Pages

Tuesday, 17 May 2011

சிக்கன் ப்ரெட்

எனக்கு பிடித்தமானது சமையல் நிகழ்ச்சிகள் தான்..எங்கு போனாலும் எதை பார்த்தாலும் சமையல் என்ற அம்சம் அங்கு இருந்தால் ரொம்ப சுவாரசியமாக கேட்பேன் தெரிந்து கொள்வேன் அடுத்தது செய்து பார்த்து விட்டு தான் மறு வேலை..டிவி என்ற ஒன்றை நான் போடுவதாக இருந்தால் அது அதிகம் மசாலா சானலில் காணும் சமையல் நிகழ்ச்சிகள் தான்..அதில் செஃப் ஷிரீன் அன்வர் ஒரு முறை இந்த சிக்கன் ப்ரெட் செய்து காட்டினார்..அதில் சில மாற்றங்களோடு எனக்கு பிடித்த சுவையில் செய்து பார்த்துவிட்டேன்.நீங்களும் செய்து பாருங்கள்.


விளக்கமாக கட்டம் கட்டமாக புகைப்படம் எடுக்க நேரமும் இருக்கவில்லை பொறுமையும் இருக்கவில்லை..அதனால் வரைந்த ஒரு படத்தையும் போட்டு விடுகிறேன் புரியுதா பாருங்க





தேவையான பொருட்கள்
ப்ரெட் செய்ய
மைதா - 2 கப்
பால் பொடி - 3 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
முட்டை - 1
எண்ணை - 2 ஸ்பூன்
யீஸ்ட் - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - குழைக்க

மைதாவில் பால் பொடி,உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து நடுவில் ஒரு குழி செய்து வைக்கவும்..
யீஸ்டை வெதுவெதுப்பான 2 ஸ்பூன் பாலில் கரைய விடவும்.
பின்பு மாவில் எண்ணையில் கலக்கிய முட்டையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து குழைக்கவும்
சப்பாத்தி மாவு போல் குழைத்த பின் ஈரமான துணியை போட்டு மூடி இரண்டு மணிநேரம் பொங்க விடவும்

இப்போது சிக்கன் ஃபில்லிங் தயாரிக்க
சிக்கன் - 250 கிராம் எலும்பில்லாத சிக்கனில் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து ஊறவைத்து விடலாம்
வெங்காய்ம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி&பூண்டு - பொடியாக நறுக்கியது 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி இலை - சிறிதளவு நறுக்கி வைக்கவும்

இப்போது எண்ணை கொஞ்சமாக காயவைத்து வெங்காயம் பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை வதக்கவும்
பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
அதில் ஊறவைத்த சிக்கனும்,கரம் மசாலா தூளும்,மிளகு தூளும் சேர்த்து வதக்கி வேக விடவும்
நன்கு வெந்ததும் தீயை அணைத்து மல்லி இலை தூவி இறக்கவும்
பின்பு சிக்கனை நல்ல கனமான மேஷர் கொண்டு உடைத்து விடவும்
இக்கலவையை சூடு ஆற விடவும்

இப்பொழுது சிக்கன் ப்ரெட் தயாரிக்க
  • மாவினை முதலில் நாலு அல்லது ஐந்து பாகங்களாக பிரித்து உருட்டி வைக்கவும்
  • அதே போல் சிக்கனையும் பாத்திரத்திலேயே ஐந்தாக பிரித்து வைக்கவும்
  • மாவினை பலகையில் ஓவல் வடிவத்தில் சப்பாத்தியை விட சற்று கனமாக தேய்க்கவும்
  • பின்பு சிக்கனை நடுவில் நீளமாக வைக்கவும்
இரு ஓரங்களிலும் ஒவ்வொரு சென்டிமீட்டர் விட்டு விட்டு கீரல்கள் கொடுக்கவும்
கத்தியில் எண்ணை தொட்டால் அழகாக கீரலாம்
  • பின்பு முதலில் உள்ள இரண்டு கீரிய ரிப்பன் போன்ற மாவினை ஒன்றன் மேல் ஒன்றாக வருமாறு வைக்கவும்
  • அப்படியே ஒவ்வொரு கீரிய மாவினையும் இழுத்து இழுத்து மூடவும்.கடைசி ஓர மாவினையும் டைட்டாக அழகாக மூடி விடவும்
  • இப்படியே ஐந்து உருண்டைகளையும் தயாரித்தபின்பு மேலே கலக்கிய முட்டை சிறிது தேய்த்து விட்டு வெள்ளை எள் சிறிது தூவ அழகாக இருக்கும்
(வெள்ளை இல்லாமல் போகவே கறுப்பு போட்டேன்)
  • பின்பு முற்சூடு செய்யப்பட்ட அவனில் 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
சுவையான அழகான பார்த்தால் கடினமாக தோன்றும் ஆனால் எளிமையான சிக்கன் ப்ரெட் ரெடி.
விருந்தினர்களுக்கு கொடுத்து நீங்களே செய்தது என்றால் அசந்து போவார்கள்
:-)

Thursday, 21 April 2011

எடை குறைய - 2

வாங்க வாங்க எல்லாரும் முட்டி மோதாம பாத்து லைன் ல வந்து படிங்க..

