Pages

Tuesday, 17 May 2011

சிக்கன் ப்ரெட்

எனக்கு பிடித்தமானது சமையல் நிகழ்ச்சிகள் தான்..எங்கு போனாலும் எதை பார்த்தாலும் சமையல் என்ற அம்சம் அங்கு இருந்தால் ரொம்ப சுவாரசியமாக கேட்பேன் தெரிந்து கொள்வேன் அடுத்தது செய்து பார்த்து விட்டு தான் மறு வேலை..டிவி என்ற ஒன்றை நான் போடுவதாக இருந்தால் அது அதிகம் மசாலா சானலில் காணும் சமையல் நிகழ்ச்சிகள் தான்..அதில் செஃப் ஷிரீன் அன்வர் ஒரு முறை இந்த சிக்கன் ப்ரெட் செய்து காட்டினார்..அதில் சில மாற்றங்களோடு எனக்கு பிடித்த சுவையில் செய்து பார்த்துவிட்டேன்.நீங்களும் செய்து பாருங்கள்.


விளக்கமாக கட்டம் கட்டமாக புகைப்படம் எடுக்க நேரமும் இருக்கவில்லை பொறுமையும் இருக்கவில்லை..அதனால் வரைந்த ஒரு படத்தையும் போட்டு விடுகிறேன் புரியுதா பாருங்க





தேவையான பொருட்கள்
ப்ரெட் செய்ய
மைதா - 2 கப்
பால் பொடி - 3 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
முட்டை - 1
எண்ணை - 2 ஸ்பூன்
யீஸ்ட் - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - குழைக்க

மைதாவில் பால் பொடி,உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து நடுவில் ஒரு குழி செய்து வைக்கவும்..
யீஸ்டை வெதுவெதுப்பான 2 ஸ்பூன் பாலில் கரைய விடவும்.
பின்பு மாவில் எண்ணையில் கலக்கிய முட்டையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து குழைக்கவும்
சப்பாத்தி மாவு போல் குழைத்த பின் ஈரமான துணியை போட்டு மூடி இரண்டு மணிநேரம் பொங்க விடவும்

இப்போது சிக்கன் ஃபில்லிங் தயாரிக்க
சிக்கன் - 250 கிராம் எலும்பில்லாத சிக்கனில் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து ஊறவைத்து விடலாம்
வெங்காய்ம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி&பூண்டு - பொடியாக நறுக்கியது 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி இலை - சிறிதளவு நறுக்கி வைக்கவும்

இப்போது எண்ணை கொஞ்சமாக காயவைத்து வெங்காயம் பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை வதக்கவும்
பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
அதில் ஊறவைத்த சிக்கனும்,கரம் மசாலா தூளும்,மிளகு தூளும் சேர்த்து வதக்கி வேக விடவும்
நன்கு வெந்ததும் தீயை அணைத்து மல்லி இலை தூவி இறக்கவும்
பின்பு சிக்கனை நல்ல கனமான மேஷர் கொண்டு உடைத்து விடவும்
இக்கலவையை சூடு ஆற விடவும்

இப்பொழுது சிக்கன் ப்ரெட் தயாரிக்க
  • மாவினை முதலில் நாலு அல்லது ஐந்து பாகங்களாக பிரித்து உருட்டி வைக்கவும்
  • அதே போல் சிக்கனையும் பாத்திரத்திலேயே ஐந்தாக பிரித்து வைக்கவும்
  • மாவினை பலகையில் ஓவல் வடிவத்தில் சப்பாத்தியை விட சற்று கனமாக தேய்க்கவும்
  • பின்பு சிக்கனை நடுவில் நீளமாக வைக்கவும்
இரு ஓரங்களிலும் ஒவ்வொரு சென்டிமீட்டர் விட்டு விட்டு கீரல்கள் கொடுக்கவும்
கத்தியில் எண்ணை தொட்டால் அழகாக கீரலாம்
  • பின்பு முதலில் உள்ள இரண்டு கீரிய ரிப்பன் போன்ற மாவினை ஒன்றன் மேல் ஒன்றாக வருமாறு வைக்கவும்
  • அப்படியே ஒவ்வொரு கீரிய மாவினையும் இழுத்து இழுத்து மூடவும்.கடைசி ஓர மாவினையும் டைட்டாக அழகாக மூடி விடவும்
  • இப்படியே ஐந்து உருண்டைகளையும் தயாரித்தபின்பு மேலே கலக்கிய முட்டை சிறிது தேய்த்து விட்டு வெள்ளை எள் சிறிது தூவ அழகாக இருக்கும்
(வெள்ளை இல்லாமல் போகவே கறுப்பு போட்டேன்)
  • பின்பு முற்சூடு செய்யப்பட்ட அவனில் 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
சுவையான அழகான பார்த்தால் கடினமாக தோன்றும் ஆனால் எளிமையான சிக்கன் ப்ரெட் ரெடி.
விருந்தினர்களுக்கு கொடுத்து நீங்களே செய்தது என்றால் அசந்து போவார்கள்
:-)

