Pages

Wednesday, 2 March 2011

வண்ணங்கள் எண்ணங்கள்



இதெல்லாம் சின்ன வயதில் சுமார் பதிமூன்று முதல் பதிநாறு வயதுக்குள் வரைந்த படங்கள்.இன்று பொட்டியை க்லீன் பண்ணலாம் என்று வந்தேன் ..பழசெல்லாம் கண்ணில் படவும் உங்களுக்கு காண்பிக்கலாமே என்று ஒரு யோசனை

இதையெல்லாம் பல நாட்களுக்கு பிறகு பார்க்கையில் அந்தந்த கட்டத்தில் நடந்த பல சம்பவங்களும் மனதில் வந்து போகும்..அழகிய பருவம்




 
கீழே இருப்பது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும்பொழுது அம்மா வரைந்து காண்பித்தது..இதன் பின் தான் எனக்கும் ஆர்வம் வந்தது என்று நினைக்கிறேன்





22 comments:

athira said...

ஆ... தளிகா அனைத்துமே சூப்பராக இருக்கே... நம்ப முடியவில்லை. உங்கள் அம்மா வரைந்ததும் சூப்பர்.

அந்த வாத்துப்படம் மிக அருமையாக வரைந்திருக்கிறீங்க. ஏன் இப்பவும் தொடரலாமே.

முதன் முதலில் வந்திருக்கிறேன்... ரி, வடை, கட்லட்.. ஏதும் இல்லையோ எனக்கு?.

athira said...

ஐ இன்று வட நேக்குத்தேன்..... ஆருக்கும் இல்லை கர்ர்ர்ர்ர்ர்.:).

Asiya Omar said...

அழகான ஓவியங்கள்,பாதி வடை எனக்கு அதிரா.

தளிகா said...

ஐ அதிரா நீங்க வந்ததுல வீட்ல ஒரு புது வாண்டு வந்த சந்தோஷம்.இன்றைக்கு எங்க வீட்டில் உழுந்து வடையும் பாதாம் ஹல்வாவும் உண்டு...கடைசியாக புதினா ஜூசும் குடிச்சுட்டு போங்கோ அதிரா

ஆமாம் அதிரா திரும்ப தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன்..மனசிலொரு ஐடியா உண்டு அதுக்காக பொருட்களை வாங்கி செய்த பிறகு உங்களுக்கு காட்டுறேன் சரியோ.

தேன்க்ஸ் ஆசியாக்கா..சண்டை போடாதீங்கோ உங்களுக்கு இரண்டு வடை சரியா

ஜெய்லானி said...

அம்மாவே நல்ல வரையும் போது உங்களுக்கு வராட்டிதான் பிராப்ளமே..!! ஏன் விட்டுட்டீங்க ..இப்பவும் தொடருங்க ..

இரெண்டாவது படம் ஏ+ , பரிசுப்போட்டியில வச்சிருந்தா முதல் பிரைஸ் கிடைத்திருக்கும் :-)

ஜெய்லானி said...

/எங்க வீட்டில் உழுந்து வடையும் பாதாம் ஹல்வாவும் உண்டு//

வடையை முதல்ல கேட்டவங்களுக்கு குடுத்திடுங்க ..ரெண்டாவதா வந்தவங்களுக்கு புதினா ஜுஸு

ஹை ..ஜாலி...எனக்கு மட்டும் பாதாம் ஹல்வா

((அதிஸ் இதுக்கு கர்ர்ர் சொல்லப்பிடாது வடை உங்களுக்குதான் ஹி..ஹி.. ))

athira said...