   என்ன தான் செய்தாலும் எடை குறையவே மாட்டேங்குது..செய்ய நேரமே இல்ல இதெல்லாமே வெறும் நொண்டி சாக்கு தான்..முதலில் குறைத்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்து விட வேண்டும்..கணவன்மார்களும் மனைவிகள் புறம்போக்காக வளரும் வரை விட்டு வைக்காமல் கொஞ்சம் எடை போடும்போதே உடம்பு ஏறுது கம்மி பண்ணிக்க என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து கொண்டே இருங்க அப்ப தான் ஒரு ஆர்வமும் ரோஷமும் வரும்
   எனக்கு எதாவது கொரிச்சுட்டே இருக்கனும் எப்படி வாயை கட்டுறது என்கிறீர்களா...யார் சொன்னது சாப்பிடவே கூடாதென்று லைட் பாப்கார்ன் சாப்பிடலாம்,கொஞ்சம் வால்னட் சாப்பிடலாம்,கொஞ்சம் தர்பூசணி விதை வாங்கி சாப்பிடலாம்.நேரம் போவதே தெரியாது உலிச்சுக் கிட்டே நேரம் போகிடும்.இல்ல உங்களுக்கு இனிப்பாக சாப்பிட ஆசையா 1 பவுல் அவல் வெல்லம் தேங்காய் துருவல் கலந்து தாரளமாக சாப்பிடலாமே.இது சத்தானதும் கூட.
  அவல் மட்டுமல்ல ராகி சேமியா கம்பு சேமியா இதையெல்லாம் கூட வெல்லம் தேங்காய் கலந்து சாப்பிடலாம்..
    கை கால் உடம்பு வலிக்க உடற்பயிற்ச்சி செய்து நட நடையோன்னு நடந்து வெய்யிங் மெஷினில் தினமும் ஏறி நின்று பத்து நாள் பார்த்து விட்டு இது இறங்காது என்று நொந்து கொள்ள கூடாது..உடம்பு இளைக்க முதலில் உடம்புக்கே புரிய வேண்டும்...ஓ அம்மா நம்மை உருக்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நம்ப பருப்பு வேகாது என்று உடம்பு புரிந்து கொள்ள சில நாள் எடுக்கும்..மெல்ல குறைய ஆரம்பித்தால் அதன் பிறகு சுலபம்..அதே அளவு உடற்பயிற்ச்சியும் உணவு கட்டுப்பாடும் சரியான அளவு தூக்கமும் இருந்தாலும் நிச்சயமாக போக போக குறையும்
  உடம்பு குறைகிறபொழுது எடையை மட்டும் பார்க்காமல் முகத்தையும் கண்ணாடியில் பார்க்க வேண்டும்..சிலர் வி எல் சிசி அது இது போய் குறைப்பார்கள் உடம்பு தான் போயிருக்கும் ஆனால் எல்லாரும் என்ன ஆச்சு உனக்கு எதாவது  உடம்புக்கு ப்ரச்சனையா என்று கேட்கும் அளவுக்கு முகத்தில் ஒரு களையே போயிருக்கும்.
  எடையை குறைக்கும்பொழுது கவனமாக குறைக்க வேண்டும்..தினசரி நிறைய பழவகைகள் பச்சை சாலட்கள் சாப்பிட பழ வேண்டும்..இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் குறிப்பாக காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.நிச்சயமாக முகம் வாடாது மாறாக முகம் பொலிவு பெறும்..கூடவே வாரம் ஒரு முறை தலைக்கு உடம்புக்கு எண்ணை தேய்த்து குளித்தால் பளபளவென ஆகி விடலாம்.
  எனக்கு திருமணமாக போகிறது அல்லது ஒரு விசேஷத்துக்கு போகனும் நான் என்னென்ன செய்யலாம் என்று கேட்பவர்கள் தினமும் நிறிய பழவகிகள் சாப்பிடுங்கள் நிறைய தண்ணீர் குடியுங்க போதும்..சருமம் அவ்வளவு அழகாக இருக்கும்
   தினசரி உணவில் ஒரு வேளை காய்கறி சாலட்டும் ஒரு வேளை பழங்களும் சாப்பிட பழக வேண்டும்..உடம்பை குறைக்க புதிய புதிய உணவுகளும் வித்யாசமான குறிப்புகளும் தேவையே இல்லை.
  சாதத்துக்கு பதில் சப்பாத்தி சாப்பிடலாம்..எந்த குழம்பும் பொரியலும் தாராளமாக சாப்பிடலாம்...இதில் கவனிக்க வேண்டிய ஒன்று எதை சமைத்தாலும் ஒரே ஸ்பூன் எண்ணையில் சமைக்க பழக வேண்டும்.
   நல்ல பெரிய அடி கனமான நான் ஸ்டிக் பேன் வாங்கிக் கொண்டு குறைந்த எண்ணையில் சமைக்க பழகிக் கொள்ளுங்கள்.எப்பவுமே நாம் பிறந்து வளர்ந்தபொழுது எதை சாப்பிட்டு பழகினோமோ அது தான் கடைசி வரை நம் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளும் என்பது என்னுடைய நம்பிக்கை
  தினசரி ஒன்றிரண்டு பேரீத்தம்பழம் சாப்பிடலாம்.முன்று பாதாம் பருப்பு சாப்பிடலாம்.கொரிக்க எப்பவுமே எதையாவது வீட்டில் வைத்துக் கொள்ளலாம்..ப்ரவும் ரஸ்க் கூட வாங்கி வைத்து சாப்பிடலாம்.
   மல்லாந்து தரையில் படுத்துக் கொண்டு கைகள் இரண்டையிம் இடுப்போடு நேராக தரையில் வைத்து மூச்சு இழுத்து  கால்கள் இரண்டையும் உயர்த்தி சைக்கில் ஓட்டுவது போல் க்லாக் வைஸ் ஆன்ட்டி க்லாக்வைஸ் நாலு நாலு முறை சுழற்றி கீழே கலை இறக்கும்பொழுது மூச்சு விடவும்.இந்த பயிற்சி கூட உடம்பு குறைய உதவும்...
  
