Pages

Tuesday, 7 December 2010

நேரடி ஒளிபரப்பு

எனது உறவினர் ஒருவர் இங்கு தான் இருக்கிறார்...ஆனால் குடும்பம் ஊரில் இருக்கிறது..அவர் எனக்கு அத்தை முறை..அத்தையின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து மூன்று நாளே ஆனதால் வழக்கம் போல அப்பா அம்மாவால் வந்து இரவு படுக்கமுடியவில்லை.
   அவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒன்று வயது 3 இன்னொன்று வயது 2..அன்று இரவு வீட்டை சுத்தப்படுத்தி குப்பையை கொட்டலாம் என பின்கதவை திறந்து வெளியில் போயிருக்கிறார்..கொட்டிவிட்டு திரும்பினால் இருட்டில் எதுவோ ஒரு உருவம் சுவற்றோடு ஒட்டி கிடக்கிறதாம்..இவர் நல்ல அருகில் சென்று உற்றுபார்த்ததும் ஒரு மர்மநபர் இவரை பாய்ந்து வீட்டினுள் தள்ளியிருக்கிறார்..இவர் ஒரே கூச்சலும் போட்டு அடுப்பறையில் கிடைந்த பாத்திரங்கள் முறம் கொண்டு மர்மநபரை அடிக்க அக்கம் பக்கத்தினரும் சத்தம் கேட்டு ஓடிவர மர்மநபர் தப்பி ஓடிவிட்டாராம்.
இந்த கதையை கேட்டும் நான் ரொம்ப சிரித்தேன்..ஏன்னா கேக்கிறீங்க?இத்தனையும் நடக்கையில் இரண்டு குட்டீஸ்களும் டிவியில் ஸ்டன்ட் சீன் பார்ப்பது போல்  பயங்கரமா சிரித்துக்  கொண்டிருந்தார்களாம்:-D

Monday, 6 December 2010

செருப்பும் நானும்

   நானும் இருக்கேன் எனக்கொரு செருப்பும் இருக்கு...ப்ரவுன் கலரும் பொன்னிறமும் கலந்தது போல் மேலே வெள்ளை கட்கள் பதித்த செருப்பு..வாங்கி இரண்டு வருடம் ஆகிறது..இந்த இரண்டு வருடமும் கிட்டத்தட்ட எல்லா நாளும் அதனை தான் உபயோகித்திருப்பேன்.
   இதிலென்ன விஷேஷம்னா கேக்கறீங்க?நம்மூர் காசுக்கு சுமார் 400 ரூபாய்க்கு வாங்கினது அது..இங்கு அது ரொம்ப சீப் என்று சொல்லலாம்..அது இன்னொரு நாலு வருஷத்துக்காவது தாங்கும் என நினைக்கிறேன் ..ஆனால் எல்லாரும் திட்ட ஆரம்பித்து விட்டார்கள் வேற செருப்பே இல்லையா என்று.
   நானும் இதை விட நாலு மடங்கு காசு போட்டு செருப்பு வாங்கினேன் எனக்கு இந்த சவுகரியம் கிடைப்பதே இல்லை...ஒன்னு பின்பக்கம் காலில் தேய்ந்து தோல் உரியும் இல்ல எதாவதொரு விரல் அமுங்கி வீங்கும்..அதுவுமில்ல எது மேலயோ ஏறி நடக்கிற மாதிரி வினோதமா இருக்கும்..இப்ப எனக்கு சவுகரியமா நடக்கனும் ஸ்டைலா பெரிசுன்னு அதை கழட்டி போட்டுட்டு என் ராசியான செருப்பையே போட்டுக் கொள்வேன்.
  என் காலுக்கு எப்ப ஒரு விடிவுகாலம் வருமோ தெரியாது..என் காலுக்கேத்த சவுகரியமான செருப்பு எப்ப மார்க்கெட்டில்  வருமோ என்று காத்துக் கொண்டே இருக்கேன்.

Thursday, 2 December 2010

இங்க்லிபீஸ்

மகளுக்கு ஜலதோஷம் ..அப்பா மகளிடம் சரி நமக்கு வெளிய ஃப்ரெஷ் ஏர் வாங்கிட்டு வருவோம் என்றார்..இருவரும் கிளம்பினார்கள் மகள் வெளியில் போய் "அம்மா நாங்க ஏர் ஃப்ரெஷ்னெர் "வாங்க போகிறோம் என்றாள்..ஒருகணம் நான் முழித்தாலும் பிறகு விளங்கியது சுத்தமான காத்து வாங்க போறங்களாம்:-)