சமீப காலத்தில் நான் இப்படி யாருடைய செய்தியோ கேட்டு அழுததில்லை...கோவையை சேர்ந்த தொழிலதிபரின் இரண்டு குழந்தைகளை கடத்தி கொன்ற செய்தி என் தலையிலுள்ள முடியெல்லாம் எழுந்து நிறக செய்து விட்டது..ஒரு பக்கம் கொலையாளிகளை வெட்டிக் கொள்ள வேண்டும் போல ஆத்திரம்
குழந்தைகளின் முகத்தை கண்டால் தங்கட்டிகள் போல இருக்கிறார்கள்...இரண்டு குழந்தைகளையும் கொடூரமான முறையும் பரிகொடுத்த அவ்வீட்டினருக்கு இனி என்ன தான் ஆறுதல் சொன்னாலும் தேறுவார்களா?கடவுள் தான் வழிகாட்ட வேண்டும்.
இது சம்மந்தமான இரண்டு விஷயங்கள் என் மனதில் வந்தது.
ஒன்று நம்மால் செய்ய முடிகிற காரியம்..எல்லோரையும் ஒரு சந்தேகக் கண்ணோடயே காணலாம்..குழந்தைகளை என்றுமே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளலாம்..பள்ளிக்கு விரும்போது லிஃப்டில் மாளில் என எங்குமே நம் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்...நாமே சில சமயம் பெரிய பிள்ளைகளாச்சே என்று குழந்தைகளை லிஃப்டில் தனியாக ஸ்கூள் வேனுக்கு போக சொல்வோம்...பொல்லாத காலம் கயவர்கள் எங்கு பதிங்கியிருக்கிறார்கள் என்றே சொன்ன முடியாது..இது போன்ற ஆட்கள் என்றுன்மே அவர்களுடையா வாய்ப்புக்காக காத்துக் கொண்டே இருப்பார்கள்.
சமீப காலத்தில் இங்கு நடந்த சம்பவம்.சுமார் 14 வயதான ஒரு சிறுமி கீழே ப்ரெட் வாங்க லிஃப்டில் இறங்கி கீழே வந்ததும் ஒரு நபர் பிந்தொடர்வதை உணர்ந்தாளாம்...குழந்தைகள் தானே அதுகளுக்கு என்ன தெரியும் அதுக்கு உடனே தோன்றின புத்தி உடனே திரும்பி லிஃப்டில் ஏறி வீட்டுக்குள் ஓடி விடலாம் என்று பயந்து லிஃடில் ஏற அவனும் பின்னால் துரத்தி ஏறிக் கொண்டு லிஃப்டிலேயே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் ஃப்லாட் உள்ள அதே ஃப்லோரில் லிஃப்ட் நின்றௌ சிறிமி இற்னக்கி ஓடியபின் அழகாக அவன் பாட்டுக்கு கீழே இறங்கி போய்விட்டான்..இது தொடர்பான விசாரனையில் தான் அவன் மேலும் பல சிறுமிகளை இப்படி செய்திருப்பதும் வீட்டினர் பயந்து கம்ப்லெயின்ட் கொடுக்காமல் போனதும் தெரிய வந்தது..
அதே போல் 2 வயது குழந்தையின் கழுத்திலுள்ள மாலைக்காசைப்பட்ட குழந்தையின் சித்தப்பா மறைவான இடத்தில் கடத்தி செல்ல குழந்தை கத்தியது உடனே பயந்து அவன் காட்டிக் கொடுத்து விடுமோ என்று கழுத்தை நெரித்து கொன்று விட்டு போய்விட்டான்...அழகிய அக்குழந்தையின் அழுகிய சடலத்தை கண்டு குழந்தையின் தந்தை பித்துப் பிடித்தது போல் ஓடிய காட்ச்சி கண்டு நான் பல நாள் உறக்கமில்லாமல் தவித்தேன்.இப்படி எத்தனை எத்தனையோ கேஸ் நடந்து கொன்டே இருக்கு.
இருந்தாலும் நம்மாட்கள் எனக்கென்ன என்றபடி கொஞ்சம் குழந்தைகளை அலட்சியமாக தான் விடுகிறார்கள்..அம்மா அம்மா என்று அழுது கொண்டு அம்மாவை தேடி இங்கு தினம் தினம் மாளில் குழந்தைகளை நடப்பதை காணலாம்..இம்மாதிரி ஆட்கள் கண்ணில் பட்டால் என்னாகும்?
இரண்டாவதாக நான் நினைக்கும் விஷயம் இதுக்கெல்லாம் காரணம் நம்முடைய இந்திய சட்டம் சரியே இல்லை..ஆயிரத்தெட்டு வழிகள் அவனுக்கு வெளியே வர..அதுவுமில்லையா ஜம்முன்னு மூனு நேரம் சாப்பிட்டு உள்ள ஒரு வருஷம் உட்கார்ந்து விட்டு வந்துவிட வேண்டியது.இவர்களை தண்டிக்க வேண்டாமா..
இப்படி குழந்தைகளை கொல்லும் அரக்கர்களை எப்படி கொல்ல வேண்டும் என்று கேட்டால் நான் சொல்வேன்
1)இரண்டு கைய்யையும் வெட்டி வாழவிடலாம்
2)ஊர் மக்கள் முன்னே தலையை வெட்டி விடலாம்
3)கல்லால் எறிந்து கொல்லலாம்
4)தூக்கில் இடலாம்
இந்த நாலாவதாக உள்ள option அவ்வளவா போதாது என்று நினைக்கிறேன்..இவ்வளவு மிருகத்தனமாக நான் இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் ஆமாம் என்று தான் பதில்..