  

Saturday, 16 April 2011

ஸ்கூலுக்கு போக மாட்டேன்

    பிள்ளைகள் புதிதாக ஸ்கூலுக்கு போனாலும் சரி ஒவ்வொரு வகுப்பு மாறும்பொழுதும் சரி ஸ்கூலுக்கு போக சில நாள் மறுக்கும்.
   ஒரு வருடம் முழுக்க ஒரே டீச்சரிடம் இருந்து பழகி நல்ல ஒட்டி விட்டால் பிறகு அடுத்த டீச்சருடன் பழகி வரும் வரை கஷ்டம் தான்..குழந்தை போக மறுத்தால்
1)ஒரு வருடம் முடியும் தருவாயில் அடுத்த வருடம் புது நல்ல டீச்சர் வருவார் என அப்பவே சொல்லி வைக்கலாம்
2)புதிய டீச்சரிடம் போய் குழந்தையின் முன்னிலையிலேயே பேசி சமாதானப்படுத்தி நல்ல கவனிக்க சொல்லி விட்டு வரலாம்..அது அவர்களு சமாதானமாக இருக்கும்
3)சமத்தாக போய் விட்டு வந்தால் அவர்களுக்கு பிடித்தமான எதாவதொன்றை வாங்கி தருவதாக சொல்லலாம்
4)முதல் சில நாட்கள் பிள்ளைகள் டீச்சருடன் பழகும்வரை அவர்களுக்கு பிடித்தமானதாகவே லன்ச் பாக்சில் கொடுத்து விடலாம்
5)டீச்சருக்கு ஸ்டார் ஸ்டிக்கர் கொடுத்தனுப்பி தினசரி ஒன்றை சில நாளுக்கு  பிள்ளைகள் கைய்யில் ஒட்டிவிடுமாறு கேட்டுக் கொள்ளலாம்.
6)நாளை போக மாட்டேன் என்று சொன்னால் சதா என்னேரமும் சமாதானப்படுத்திக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருக்காமல்..சமத்தா போய் வாங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது என்று வேறு நல்ல விஷயங்கள் அல்லது கதைகள் சொல்லி திசை திருப்பி விட வேண்டும்..அதையே பேச பேச பீதி அதிகமாகும்

இதெல்லாம் செய்ய செய்யவே புது க்லாசும் அவர்களுக்கு பழகிவிடும் சமத்தாக போவார்கள்

 

Wednesday, 13 April 2011

பிரியாணி

பிரியாணி சமைக்க மட்டும் என்றுமே புதிதாக அரைத்த இஞ்சி பூண்டை சேர்க்கவும்..அரைப்பதை விட குட்டியாக சாப்பரில் சாப் செய்தால் பிரியாணியின் சுவை கூடும்..பழைய இஞ்சி பூண்டு பேஸ்ட் பிரியாணியின் சுவையை அப்படியே மாற்றிவிடும்

Tuesday, 12 April 2011

பிறந்தநாள் அலங்காரம்

குழந்தைகளின் பிறந்தநாளுக்கு மேஜையில் விரிக்க சைனா சில்கில் விலை குறைவாக துணி கிடைக்கும் அதனை குழந்தைகளுக்கு பிடித்தமான பின்க்,ஸ்கை ப்லூ,பர்பில்,இளம் பச்சை,மஞ்சள் போன்ற நிறங்களில் வாங்கி ஓரங்களை சுருட்டி கீழ் பக்கம் சீலிங் க்லிப்ஸ் கொண்டு கட்டி வைத்துக் கொண்டால் பார்க்க அழகாக இருக்கும்
  பெரியவர்களுக்கு கூட பொன்வண்ண நிறத்தில் ,சாக்கலேட் கலரில் விரித்தால் அழகாக இருக்கும்.இது சமீபத்தில் எனது தோழியின் மகள் பிறந்தநாளில் பார்த்தேன்.

Wednesday, 23 March 2011

ப்லட் க்லூகோஸ்

ஒரு வயதான பாட்டி  சொன்னார் வருத்தமாக
"என்ன செய்றதுன்னே தெரியலம்மா சக்கரை ரொம்ப கூடுதலா இருக்குன்னு டாக்டர் சொல்றார்"

"எத்தனைங்க இருக்கு"

"அரை கிலோவுக்கு நூறு கிராம் தான் கம்மியாம்"

இது கேட்டு நான் அடக்கி அடக்கி சிரித்து என் அம்மா மண்டையில் குட்டியது மறக்கவே முடியாது

Friday, 18 March 2011

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த

ஒரு சிறிய டப்பில் தண்ணீர் முழுக்க நிரப்பிக் கொண்டு கண்கள் இரண்டையும் நன்றாக முழிக்கத் திறந்து நாக்கையும் நீட்டி மூச்சை உள்ளிழுத்து டப்பிலுள்ள தண்ணீரில் முகத்தை மூழ்கச் செய்து கண்களை இடது வலது என பார்க்க வேண்டும்..மூச்சு விடும்பொழுது முகத்தை வெளியே எடுத்து விட வேண்டும்.எவ்வளவு மூச்சு பிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் வைக்கலாம்.இது செய்ய கொஞ்சம் கடினம் ஆனால் கண்டிப்பாக சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.இது ஒரு யோகாசன பயிற்சியாளர் சொல்லிக் கொடுத்தது.
    ரொம்ப தூக்கம் வர்ரவங்களுக்கும் இதே டிப்ஸ் தான்..நீங்க அப்படியே டப்புக்குள்ளிருந்து அந்த நாக்கு நீட்டி கண்ணை உருட்டுற முகத்தை கற்பனை செய்யுங்க..தூக்கம் போயிடும்

Wednesday, 2 March 2011

வண்ணங்கள் எண்ணங்கள்



இதெல்லாம் சின்ன வயதில் சுமார் பதிமூன்று முதல் பதிநாறு வயதுக்குள் வரைந்த படங்கள்.இன்று பொட்டியை க்லீன் பண்ணலாம் என்று வந்தேன் ..பழசெல்லாம் கண்ணில் படவும் உங்களுக்கு காண்பிக்கலாமே என்று ஒரு யோசனை

இதையெல்லாம் பல நாட்களுக்கு பிறகு பார்க்கையில் அந்தந்த கட்டத்தில் நடந்த பல சம்பவங்களும் மனதில் வந்து போகும்..அழகிய பருவம்




 
கீழே இருப்பது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும்பொழுது அம்மா வரைந்து காண்பித்தது..இதன் பின் தான் எனக்கும் ஆர்வம் வந்தது என்று நினைக்கிறேன்





Tuesday, 1 March 2011

குழந்தைகள் வீட்டில் சோஃபா

குழந்தைகள் உள்ள வீட்டில் சோஃபாவுக்கு வாய் இருந்தால் அழும்..அந்தளவுக்கு கொட்டோ கொட்டோ என்று பால் ,தண்ணி,சாதம் இன்னும் யூரின் இல்ல அதுக்கு மேலும் பலதும் ஆகும்.தூக்கி போட முடியுமா?
சோஃபா வாங்கும்பொழுது ரிமூவபிள் கவர் உள்ளதாக பார்த்து வாங்கவும்..அல்லது கவர் அடித்து போடவும்.அதன் அடியில் மேட்ரெஸ் ப்ரொடெக்டர் குஷனுக்கு அளவாக வாங்கி விரித்த பின் கவரை போடலாம்..நல்ல அழுக்கு ஆகுகையில் எடுத்து துவைக்கலா.சோஃபா பாழாகாமல் சுத்தமாக இருக்கும்.