//ஐ அதிரா நீங்க வந்ததுல வீட்ல ஒரு புது வாண்டு வந்த சந்தோஷம்///
மியாவும் நன்றி. எனக்கு சிக்கின் பிரியாணியும் வேண்டும் வித் அவித்த கோழி முட்டையோடு(வாங்கும்போது பெரிதாகப் பார்த்து வாங்குங்கோ பிளீஸ்ஸ்).

asiya omar said...
அழகான ஓவியங்கள்,பாதி வடை எனக்கு அதிரா.// கர்ர்ர்ர்ர்... பிச்சுப் பிச்சுத் தரமாட்டனே...:))


///((அதிஸ் இதுக்கு கர்ர்ர் சொல்லப்பிடாது வடை உங்களுக்குதான் ஹி..ஹி.. ))/// ஜெய் இம்முறை கர்ர்ர்ர் இல்லை ஃபோர் எ சேஞ்.. மியாவ் மியாவ்... ஹல்வா சாப்பிடுற வயசா உங்களுக்கு? ஆசையைப் பாருங்கோவன்...:)) ஆஅ.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இமா க்றிஸ் said...

படங்கள் வடிவா இருக்கு தளிகா. தொடருங்கோ.

தளிகா said...

வாங்க ஜெய்லானி சார்.அம்மான்னா சும்மாவா..ஒரு மிடில் க்லாஸ் குடும்பத்தில் அன்றைய காலகட்ட சில பணம்பொருள் நெருக்கடிகளுக்கிடையில் அதையும் புரியவைத்து அதே சமயம் ஆஹ் என்று புதுசை கண்டால் வாய்பிளக்காத அளவுக்கு சொல்லி புரியவைத்து வளர்த்தால்..அன்றைய அம்மாமார்கள் நம்மை கவனித்ததற்கு பாதி கூட நாம் பிள்ளைகளுக்காக பாடுபடுவதில்லை
அச்சசோ அதற்குள் என் மகன் பாதாம் ஹல்வா முடிச்சுவிட்டார்..சரி உங்களுக்கு கோதுமை புட்டும் கடலை குழம்பும் இருக்கு தரவா
அதிரா கோழிமுட்டை பிரியையா..வாங்கோ பெரிசென்ன ரெண்டாவே போட்டு செஞ்சு தந்துடறேன்..நெடுநாள் தேடி இப்போ தான் மஞ்ச கலர் மஞ்சகரு முட்டையை கண்டுபுடிச்சிருக்கேன்..இங்கெல்லாம் ஆரஞ் மஞ்ச கருவல்லவோ
தேன்X இமா..இமா உங்க கேக் பக்கம் வருகிறேன்..அப்பப்பாஅ என்ன ஒரு நேர்த்தி சரி இருங்க அங்கயே வறேன்

ஜெய்லானி said...

//அன்றைய அம்மாமார்கள் நம்மை கவனித்ததற்கு பாதி கூட நாம் பிள்ளைகளுக்காக பாடுபடுவதில்லை//

அந்த காலத்துல (( அதென்ன அந்த காலத்துல )) வாரத்துக்கு 2 நாள் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் அரை மணி புரோகிராமுக்கு ஒன்னரை மணிக்கு ஸ்பான்ஸர் அட்வர்டைஸ்.
ஞாயிறு படத்துக்கு ஊரே எதிர்பார்த்து இருக்கும் 3 நாள் முன்னாலிருந்தே அட்வர்டைஸ்..


அதனால நம்மை கவனிக்க நேரம் இருந்துச்சி .இப்ப சேட்டிலைட் டிவீ , மாமியார் + மறுமகள் + நாத்தனார் அழுகையில்லாத சீரியல் இருக்கா..?? அப்படி இருந்தா அது சீரியலா ..? காலை 10 டூ இரவு 10 வரை இதிலேயே இருந்தா எப்படி கவனிக்க முடியும்..? அவ்வ்வ்வ்


உடனே நான் பார்ப்பது இல்லைன்னு சொல்லி கூஜாவை எடுத்து என் மேலே வீசிடாதீங்க ..நா பாவம் ஹி...ஹி... :-)))

ஜெய்லானி said...

