Pages

Tuesday, 7 December 2010

நேரடி ஒளிபரப்பு

எனது உறவினர் ஒருவர் இங்கு தான் இருக்கிறார்...ஆனால் குடும்பம் ஊரில் இருக்கிறது..அவர் எனக்கு அத்தை முறை..அத்தையின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து மூன்று நாளே ஆனதால் வழக்கம் போல அப்பா அம்மாவால் வந்து இரவு படுக்கமுடியவில்லை.
   அவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒன்று வயது 3 இன்னொன்று வயது 2..அன்று இரவு வீட்டை சுத்தப்படுத்தி குப்பையை கொட்டலாம் என பின்கதவை திறந்து வெளியில் போயிருக்கிறார்..கொட்டிவிட்டு திரும்பினால் இருட்டில் எதுவோ ஒரு உருவம் சுவற்றோடு ஒட்டி கிடக்கிறதாம்..இவர் நல்ல அருகில் சென்று உற்றுபார்த்ததும் ஒரு மர்மநபர் இவரை பாய்ந்து வீட்டினுள் தள்ளியிருக்கிறார்..இவர் ஒரே கூச்சலும் போட்டு அடுப்பறையில் கிடைந்த பாத்திரங்கள் முறம் கொண்டு மர்மநபரை அடிக்க அக்கம் பக்கத்தினரும் சத்தம் கேட்டு ஓடிவர மர்மநபர் தப்பி ஓடிவிட்டாராம்.
இந்த கதையை கேட்டும் நான் ரொம்ப சிரித்தேன்..ஏன்னா கேக்கிறீங்க?இத்தனையும் நடக்கையில் இரண்டு குட்டீஸ்களும் டிவியில் ஸ்டன்ட் சீன் பார்ப்பது போல்  பயங்கரமா சிரித்துக்  கொண்டிருந்தார்களாம்:-D

8 comments:

ஜெய்லானி said...

ஏன் பின் பக்கம் லைட் எதுவும் இல்லையா..?

Jaleela Kamal said...

பிள்ளைகள் டீ பார்த்து பார்த்து
இப்படி ஆகிவிட்டார்கள். பின்பக்கம் தீடீருன்னு ஒரு மர்ம நபர் என்றால் நான் பே பே பே தான்

வாங்க என் பக்கம் இனிய கானம் பாட அழைக்கிறேன்

நீஙக் என்ன நீங்க ளே பாடி போட்டுடுவீங்க இல்லையா?

asiya omar said...

உங்கள் அனுபவங்கள் INTEREST ஆக இருக்கு தளிகா.

தளிகா said...

ஜெயில் ஆணி சார் இத தான் நானும் கேட்டேன் போடலியாம்.கிச்சன் வெளிச்சம் தான் இருந்ததாம்

Vijisveg Kitchen said...

தளி ஒரு வழியா ப்ளேன் பிடித்து வந்துட்டேன்.
நலம் நல்மறியா ஆவல்.
நல்ல பேய் பிசாசோட கதை கட்டுரை எல்லாம் போடுங்கோ எல்லோரும் கெதியா ஒட்டோடி வருவாங்க.

டு மச் டிவி ஈஸ் டேஞ்ஞர்
நான் சொல்லலை அப்படின்னு என் வீட்டு குழந்தைகள் எனக்கு அப்ப சொல்லி காட்டிட்டு அவங்க டிவி பார்ப்பங்க.ஹி ஹி..
www.vijiscreations.blogspot.com
www.vijisvegkitchen.blogspot.com
டைம் இருக்கும் போது வந்து எட்டி பாருங்கோ.

ஜெய்லானி said...

//ஜெயில் ஆணி சார் இத தான் நானும் கேட்டேன் போடலியாம்.கிச்சன் வெளிச்சம் தான் இருந்ததாம் //

ஒரு பல்ப் இங்கே டீ குடிக்கும் விலைதானே ..!! .இப்போ போட்டிருப்பார்தானே ஹா..ஹா..

Kurinji said...

Interesting post...
Kurinji

ஹைஷ்126 said...

அருட்பேராற்றலின் கருணையினால்

தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

இப் புத்தாண்டு முதல்

உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்

பெற்று வாழ்க வளமுடன்.

Post a Comment