கூடுமானவரை லெதர் சோஃபா வாங்கலாம்

Friday, 25 February 2011

பால் புட்டியில்

குழந்தைகளின்  பால் புட்டியில் பாலை ஊற்றி விட்டு இறுக்க அடைத்து குழந்தைக்கு கொடுக்க கூடாது..எந்தளவுக்கு இறுக்குகிறோமோ அந்தளவுக்கு குழந்தை உரிஞ்சி குடிக்க கஷ்டப்படும் அது  சம்ம்ந்தமாக சுவாசப்பரச்சனைகள் வரும் என்கிறார்கள்.
  சும்மா லேசாக ஒரு திருப்போடு மூடினால் போதுமானது

Wednesday, 23 February 2011

உடம்பு குறைய

 எனக்கு தெரிஞ்சதை சொல்ல போகிறேன்.வெற்றிகரமாக எடையை குறைத்துக் கொண்டிருக்கிறேன்....எப்படி எப்படி எப்படி என்று கேட்பவர்களுக்காக இதோ சில டிப்ஸ்

1)நேரா நேரத்திற்கு உணவை சாப்பிட வேண்டும்.
2)காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்..மதியத்திற்கு ஒரு அளவாக சாப்பிடவும்.இரவில் ரொம்ப கம்மியாக சாப்பிடவும்..இரவு கூடுமானவரை நான் வெஜ் தவிர்க்கவும்..அப்படியே எப்பவாவது பார்ட்டி அது இது என்றால் சாப்பிட்ட பின் 2 மணிநேரம் கழித்து கொஞ்சம் நடையோ உடற்பயிற்ச்சியோ செய்து விட்டு தூங்க போகலாம்
3)தண்ணீர் நிறையளவில் குடிக்க வேண்டும்..இப்படி பழக்கமில்லாதவர்கள் முதல் சில நாள் கஷ்டப்பட்டு அலாரம் வைத்தாவது குடிக்கலாம்..ஒரே வாரத்தில் தாகம் அந்தளவுக்கு வந்திருக்கும்..பிறகு நம்மையறியாமல் தண்ணீர் உள்ளே போகும்
4)ஒரு போதும் முழுக்க முழுக்க டயட் கன்ட்ரோல் என்று எதையுமே தொடாமல் இருக்க கூடாது..இது ஒரு வித வெறுப்பை உண்டாக்கும்..விரும்பியதை ஒன்றிரண்டு ஸ்பூன் வைத்து தினமும் சாப்பிடலாம்
5)ஐஸ் க்ரீம் ,சாக்கலேட் போன்றவற்றை தவிர்க்கவோ வாரம் ஒருமுறை சாப்பிடவோ செய்யலாம்
6)தினம் இரவு 1 கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பட்டை பொடியை கொதிக்க வைத்து சூடாறியதும் தேன் கலந்து இரவு படுக்கும் முன் 1/2 கப்பும் மீதத்தை காலை எழுந்ததும் வெறும் வயிற்றிலும் குடிக்கவும்..இது உடல் வேகமாக இளைக்க உதவும்
7)உடம்பு குறைக்க போகிறேன் என்று நாலு பேரிடம் சொல்லி வைக்கவும்..இதனால் அவர்களை அடுத்த முறை பார்க்கையில் குறைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்
8)ட்ரெஸ்ஸை 1 இன்ச் அதிகமாக கூடி தைக்க சொல்லாமல் சரியான அளவுக்கு கொடுக்கவும்
9)உடம்பு முதல் சில மாதங்களுக்கு தான் குறைக்க கஷ்டம் கொஞ்சம் குறைக்க தொடங்கிவிட்டால் பிறகு பழைபடி ரொம்பவும் கடுமையான உடற்பயிற்ச்சி கூட வேண்டாம் தாமாக உடம்பு குறையும்
10)இரவில் என்றுமே லைட்டாக உணவாக சாப்பிடவும்.காலையிலும் கூடுமானவரை ஓட்ஸ் ,சத்து மாவு,கார்ன் ஃப்லேக்ஸ் இது போல் சாப்பிடவும்..மதியம் மட்டும் 1 கப் சாதமும் மீதம் விதவிதமாக பொரியலோ குழம்போ சேர்த்து சாப்பிடலாம்..மீன் தாராளமாக சாப்பிடலாம்..சிக்கன் வாரம் ஒரு முறையும் சாப்பிடலாம்..மட்டனை கூடுமானவரை குறைப்பது நல்லது

11)குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய முடியவில்லையே என்று வருத்தம்  வேண்டாம்.அவர்களோடு எண்ணி,பாடிக் கொண்டே ஸ்கிப்பிங் செய்வதும் படுத்துக் கொண்டு முட்டியில் அவர்களை வைத்து முட்டியை மடக்கி மடக்கி தூக்கி விளையாடுவது அவரகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.உடம்பும் மெலியும்
12)துணி கைய்யால் துவைப்பது,தரை துடைப்பது நல்ல எக்செர்சைஸ்..
13)மூச்சுப் பயிற்ச்சி சிறந்த ஒன்று.அதற்கு முறையாக பயிலவோ சில தளங்களை பார்த்து கற்றுக் கொள்ளவோ செய்யலாம்
14)பகலில் தூங்குவது நல்லது தான் ஆனால் வெறும் 30 நிமிடம் தான்..மனிக்கணக்கில் தூங்குவதை தவிர்க்கவும்
15)கூடுமானவரை சும்மா இருக்காமல் எதாவது வேலையில் ஈடுபடவும்..முக்கியமாக டிவி பார்ப்பதை குறைக்கவும்..மெகா சீரியால் பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்
16நேரத்துக்கு தூங்க போய் நேரத்துக்கு எழுந்து பழகவும்

