Pages

Sunday, 31 October 2010

தனலக்ஷ்மி டீச்சர்

 எனக்கு அன்று 14 வயது ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்..
 தனலக்ஷ்மி டீச்சர் எங்களுக்கு முன்னால் போனாலே பிள்ளைகள் காதோடு பேசி சிரிப்பார்கள்.அவர்கள் கடந்து போன பிறகு பின்னால் செய்கை காட்டுவார்கள்.பிள்ளைகள் மட்டுமில்லை மற்ற டீச்சர்களும் தனலக்ஷ்மி டீச்சருடன் ஒட்டவே மாட்டார்கள்..என்றும் ஒரு தனிமையுடனேயே நடப்பார்.
   எல்லோருக்கும் இப்படி கேலிக்காளான டீச்சரை எனக்கு மட்டும் ரொம்ப இஷ்டம் ஏன் என்று காரணமெல்லாம் இல்லை..என்னையும் டீச்சருக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் ஏனென்றால் அதுவரை யாரிடமும் அப்படி வாய் விட்டு சிரித்திருக்க மாட்டார் ஆனால் என்னை கண்டால் சிரிப்பார்..என்னுடைய கைய்யெழுத்தை அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்பார்.
   பள்ளி விட்டு வீடு செல்லும்போது ஒருவரோடு ஒருவார் முட்டி மோதி பிள்ளைகள் ஆட்டம்போட்டுக் கொண்டு வழியே செல்கிறபோதும் எனக்கு மட்டும் ஏனோ தனகஷ்மி மிஸ்ஸுடன் மெல்ல பேச்சு கொடுத்துக் கொண்டே நடக்க பிடிக்கும்.
  என்னை பிள்ளைகள் கிண்டலும் செய்வார்கள்..தோ உன் ஃப்ரென்ட் வந்தாச்சு என்று கிண்டலடிப்பார்கள்..ஆனால் நான் கண்டுகொண்டதே இல்லை..எதுவோ ஒரு நல்ல மனது அவரிடம் இருப்பதாக எனக்கு தோணும்.
   எல்லோரும் இப்படி கிண்டலடிக்க என்ன காரணம்னு நினைக்கிறீங்க?அவருடைய தோற்றம் தான்.
  குள்ளமான ஒல்லியான உருவம்,கறுப்பு நிறமும் சுத்த கிராமத்து ஸ்டைலில் சேலையும் கட்டுவார்..ஏறக்குறைய கீழே இருக்கும் படத்தில் இருப்பவரை போல தான் இருப்பாங்க..பார்த்தால் சத்தியமா டீச்சர்னா ஒரு பய நம்ப மாட்டாங்க..ஆனால் அவருடைய அறிவோ எனக்கு தெரிந்து எந்த ஆசிரியரும் அவருடைய அறிவை தொட முடியாது..நல்ல படித்தவர் ஆயிரதெட்டு மேற்படிப்புகள் படித்திருக்கிறார்.தனலக்ஷ்மி டீச்சர் எங்கள் பள்ளிக்கு அமைந்ததை பெருமையாக நினைத்துக் கொள்வேன்.
   தான் உண்டு தன் வழியுண்டு என்று மதிய வேளை சாப்பாடை கூட தனியே உட்கார்ந்து சாப்பிடுவார்..எனக்கு பார்க்க பாவமாக இருக்கும்.ஆனால் எங்களுக்குள் மட்டும் ஏனோ ஒரு இனம் புரியாத பாசம்..என்னை கண்டால் தோளில் தட்டி விட்டு ஒரு சிரிப்போடு போவார்.
   அன்று காலை ஒரு கிளிபச்சை நிறத்தில்  ஒரு சேலையை கட்டிக் கொண்டு சைக்கிளை ஓட்டிகொண்டே அவர் பள்ளிக்கு வந்தார். டீச்சர்கள் முதல் பிள்ளைகள் வரை அனைவரும் ஒரு சேர கூஉ என கத்தி கிண்டலடிக்க ஆர்ம்பித்து விட்டார்கள்..எதையும் கண்டுகொள்ளாமல் அவமானம் என கருத்தாமல் அவர் பாட்டுக்கு எல்லோரையும் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு ஸ்டாஃப் ரூமுக்கு போய் விட்டார்.
   பிள்ளைகளுக்கு சொல்லவா வேண்டும்..இன்டெர்வல் நேரத்திலெல்லாம் டீச்சரை நடித்துக் காட்டி ஒரே சிரிப்பு மழை பொழிந்து கொண்டாடிட்டிருந்தாங்க..மதியம் லன்சுக்கு மணி அடிச்சுட்டாங்க.
   வழக்கம் போல் எல்லாரும் சாப்பிட உக்காந்தோம்.அப்ப என் க்லாஸிலிருந்த ப்ரியா அழுது கொண்டு ஓடி வந்தாள்...அவளுடைய புதிய வைர கல் பதித்த மோதிரம் கழிவறையில் க்லோசெட்டுக்குள் விழுந்து விட்டது என்றாள்.
   பிள்ளைகள் எல்லோரும் பின்னால் சென்று பார்த்தார்கள்..ஆயம்மாக்களை கூப்பிட்டாங்க சில டீச்சர்கள் மட்டும் வந்து எட்டி பாத்து விட்டு கண்டுகொள்ளாமல் போய்ட்டாங்க..ப்ரியா அழுகையை நிறுத்தவே இல்லை.
   ஆயம்மாக்களும் இதை எப்படி எடுக்க என்று போய் விட்டனர்..அப்பொழுது தனலக்ஷ்மி டீச்சர் விவரம் அறிந்து ஓடி வந்தார்...சற்றும் அவர் யோசிக்கவே இல்லை.சட்டென அறுவறுப்பு எதுவும் பார்க்காமல் சில பாலிதின் பைகளை கைய்யில் சுற்றி கட்டிக் கொண்டு உள்ளே கைவிட்டு துழாவி மோதிரத்தை எடுத்து சோப் போட்டு கழுகி டெட்டாளில் போட்டு ப்ரியாவின் கைய்யில் கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் போய் விட்டார்.படிக்கும்போதே முகம் சுழிக்கிறோமா இல்லையா??யாருடைய மோதிரமோ அதை இவ்வளவு அசுத்தத்தில் கைய்யிட்டு எடுத்துக் கொடுத்தார் என்றால் அவருக்கு எவ்வளவு நல்ல மனசாக இருக்க முடியும்
  அன்றிலிருந்து பிள்ளைகளும் டீச்சர்களும் அவரை கேலி செய்ததே இல்லை...இவ்வளவு வருடங்களுக்கு பின்னும் அவருடைய  முகம் தான் என் கண்ணில் மின்னி மறைகிறது.

