Pages

Saturday, 16 April 2011

ஸ்கூலுக்கு போக மாட்டேன்

    பிள்ளைகள் புதிதாக ஸ்கூலுக்கு போனாலும் சரி ஒவ்வொரு வகுப்பு மாறும்பொழுதும் சரி ஸ்கூலுக்கு போக சில நாள் மறுக்கும்.
   ஒரு வருடம் முழுக்க ஒரே டீச்சரிடம் இருந்து பழகி நல்ல ஒட்டி விட்டால் பிறகு அடுத்த டீச்சருடன் பழகி வரும் வரை கஷ்டம் தான்..குழந்தை போக மறுத்தால்
1)ஒரு வருடம் முடியும் தருவாயில் அடுத்த வருடம் புது நல்ல டீச்சர் வருவார் என அப்பவே சொல்லி வைக்கலாம்
2)புதிய டீச்சரிடம் போய் குழந்தையின் முன்னிலையிலேயே பேசி சமாதானப்படுத்தி நல்ல கவனிக்க சொல்லி விட்டு வரலாம்..அது அவர்களு சமாதானமாக இருக்கும்
3)சமத்தாக போய் விட்டு வந்தால் அவர்களுக்கு பிடித்தமான எதாவதொன்றை வாங்கி தருவதாக சொல்லலாம்
4)முதல் சில நாட்கள் பிள்ளைகள் டீச்சருடன் பழகும்வரை அவர்களுக்கு பிடித்தமானதாகவே லன்ச் பாக்சில் கொடுத்து விடலாம்
5)டீச்சருக்கு ஸ்டார் ஸ்டிக்கர் கொடுத்தனுப்பி தினசரி ஒன்றை சில நாளுக்கு  பிள்ளைகள் கைய்யில் ஒட்டிவிடுமாறு கேட்டுக் கொள்ளலாம்.
6)நாளை போக மாட்டேன் என்று சொன்னால் சதா என்னேரமும் சமாதானப்படுத்திக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருக்காமல்..சமத்தா போய் வாங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது என்று வேறு நல்ல விஷயங்கள் அல்லது கதைகள் சொல்லி திசை திருப்பி விட வேண்டும்..அதையே பேச பேச பீதி அதிகமாகும்

இதெல்லாம் செய்ய செய்யவே புது க்லாசும் அவர்களுக்கு பழகிவிடும் சமத்தாக போவார்கள்

 

3 comments:

ஸாதிகா said...

சமயத்திற்கேற்ப அருமையான டிப்ஸ்கள் தளிகா.

இலா said...

Good tips dee... i saw a tip .. you can cut melons ( water melon, honeydew melon and cantaloupe) using cookie cutter like smiley or star so they will like to eat fruits :) in school lunch box

தளிகா said...

ஷாதிகா ஆண்ட்டி உங்களை போன்ற அனுபவசாலிகள் வந்து பாராட்டுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு

இலா அதானா சேதி...நான் ஒரு ஃப்ரூட் கடையில் என்னென்னவோ ஷேப்பில் என்னெனவோ வெட்டி வைத்திருந்தாங்க..நானும் அவரும் அல்வா மாதிரி எதுவோ தெரியுதே என பேசிக் கொண்டோம்.செய்து பார்த்துடலாம்

Post a Comment