Friday, 18 February 2011

மனநோய்

 பிரசவத்திற்கு பின் வரும் டிப்ரெஸ்ஷன் கேள்விப்பட்டிருக்கிறேன்.சொந்தங்களில் பார்த்ததும் உண்டு..ஆனால் இவ்வளவு பயப்பட வேண்டிய விஷயம் என்று நினைக்கவே இல்லை.
  நேற்று எங்களுக்கு தெரிந்த உறவுக்கார பெண் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டது..முழுக்க முழுக்க டிப்ரெஷன் மட்டுமே காரணம் வேறெந்த ப்ரச்சனையும் இல்லாத சந்தோஷமான குடும்பம்
   குழந்தை பிறந்ததிலிருந்து வழக்கத்துக்கு மாறாக அதிக ஆத்திரம் கொள்வதும், அழுவதுமாக இருந்தது ..ஆனால் எந்த நேரத்தில் அதற்கு அப்படி தோன்றியதோ ஆள் இல்லாது போன நேரம் இப்படி செய்து விட்டது.
  இது நமக்கு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்,.நமது சொந்தபந்தத்தில் இப்படி யாருக்கேனும் இருந்தால் நிச்சயமாக நல்ல மனநலமருத்துவரிடம் காட்டி தக்க சிகிச்சை பெற வேண்டும்
  இப்படிப்பட்ட நேரத்தில் புகுந்த வீடு பழைய வீடு என சடங்கு சம்பிரதாயம் பார்க்காமல் நல்லபடியாக சிகிச்சை செய்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்
  இப்படிப்பட்டவர்கள் பிரசவமான பின் அதிக ஆத்திரம் கொள்வது,அழுவது,குழந்தையை கவனிக்காமல் இருப்பது,அல்லது குழந்தையை பற்றி அதிக பயம் கொள்வது,அனைவரிடமிருந்தும் ஒழுங்கி பேசாமல் இருப்பது,சம்மந்தமில்லாததை பேசுவது,இடம் பொருள் தெரியாமல் பேசுவது,தன்னம்பிக்கை இழந்தும் ஷக்தி இழந்தும் சோர்வாக காணப்படுவது,எதையோ பரிகொடுத்தது போல் சோகமாகவே இருப்பது,அவ்வப்போது காரணமில்லாமல் அழுவது,தூக்கமில்லாமல் தவிப்பது,சாப்பிட மறுப்பது,குழந்தையை அடிக்கவோ காயப்படுத்தவோ முயற்சிப்பது  போன்ற அறுகுறிகளை காட்டுவார்கள்..
 அதனால் இப்படிப்பட்ட எதுவேனும் தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
  எனினும் சாதாரண்மாகவே சிலருக்கு கோபமும் அழுகையும் இந்த சமயத்தில் அதிகமாக காணப்படலாம்.நாள் செல்ல செல்ல இம்மாதிரி அறிகுறிகள் கூடிக் கொண்டே வந்தால் நிச்சயமாக நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்

Tuesday, 15 February 2011

உணவு

நம்முடைய உணவு பழக்க வழக்கம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று..உணவு உறக்கம் சரியாக இருந்தால் பல பல நோயின் பிடியிலிருந்து தப்பலாம்.
  குறிப்பாக வயிறு சம்மந்தமான ப்ரச்சனைகள் பெரும்பாலும் தவறான உணவு பழக்கங்களால் வரும் வாய்ப்பு அதிகம்.
  அதனால் சிறு குழந்தைகள் முதலே உணவு விஷயங்களில் கவனமாக ஸ்ட்ரிக்டாக கடை பிடிக்க வேண்டும்..இந்த பதிவை எழுத தோன்றியதே இங்கு வெளிநாட்டு வாழ்க்கையில் அக்கம் பக்கத்து வீடுகளிலும் நாம் காணும் உணவு பழக்கவழக்கம் தான்.

