Pages

Wednesday 23 March 2011

ப்லட் க்லூகோஸ்

ஒரு வயதான பாட்டி  சொன்னார் வருத்தமாக
"என்ன செய்றதுன்னே தெரியலம்மா சக்கரை ரொம்ப கூடுதலா இருக்குன்னு டாக்டர் சொல்றார்"

"எத்தனைங்க இருக்கு"

"அரை கிலோவுக்கு நூறு கிராம் தான் கம்மியாம்"

இது கேட்டு நான் அடக்கி அடக்கி சிரித்து என் அம்மா மண்டையில் குட்டியது மறக்கவே முடியாது

Friday 18 March 2011

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த

ஒரு சிறிய டப்பில் தண்ணீர் முழுக்க நிரப்பிக் கொண்டு கண்கள் இரண்டையும் நன்றாக முழிக்கத் திறந்து நாக்கையும் நீட்டி மூச்சை உள்ளிழுத்து டப்பிலுள்ள தண்ணீரில் முகத்தை மூழ்கச் செய்து கண்களை இடது வலது என பார்க்க வேண்டும்..மூச்சு விடும்பொழுது முகத்தை வெளியே எடுத்து விட வேண்டும்.எவ்வளவு மூச்சு பிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் வைக்கலாம்.இது செய்ய கொஞ்சம் கடினம் ஆனால் கண்டிப்பாக சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.இது ஒரு யோகாசன பயிற்சியாளர் சொல்லிக் கொடுத்தது.
    ரொம்ப தூக்கம் வர்ரவங்களுக்கும் இதே டிப்ஸ் தான்..நீங்க அப்படியே டப்புக்குள்ளிருந்து அந்த நாக்கு நீட்டி கண்ணை உருட்டுற முகத்தை கற்பனை செய்யுங்க..தூக்கம் போயிடும்

Wednesday 2 March 2011

வண்ணங்கள் எண்ணங்கள்



இதெல்லாம் சின்ன வயதில் சுமார் பதிமூன்று முதல் பதிநாறு வயதுக்குள் வரைந்த படங்கள்.இன்று பொட்டியை க்லீன் பண்ணலாம் என்று வந்தேன் ..பழசெல்லாம் கண்ணில் படவும் உங்களுக்கு காண்பிக்கலாமே என்று ஒரு யோசனை

இதையெல்லாம் பல நாட்களுக்கு பிறகு பார்க்கையில் அந்தந்த கட்டத்தில் நடந்த பல சம்பவங்களும் மனதில் வந்து போகும்..அழகிய பருவம்




 
கீழே இருப்பது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும்பொழுது அம்மா வரைந்து காண்பித்தது..இதன் பின் தான் எனக்கும் ஆர்வம் வந்தது என்று நினைக்கிறேன்





Tuesday 1 March 2011

குழந்தைகள் வீட்டில் சோஃபா

குழந்தைகள் உள்ள வீட்டில் சோஃபாவுக்கு வாய் இருந்தால் அழும்..அந்தளவுக்கு கொட்டோ கொட்டோ என்று பால் ,தண்ணி,சாதம் இன்னும் யூரின் இல்ல அதுக்கு மேலும் பலதும் ஆகும்.தூக்கி போட முடியுமா?
சோஃபா வாங்கும்பொழுது ரிமூவபிள் கவர் உள்ளதாக பார்த்து வாங்கவும்..அல்லது கவர் அடித்து போடவும்.அதன் அடியில் மேட்ரெஸ் ப்ரொடெக்டர் குஷனுக்கு அளவாக வாங்கி விரித்த பின் கவரை போடலாம்..நல்ல அழுக்கு ஆகுகையில் எடுத்து துவைக்கலா.சோஃபா பாழாகாமல் சுத்தமாக இருக்கும்.

கூடுமானவரை லெதர் சோஃபா வாங்கலாம்