//வாங்க ஜெய்லானி சார்.// ஒரு பொடிப் பயலை சார் என்று அழைப்பதை இந்த ச ச சங்கம் வண்மையாக கண்டிக்கிறது :-)

தளிகா said...

படிக்க படிக்க அப்படியே ரோஷம் பொத்துகிட்டு வந்தது..எழுதலாம்னு வாளை எடுக்கவும் கடைசி வரி பேசாம இருந்திட்டேன்..உம்ம்
வேனாங்க இப்படியே இருக்கட்டும்னு விட்டா உங்க உடம்புக்கு நல்லது..இல்ல நான் எதாவதெல்லாம் கூப்பிட ஆரம்பிச்சு பிறகு மாரியாதையை கொடு கொடுன்னு பொன்னை விலை தந்தாலும் கெடைக்காது..சாக்கிரதை

இலா said...

nice pics ruby! i think every mother has this doubt. am i doing the right thing ? am i doing enough? I just assure you.. you are doing everything right . Just be cool!

ஜெய்லானி said...

//படிக்க படிக்க அப்படியே ரோஷம் பொத்துகிட்டு வந்தது..எழுதலாம்னு வாளை எடுக்கவும் கடைசி வரி பேசாம இருந்திட்டேன்..உம்ம்//

யப்பா....தலை தப்பிச்சது ..எங்க பாட்டி செய்த புண்ணியம்...!! இதுக்கெல்லாமா வாளை எடுக்குரது..கூல்..கூல்...வேனுமின்னா ஒரு ஆம்லெட் செஞ்சி தரவா...?..

//ஜெய் இம்முறை கர்ர்ர்ர் இல்லை ஃபோர் எ சேஞ்.. மியாவ் மியாவ்...//

மறக்காம இவங்களையும் கூப்பிடுங்க ....ஹி..ஹி.. :-))

தளிகா said...

தேன்க்ஸ் இலா..சரியா புரிஞ்சு வச்சிருக்கே:-)..அப்படிங்கிற?அப்ப சரியா தான் இருக்கும்

தளிகா said...

ஜெய்லானி சார் உங்க ஃபோட்டோ பாத்தேன் ஃபேஸ்புக்கில்...இவ்வளவு அளும்பு பண்ணுவிங்கன்னு நம்பமுடியாத மாதிரி இருக்கு

ஜெய்லானி said...

//இவ்வளவு அளும்பு பண்ணுவிங்கன்னு நம்பமுடியாத மாதிரி இருக்கு //

இதுக்கெல்லாம் அதிஸ் மாதிரி வாடகை மூஞ்சி எடுத்துகிட்டு வரமுடியுமா...ஹி..ஹி... (( பூஸ் மீ எஸ்லேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ))
:-))))))))))))))))))))))))))

Jaleela Kamal said...

mmmm arumai

Anonymous said...

சின்ன வயசுலயே அழகா வரஞ்சு இருக்கீங்க

தளிகா said...

thank you so much jaleelakka &mahavijay:-)

Vijiskitchencreations said...

தளிகா எல்லா படமுமே சூப்பர். அதில் எனக்கு ரொம்ப பிடித்தது 2 வதும் அந்த வாத்தும். என்ன ஒரு கலை கைவசம் வச்சுகிட்டு இப்படி சும்மா இருக்கலாமோ தளி எடுத்து விடுங்க. எல்லார்ரும் பார்த்து மகிழுவோமில்ல.
எந்த மோளுக்கு வல்லம் பரஞ்சு தருந்தோ?

வனிதா said...

தளிகா இத்தனை அழகா வரைந்திருக்கீங்க.... இப்போ சமீபத்தில் வரைந்தவை இருந்தாலும் போடுங்களேன்... இதை பார்த்ததும் இப்போ எப்படி வரைந்திருப்பீங்கன்னு பார்க்க ஆசை. ரொம்ப அழகா இருக்கு. சூப்பர் தளிகா - வனிதா

Post a Comment