இதில் ரொம்ப முக்கியமான ஒன்று காலை உணவு,,காலை உணவினை எக்க்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது.இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறிய குழந்தைகள் முதல் காலை உணவை தவறாமல் ஊட்டி பழக்க வேண்டும் என பிரபல மருத்துவர் சொன்னார்.
  ரொம்பவும் வயிற்றை நிரப்ப வேண்டும் என்றே இல்லை...ஒரு இட்லி அல்லது அரை இட்லியை கூட கொடுத்தாவது காலை உணவை ஊட்டி விட வேண்டுமாம்..குழந்தைகள் மறுத்தாலும் நாம் விடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து பழக்க வேண்டுமாம்...
  இங்கு பெரும்பாலும் குழந்தைகளோ பெரியவர்களோ காலை உணவு என்ற ஒன்றை பற்றி நினைப்பதே இல்லை...அப்படியே பட்டினியாக இருந்து மதியம் எதாவது கண்ட கண்ட திண்பண்டங்கள் அல்லது ஜன்க் ஃபுட் சாப்பிடுவது வழக்கமாக காண முடிகிறது.
  சமீபத்தில் எனக்கு தெரிந்த உற்வினர் பிள்ளைகள் ஒரே சிரித்து கொண்டு கிண்டலடித்து கொண்டிருந்தார்கள் எங்கள் க்லாசில் ஒரு பைய்யன் தினமும் சாதம் கொண்டு வருவான் என்று..இதில் சிரிப்பு என்ன வேண்டி கிடைக்கிறது என்றேன்...நாங்கல்லாம் சேன்ட்விச் மட்டுமே கொண்டு போவோம் அவன் சுத்த பட்டிக்காடு என்றார்கள்..இப்படி கெட்டுகிடக்கிறது காலம்.
  நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களால் உடல் ரொம்பவே கெட்டு போகிறது.இதனால் பின்னாளில் ரொம்பவே வேதனை தரக் கூடிய உடல் உபாதைகள் வந்து சேரும்
  சின்ன குழந்தைகளை ஜன்க் ஃபுட்டுக்கு பழக்கப்படுத்துவது நாமே தான்...ஒரு வயதில் எப்படியும் சாப்பிடுவார்கள் என்று சிறு வயதிலேயே பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கண்டகண்டதையும் குழந்தைகளுக்கு தருவது நாமே அவர்களது ஆயுளை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதற்கு சமம்.
   இயன்ற அளவு வீட்டில் தயாரித்து உணவுகளை கொடுக்கலாம்..நாம் சப்பிட்டு வளர்ந்த இட்லி,தோசை களை கூட இன்றைய பிள்ளைகளுக்கு ஏற்ற வகையில் அலங்காரப்படுத்தி பரிமாறலாம்.சிறு வயதிலேயே சத்தான உணவின் அருமையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் வளரும்போதும் அவர்களுக்கு மனதில் ஆழமாக பதிந்து நிற்கும்.
  அதனால் தாய்மார்களே தினமும் உங்கள் குழந்தைகளுக்கு 1/4 கப் கர்ன்ஃப்லேக்சையாவது நிர்பந்தித்து ஊட்டி விட்டு ஆரோகியமாக குழந்தையை வளர்க்கும் நிம்மதியோடு பள்ளிக்கு அனுப்புங்கள்
 

Sunday, 13 February 2011

குழந்தைகள் சாப்பிட மறுத்தால்



நீங்கள் வழக்கமாக கைய்யில் ஊட்டுவதாக இருந்தால் ஸ்பூனில் ஊட்டி பாருங்கள்..ஸ்பூனில் என்றால் கையால் ஊட்டி பாருங்கள்.
இந்த சின்ன மாற்றம் கூட சில குழந்தைகளை சாப்பிட வைக்க உதவும்

பழவகைகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பழவகையாக மெல்ல மெல்ல பழக்கலாம்..அதன் மேல் ஒரு விருப்பம் எழ முதலில் கொஞ்சம் இனிப்பு தூவி கொடுக்கலாம்..அதன் மேல் சின்ன சின்ன கலர் கலரான காக்டெயில் ஃப்ரூட் சாலட் ஃபோர்க்குகள் குத்தி கொடுக்கலாம்

Sunday, 6 February 2011

பெண்கள் தைக்கும்பொழுது


 பெண்களின் ப்லவுசில் ,சல்வாரில் என எல்லா ட்ரெஸ்ஸிலும் தோள் பக்கமாக ஒரு சின்ன வள்ளியை வைத்துக்  ஓரத்தில் ப்ரெஸ் பட்டன் வைத்துக் கொண்டால் உள்ளாடைகளை அதனுள் வைத்து பட்டன் போட்டு விடலாம்..போட்டது போட்ட இடத்தில் இருக்கும்.

