Pages

Friday, 18 February 2011

மனநோய்

 பிரசவத்திற்கு பின் வரும் டிப்ரெஸ்ஷன் கேள்விப்பட்டிருக்கிறேன்.சொந்தங்களில் பார்த்ததும் உண்டு..ஆனால் இவ்வளவு பயப்பட வேண்டிய விஷயம் என்று நினைக்கவே இல்லை.
  நேற்று எங்களுக்கு தெரிந்த உறவுக்கார பெண் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டது..முழுக்க முழுக்க டிப்ரெஷன் மட்டுமே காரணம் வேறெந்த ப்ரச்சனையும் இல்லாத சந்தோஷமான குடும்பம்
   குழந்தை பிறந்ததிலிருந்து வழக்கத்துக்கு மாறாக அதிக ஆத்திரம் கொள்வதும், அழுவதுமாக இருந்தது ..ஆனால் எந்த நேரத்தில் அதற்கு அப்படி தோன்றியதோ ஆள் இல்லாது போன நேரம் இப்படி செய்து விட்டது.
  இது நமக்கு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்,.நமது சொந்தபந்தத்தில் இப்படி யாருக்கேனும் இருந்தால் நிச்சயமாக நல்ல மனநலமருத்துவரிடம் காட்டி தக்க சிகிச்சை பெற வேண்டும்
  இப்படிப்பட்ட நேரத்தில் புகுந்த வீடு பழைய வீடு என சடங்கு சம்பிரதாயம் பார்க்காமல் நல்லபடியாக சிகிச்சை செய்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்
  இப்படிப்பட்டவர்கள் பிரசவமான பின் அதிக ஆத்திரம் கொள்வது,அழுவது,குழந்தையை கவனிக்காமல் இருப்பது,அல்லது குழந்தையை பற்றி அதிக பயம் கொள்வது,அனைவரிடமிருந்தும் ஒழுங்கி பேசாமல் இருப்பது,சம்மந்தமில்லாததை பேசுவது,இடம் பொருள் தெரியாமல் பேசுவது,தன்னம்பிக்கை இழந்தும் ஷக்தி இழந்தும் சோர்வாக காணப்படுவது,எதையோ பரிகொடுத்தது போல் சோகமாகவே இருப்பது,அவ்வப்போது காரணமில்லாமல் அழுவது,தூக்கமில்லாமல் தவிப்பது,சாப்பிட மறுப்பது,குழந்தையை அடிக்கவோ காயப்படுத்தவோ முயற்சிப்பது  போன்ற அறுகுறிகளை காட்டுவார்கள்..
 அதனால் இப்படிப்பட்ட எதுவேனும் தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
  எனினும் சாதாரண்மாகவே சிலருக்கு கோபமும் அழுகையும் இந்த சமயத்தில் அதிகமாக காணப்படலாம்.நாள் செல்ல செல்ல இம்மாதிரி அறிகுறிகள் கூடிக் கொண்டே வந்தால் நிச்சயமாக நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்

7 comments:

இலா said...

ஆமாம் தளிகா! அதுக்கு பேரு போஸ்ட் பார்டம் டிப்ரஷன். ஆரம்பத்திலே அதுக்கு தக்க சிகிச்சை எடுத்துக்கணும். நம்ம ஊரில டிப்ரஷன் வர வாய்ப்பே இல்லை.. அதைவிட அதிகமா கவலை தர விசயங்களை எல்லாம் ஈசியா எடுத்துக்கறாங்க. உங்க உறவினள் விசயம் ரொம்ப வருத்தமானது தான். தனியா குழந்தைய வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா அதனாலோ என்னவோ பிள்ள பெத்த வீட்டுக்கு வரி வரியா ரிலேடிவ்ஸ் வருவங்கல்ல..

தளிகா said...

மிகுந்த வருத்தமாக இருந்தது.ஆறு வருடம் கழித்து குழந்தை பெற்றுவிட்டு தனியா விட்டுட்டு போயிடுச்சு.ஆமாம் வரிவரியா ரிலேடிவ்ஸ் வருவது தான் இம்சை
நம்மூரில் அதை விட பெரிய விஷயத்தை ஈசியா எடுத்துக்கறாங்க"அதென்னவோ சரியான பாயின்ட்.."

Jaleela Kamal said...

சரியான பகிர்வு, இது நிறைய பேருக்கு இந்த அழுகை , கோபம், தூக்கமின்மை எல்லாம் வருவது சகஜம் தான் நாம் தான் நம்மை பார்த்து கொள்ளனும்.

ஜெய்லானி said...

//பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டது..//

சரியான பாயிண்ட் இதுதான் ..!! அதுக்கு பிறகு அந்த குழந்தையின் நிலை என்னவாகுமுன்னு ஒரு நிமிடம் யோசிச்சாலே போதுமே :-(

தளிகா said...

இங்கு அதானே [ப்ரச்சனையே..முன் எந்த ஒரு ப்ரச்சனையும் இல்லாமல் தெளிவாக இருக்கும் ஒரு பெண் தான் பிரசவமானதும் இந்நிலைக்கு போகிறாள்...இப்படியெல்லாம் யோசிக்கும் மனநிலை அவர்களுக்கு இருக்காது,..இப்படிப்பட்டவர்களை காக்க வேண்டியது முழுக்க முழுக்க குடும்பத்தினரின் குறிப்பாக கனவரின் பொறுப்பு

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Asiya Omar said...

தளிகா நலமா? இந்தப் பகிர்வை இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.நன்றி.

Post a Comment