5 comments:

kavisiva said...

ஆளைப் பார்த்து எடை போடக் கூடாதுன்னு சும்மாவா சொன்னாங்க!

தனலெக்ஷ்மி டீச்சரை எனக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு :)

kavisiva said...

தளிகா word verification ஐ எடுத்திடுங்க. கமெண்ட் போட கஷ்டமா இருக்கு :(

Jaleela Kamal said...

mmm

அஸ்மா said...

நம் ஒவ்வொரின் உருவமும் நம் சொந்த திறமையினாலோ அறிவுக்கூர்மையை வைத்தோ கிடைத்ததில்லை. இறைவன் ந‌மக்கு கொடுத்திருக்கும் உருவம், அது அவனுடைய இஷ்டம்! இதில் தன்னைப் பார்த்தே தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது எனும்போது, அடுத்தவரை கேலியாக‌ பார்ப்பது பெரிய பாவமென்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை தளிகா! நல்லவேளை நீங்களாவது அந்த பாவத்திலிருந்து தப்பித்தீர்கள்.

தளிகா உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன் பாருங்கள்.

தளிகா said...

கவி சரி செய்து விட்டேன்...இப்ப கமென்ட் போடுங்க பாப்போம்:-)

வாஸ்தவம் தான் அப்படின்னா அக்கா சொல்றீங்க

அஸ்மா உங்க மெயில் கண்டதும் நான் அந்த வேர்ட் வெரிஃபிகேஷன் எடுத்து விட்டேன்..
ஆமாம் அஸ்மா என்ன செய்வது நம்மூருக்குள்ளேயே நமக்கு வெள்ளை சொள்ளை,சாதி மதம் அப்படி இப்படின்னு அடிதடி..இதுல வெளிநாட்டவங்க நம்மை ஈ ந்னு பாத்தா ஒன்னும் சொல்றதுக்கில்லை

Post a Comment