Tuesday, 1 February 2011

மானங்கெட்ட மரமண்டைகள்

  சொன்னதையே சொன்னதையே திரும்ப நானும் சொல்கிறேன்..பல தளத்திலும் வெளியாகியிருந்தாலும் மக்களுக்கு அறிவு வருமா என்றால் இல்லவே இல்லை. பிள்ளைகளை வெக்கமில்லாமல் வளர்த்துவதால் பின்னாடி சூடு சொரணை இல்லாமலே இருப்பார்கள்..சின்ன குழந்தைகளாயினும் அடுத்தவர்கள் முன்னிலையில் உடுப்பில்லாமல் திரியக் கூடாது என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி வைக்க வேண்டும்..சிலர் வீட்டில் யார் இருந்தாலும் சரி ஒன்னுமில்லாமல் குழந்தைகளை திரிய விடுவார்கள்.
   இன்று உஷாராக இருந்தாலே அங்கங்கே மறைவாக கேமராவில் வீடியோ பதிவு செய்வது நடக்கிறது இதில் வெக்கமும் இல்லாமல் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்..குறிப்பாக வெக்கமில்லாத அம்மாக்களை பார்த்து வளரும் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் வாய்புகள் ரொம்பவே அதிகம்.
   சமீபத்தில் ஒரு பிரபல துணிக்கடைக்கு குழந்தைகளுக்கு துணியெடுக்க போயிருந்தேன் அங்கு ஃபிட்டிங் ரூமில் வெளியே ஒரு ஆளை நியமித்திருந்தார்கள்...அந்தம்மா வெளியில் காவல் நின்று கொண்டிருந்தது.நான் மகளின் ட்ரெஸ் போட்டு பார்ப்பதற்காக ஃபிட்டிங் ரூம் போக உள்ளே நுழைந்ததும் சரியான எரிச்சல் வந்தது.அந்த காவல் பெண்ணை தாண்டி உள்ளே போனதும் வரிசையாக பல பல குட்டி உடைமாற்றும் ரூம்கள்..அதில் இரு ரூமில் பெண்கள் கதவை அடைக்காமலேயே வெளியே  நிற்கும் அம்மாக்கள் அத்தைகளுக்கு போட்டு காட்டிக் கொண்டிருந்தார்கள் அங்கு சின்ன பிள்ளைகளும் அம்மாக்களின் இந்த கோலத்தை பார்த்துக் கொண்டிருந்தது .அட்லீஸ்ட் ஒரு கதவையாவது அடைத்து வைக்கலாம்..என் மகள் என்னிடம் "அய்யே "என்று சொல்லி சிரித்தாள்..சின்ன குழந்தைகளுக்கு தெரியும் இந்த வெக்கம் கூட இந்த பெண்களுக்கு இல்லையே என்று நொந்து கொண்டேன்.அதுவும் சமீப காலமாக இவ்வளவு படித்தும் கேட்டுமா இப்படி என்பதை நம்பவே முடியவில்லை.
   வெளியே வந்துவிட்டு அடுத்த துணிகளை பார்த்துக் கொண்டிருக்கையில் தான் மேலும் எனக்கு பயம் கவ்விக் கொண்டது..காவல் பெண் சில நிமிடங்களுக்கு எங்கோ சென்று விட்டது..எனக்கு உள்ளுக்குள் பக் பக் என்று இருந்தது..எதாவது ஆம்பிளைகள் தெரியாமல் கதவை திறந்தால் என்னவாகும் என்று நினைத்தேன்.
   ஆண் டெயிலர்கள் அழகாக தைப்பார்கள் என்று அக்குவேர் ஆணிவேறாக உங்கள் ப்லவுசின் அளவுகளை சொல்லி தைக்ககொடுப்பதை கேட்கவே அசிங்கமாக இருக்கிறது.அம்மாமார்களிடம் சொல்லவே கூச்சப்படும் விஷயங்களை ஒரு டெயிலரிடம் எந்த ஒரு வெக்கமுமில்லாமல் எப்படி இவர்களால் சொல்ல முடிகிறது?
   ஒரு அம்மா டெயிலரிடம் தன் மகளுக்கு பட்டுபாவாடை தைக்க வந்திருந்தார்.சுமார் 8 வயதுடைய குழந்தை அது.பாவாடையின் சட்டைக்கு திறந்த ஜன்னல் கழுத்து வேண்டும் என்றும் நல்ல இறங்கி தைக்கவும் சொன்னார்..நான் எதிர்பார்க்காதபடி டெயிலரே ஏங்க அது இந்த வயசுக்கு நல்லா இருக்காதுங்க..குழந்தைங்க இப்ப அப்படியெல்லாம் போட்டா அசிங்கமாக இருக்கும் என்று சொன்னார்..எனக்கு உள்ளுக்குள் ஒரே சந்தோஷம்.
  என்று தான் திருந்துவோம்?
 பெண்கள் சுடிதார் அணிகையில் தயவு செய்து உள்ளே உள்ளாடை அணியவும்...சேலைக்கு ப்லவுஸ் தைக்கையில் கணமான நிழலடிக்காத துணிகளாக வாங்கவும்...நிச்சயமாக உங்களுடைய உள்ளாடைகள் வெளியே தெரிவது யாரையும் கவருவதில்லை மாறாக ரொம்பவே அசிங்கமாக இருக்கிறது..இருசக்கர வாகனங்களில் சேலை கட்டி பயனிக்கும் பெண்கள் கட்டாயம் உடை சரியாக இருக்கிரதா என்று சரிபார்க்கவும்..கொஞ்சம் இறக்கமாக தைக்கவோ சேலை கொண்டு மறைக்கவோ செய்யலாம்..இல்லையென்றால் பின்னாடி வரும் ஆட்டோக்காரன் மாட்டிவண்டிக்காரன் கூட கேவலமாக தான் பார்ப்பான்

Monday, 17 January 2011

உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணிட்டு பேசுங்க சார்

    ஏன்யா டிவி சானல் எல்லாம் வந்து எத்தன வருசமாகுது..சானலுக்கு கூப்பிட்டு பேசனுமா டிவி வால்யுமை குறச்சுட்டு பேசு பேசுன்னு பேசுன்னு ஹைதர் காலத்துலிருந்து கேட்டுகிட்டிருக்கீங்களே இருந்துமா அறிவு வரலை??
    இப்ப கொஞ்சம் முன்ன பாத்த ப்ரோக்ராம் தான்...என் கடுப்பை யார்ட தீக்குறது.
அது ஒரு மருத்துவரிடம் ஃபோன் போட்டு கேள்வி கேட்கும் நிகழ்ச்சி

ஹலோ வணக்கங்க ஹெல்த் டாக் நிகழ்ச்சியில டாக்டர்ட என்ன கேக்க போறீங்க சார்

ஹலோ ஹலோ ஹலோ

சார் கேக்குதுங்க உங்க பேர் என்ன ப்ரச்சனைன்னு சொல்லுஙக் சார்

ஹலோ நான் சரவணன் ஹலோ ஹலோ

சார் உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணிட்டு பேசுங்க சார்

ஹலோ நான் சரவணன் ஹலோ டாக்டர் ஹலோ ஹலோ

சார் ப்லீஸ் உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க சார்..பன்னியாச்சா?இல்லைங்க இன்னும் பண்ணலையே பன்னுங்க சார்(இப்ப அந்தம்மா அழுவுது)..உம்ம் இப்ப பேசுங்க சார்

ஹலோ நான் சரவணன் பேசறேங்க

சரிங்க சொல்லுங்க உங்க ப்ரச்சனை என்ன

எனக்கு சாபிட்டு முடிஞ்சதும் வயித்து வலி வரும்

சரிங்க எத்தன வருஷமா இருக்கு

ரெண்டு மாசம்

உம்ம் மேல சொல்லுங்க சரவணன்..டாக்டர்ட போனீங்களா

உம்ம் போணேன்

நிறைய காலர்கள் வெயிட் பன்றாங்க நீங்கப்ரச்சனையை தெளிவா சீக்கிரமா சொல்லுங்க சரவனன்

ஹலோ ஹலோ உம்ம் டாக்டர்ட போணேன் செக் பண்ணினேன்..என்டோஸ்கோபி கொலொனோஸ்கோபி பண்ணாங்க

உம்ம் சொல்லுங்க சரவணன் அதுல எதாவது ப்ரச்சனை இருந்ததா

இல்ல
மிஸ்டர் சரவணன் ப்ரச்சனை இல்லன்னா வேறென்ன சொன்னாங்க

ஹலோ ஹலோ ஒன்னும் சொல்லல குடல்ல லேசா கீறல் இருக்குன்னாங்க

சரிங்க நீங்க நல்ல கேஸ்ட்ரோஎன்டெராலஜிஸ்டை பாத்து எல்லா டெஸ்டையும் செய்து பாருங்க நிச்சயமா தீர்வு கிடைக்கும் நீங்க சரியா பேசாததால என்னால அதிக நேரம் ஒதுக்கி ப்ரச்சனையை புரிஞ்சுக்க முடியல

நேயர்களே(முட்டாள்களே) தயவு செய்து ஃபோன் பண்ணினா டாக்டரிடம் தெளிவாக கேள்விகளை உங்க டிவி வால்யூமை குறைச்சுட்டு கேளுங்க..

