளோடு சேர்த்து எண்ணையில் முதலில் பரவலாக வைக்கவும் அதன் மேல் மீனை வறுக்கவும்.வறுத்தபின் தண்டுகளை மட்டும் நீக்கி கறுவேப்பிலையோடு பரிமாறலாம்..பார்க்க அழகாகவும் மணமாகவும் ஒட்டாமலும் வரும்

உணவு அலங்காரம்

உணவை அலங்கரிக்க கொத்துமல்லி இலை பயன்படுத்துவோம்..அதற்கு தண்டில்லாமல் இலைகளை மட்டும் கிள்ளி விட்டு பொடியாக நறுக்கி தூவ வேண்டும் அப்பொழுது தான் பார்க்க ரிச்சாக அழகாக இருக்கும்..தண்டோடு தூவுவது அழகல்ல