ஒவ்வொரு தாயும் கர்பமாகும் முன்னேயே தன் குழந்தையை நேசிக்க தொடங்கி விடுகிறார்கள்..ஒன்பது மாதம் சுமந்து பிறகு ரசித்து வளர்த்த பூ போன்ற குழந்தைகளை கொல்பவர்களை சும்மா ஒரு அறையில் பூட்டி வைப்பது தான் தண்டனையா..அது போதுமா?
ஏனோ எனக்கு புரியவில்லை..இப்படிப்பட்ட விஷயத்தில் சிலர் தான் கடுமையான தண்டனைகளுக்கு சப்போர்ட் ...நிறைய பேர் இந்திய நாட்டுக்கே உரிய அது இது என்று கடுமையான தண்டனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இப்பொழுதெல்லாம் என் மகள் பள்ளி சென்றாலே திரும்பி வரும்வரை ஒரு வித பயம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது..மக்களே உணருங்கள்...கடுமையான தண்டனையே இதற்கு தீர்வாகும்...
நாலு பேரை கண்டு நாட்பது பேர் திருந்துவார்கள்.ஒரு பயத்தினாலாவது தயங்குவார்கள்.
Sunday, 31 October 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இனஹ நியூசைப் பார்த்ததும் உனக்கு ஏற்பட்ட உணர்வுதான் எனக்கும் ரூபி :(. இப்படிப்பட்ட்வனுங்களை கோர்ர்ட்டு கேசுன்னு இழுத்தடிக்காம அந்த பிஞ்சுகளை கொலை செய்தது போன்றே தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்லவேண்டும். அதற்கு முன் சிங்கப்பூர் ஸ்டைலில் பிரம்படி கொடுக்கணும்.
நிஜம் தான் கவி...எனக்கு முழுக்க முழுக்க இதே நினைவு தான்..வெளியே கூட போய்ட்டு வந்தேன் ஆனால் மனதை திசை திருப்பவே முடியவில்லை.
குழந்தைகளை காணவில்லை என்றால் சீக்கிரமே போலீசில் தகவலை சொல்வது நல்லது.நாம் பொதுவாகவே குடும்பத்தினர் தோழிகள் என தேடியபிறகே போலீசை நாடுவோம் அதற்குள் கயவர்களுக்கு நிறைய நேரம் கைய்யில் கிடைக்கும்.
பள்ளி வாகனத்திலேயே குழந்தைகளை அனுப்பலாம்...ப்ரைவேட்டாக ஓட்டும் வாகனக்களை நம்பாமல் இருப்பது நல்லது.
சின்ன பிள்ளைகளுக்கு கூட அடிக்கடி strangers யாராக இருந்தாலும் உடன் செல்ல கூடாது கத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கலாம்..குழந்தைகளுக்கு தெரியாது தான் இருந்தாலும் இம்மாதிரி சம்பவங்களை நாம் மட்டும் படித்து கண்ணீர் விட்டு விட்டு போகாமல் குழந்தைகளுக்கு அவர்களை பாஷையில் சொல்லி புரியவைக்கலாம்.
இப்பலாம் பெண் ஆண் வித்யாசம் எல்லாம் இல்லை..ஆண்பிள்ளைகளை கூட சும்மா விடாத ரெண்டுங்கெட்டாங்கள் இப்ப பெருகிகிட்டே வராங்க...
இதை நானும் நண்பர்கள் வீட்டில சன் நியூசில் பார்த்தேன்... குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களை குறைக்க சட்டம் இன்னும் கடுமையாக்கப்படணும். ஒரு முறை குற்றம் செய்தால் அந்த நபர் பற்றி எல்லா இடங்களிளும்( போலிஸ் ஸ்டேஷன்/ பள்ளிகள்/ஹாஸ்பிடல்) தெரியபடுத்தி இருக்கணும்.
இங்க ரொம்பவே அதிகம் ஆனா சட்டங்களும் கடுமையா இருக்கு.
குழந்தைகள் 13 வயசு வரை வீட்டில் பெரியவர்கள் துணையுடன்/பராமரிப்பு எல்லா நேரங்களிலும் இருக்க வேண்டும். All children under 13 has to be under the parental/trusted adult supervision at all the times with no exception. All the kids of age 5 and above the parents need to tell them abt good touch / bad touch . Avoid all or any un solicited company at home. To avoid kids being targeted sexually by any relatives , make sure the kids are under your supervision when you are visiting . நாம குழந்தைகளுக்கு எப்படி சுற்றுப்புறத்தில் நடப்பதை கவனிக்க சொல்லி கொடுக்க வேணும். Teach kids to be aware of the surroundings .
இலா எல்லாவற்றையும் குழந்தைகளிடம் சொல்லி புரிய வைத்தாலும் சில நேரங்களில் அவர்களால் எதுவுமே செய்யமுடியாமல் போய்விடுகிறது.பாவம் குழந்தைகள்தானே அவர்களும் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க மாட்டாங்க. பெற்றோர்கள்தான் கூடுதல் கவனமா இருக்கனும்.
இந்த மிருகங்களை தூக்கில் போடணும்னு தீர்ப்பு வரும்போது மனித உரிமைன்னு ஒரு கூட்டம் கோஷம் போட்டுக்கிட்டு வரும். அதுங்களையும் சேர்த்தே தூக்குல போடணும். அத்தனை கோபம் வருது :((
Post a Comment