இது தான் இப்ப நான் பாத்த ப்ரோக்ராம் இப்ப எனக்கும் இதை பாத்த நிறைய பேருக்கு பிபி எகிறியிருக்கும்னு நினைக்கிறேன்
ஏன்யா அறிவே இல்லையா..என்ன காரணத்துக்காக நீங்க வால்யுமை குறைக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க..உங்க இனிமையாக குரல் டிவியில எப்படி ஒலிக்கிதுன்னு கேக்கவா?
  சரி ஃபோனை போட்டீங்க எதுக்காக?பேச தானே?பேசி தொலை வேண்டியது தானே..அதென்ன ஒரு வார்த்தையில பதிலை சொல்லி கேக்குறவங்களையெல்லாம் டென்ஷனாக்குறது
  இத்தன வருஷமா இந்த கொடுமையை ஏன் இன்னும் ஒழிக்க முடியலைங்கறது எனக்கு புரியவேயில்ல:-(

Tuesday, 7 December 2010

நேரடி ஒளிபரப்பு

எனது உறவினர் ஒருவர் இங்கு தான் இருக்கிறார்...ஆனால் குடும்பம் ஊரில் இருக்கிறது..அவர் எனக்கு அத்தை முறை..அத்தையின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து மூன்று நாளே ஆனதால் வழக்கம் போல அப்பா அம்மாவால் வந்து இரவு படுக்கமுடியவில்லை.
   அவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒன்று வயது 3 இன்னொன்று வயது 2..அன்று இரவு வீட்டை சுத்தப்படுத்தி குப்பையை கொட்டலாம் என பின்கதவை திறந்து வெளியில் போயிருக்கிறார்..கொட்டிவிட்டு திரும்பினால் இருட்டில் எதுவோ ஒரு உருவம் சுவற்றோடு ஒட்டி கிடக்கிறதாம்..இவர் நல்ல அருகில் சென்று உற்றுபார்த்ததும் ஒரு மர்மநபர் இவரை பாய்ந்து வீட்டினுள் தள்ளியிருக்கிறார்..இவர் ஒரே கூச்சலும் போட்டு அடுப்பறையில் கிடைந்த பாத்திரங்கள் முறம் கொண்டு மர்மநபரை அடிக்க அக்கம் பக்கத்தினரும் சத்தம் கேட்டு ஓடிவர மர்மநபர் தப்பி ஓடிவிட்டாராம்.
இந்த கதையை கேட்டும் நான் ரொம்ப சிரித்தேன்..ஏன்னா கேக்கிறீங்க?இத்தனையும் நடக்கையில் இரண்டு குட்டீஸ்களும் டிவியில் ஸ்டன்ட் சீன் பார்ப்பது போல்  பயங்கரமா சிரித்துக்  கொண்டிருந்தார்களாம்:-D

Monday, 6 December 2010

செருப்பும் நானும்

   நானும் இருக்கேன் எனக்கொரு செருப்பும் இருக்கு...ப்ரவுன் கலரும் பொன்னிறமும் கலந்தது போல் மேலே வெள்ளை கட்கள் பதித்த செருப்பு..வாங்கி இரண்டு வருடம் ஆகிறது..இந்த இரண்டு வருடமும் கிட்டத்தட்ட எல்லா நாளும் அதனை தான் உபயோகித்திருப்பேன்.
   இதிலென்ன விஷேஷம்னா கேக்கறீங்க?நம்மூர் காசுக்கு சுமார் 400 ரூபாய்க்கு வாங்கினது அது..இங்கு அது ரொம்ப சீப் என்று சொல்லலாம்..அது இன்னொரு நாலு வருஷத்துக்காவது தாங்கும் என நினைக்கிறேன் ..ஆனால் எல்லாரும் திட்ட ஆரம்பித்து விட்டார்கள் வேற செருப்பே இல்லையா என்று.
   நானும் இதை விட நாலு மடங்கு காசு போட்டு செருப்பு வாங்கினேன் எனக்கு இந்த சவுகரியம் கிடைப்பதே இல்லை...ஒன்னு பின்பக்கம் காலில் தேய்ந்து தோல் உரியும் இல்ல எதாவதொரு விரல் அமுங்கி வீங்கும்..அதுவுமில்ல எது மேலயோ ஏறி நடக்கிற மாதிரி வினோதமா இருக்கும்..இப்ப எனக்கு சவுகரியமா நடக்கனும் ஸ்டைலா பெரிசுன்னு அதை கழட்டி போட்டுட்டு என் ராசியான செருப்பையே போட்டுக் கொள்வேன்.
  என் காலுக்கு எப்ப ஒரு விடிவுகாலம் வருமோ தெரியாது..என் காலுக்கேத்த சவுகரியமான செருப்பு எப்ப மார்க்கெட்டில்  வருமோ என்று காத்துக் கொண்டே இருக்கேன்.

Thursday, 2 December 2010

இங்க்லிபீஸ்

மகளுக்கு ஜலதோஷம் ..அப்பா மகளிடம் சரி நமக்கு வெளிய ஃப்ரெஷ் ஏர் வாங்கிட்டு வருவோம் என்றார்..இருவரும் கிளம்பினார்கள் மகள் வெளியில் போய் "அம்மா நாங்க ஏர் ஃப்ரெஷ்னெர் "வாங்க போகிறோம் என்றாள்..ஒருகணம் நான் முழித்தாலும் பிறகு விளங்கியது சுத்தமான காத்து வாங்க போறங்களாம்:-)