20 comments:

அஸ்மா said...

சலாம் ருபீனா! சிக்கன் ப்ரெட் சூப்பரா இருக்கு. இதே பின்னல் முறையில் இங்கு வெறும் ப்ரெட் மட்டும் செய்வார்கள். சிக்கன் ஃபில்லிங் வைத்து செய்வது புதுவிதமா இருக்கு. இனி இதுபோல் தொடர்ந்து ரெசிபி போடுங்க :)

ஹுஸைனம்மா said...

இதேபோல சூப்பர்மார்க்கெட்டுகளில் பார்த்திருக்கீறேன்.
முன்பே, அறுசுவையிலேயே, பிரட் செய்முறைகளைப் பார்த்து, இவ்வளவு ஈஸியா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். செய்ய ஆசையா இருக்கு. ஆனா, என்னிடம் மைக்ரோ ஓவன்தான் உள்ளது. இதில் எப்படி செய்யன்னு யாரும் தெளிவா சொல்லலை. யாராவது சொன்னா செஞ்சு பாக்க வசதியா இருக்கும்.
மைக்ரோ ஒவனில், கேக், பீட்ஸா செய்வதுண்டு. அதே முறையில் செய்தால் போதுமா?
இதைப் பாத்தவுடனே செஞ்சே ஆகணும்னு கை அரிக்குது. ஹெல்ப் ப்ளீஸ்!! :-))))))

இலா said...

Good one da ! I like the braided breads !
Looks very good I shd try them too.
Kalakkare ! Odi chadi koranjchathellam kuudi pookum ! Pinne thadi engana maarum ?!!

மனோ சாமிநாதன் said...

சிக்கன் பிரெட் நல்லாயிருக்கு தளிகா! விரிவாக சொல்லியிருக்கும் விதம் அருமை!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

தளிகா.... நீண்டகாலமாக உங்கள் பதிவைக் காணவில்லையே தளிகா? நலம்தானே?

Jaleela Kamal said...

mm

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

மாய உலகம் said...

வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

ADMIN said...

நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

ADMIN said...

படங்களைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. நிச்சயம் இது பயனுள்ள ஒரு சமையல் டிப்ஸ். முயற்சி செய்து பார்க்கிறோம்.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் தாளிகா...
தங்களின் பெயர் ரூபினாவா....?என்னை நினைவிருக்கும் என நினைக்கிறேன்.சரி விஷயத்திற்க்கு வருகின்றேன்.தங்கள் வலைப்புவை இன்றுதான் பார்வையிட நேர்ந்தது.
வாழ்த்துக்கள் தாளிகா....
முழுமையாக பார்வையிட்டு ஆங்காங்கே அவ்வபோது வந்து பதிவிடுகின்றேன்.

அன்புடன்,
அப்சரா.

Learn said...

இப்பவே சாப்பிடனும் போல இருக்கு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

buhari said...

thalika super

enrenrum16 said...

நீங்க சொல்லியிருக்கிற முறையே நன்கு புரியும்விதத்தில் இருக்கு தளிகா... படத்தைப் பார்க்கவேண்டிய அவசியமேயில்லை....பார்க்கறதுக்கே அழகா இருக்கு... சூப்பர்.

தளிகா said...

test

Asiya Omar said...

தளிகா புது போஸ்டிங் போட்டிட்டீங்கன்னு நினைத்து ஓடி வந்தேன்.இது மே மாதம் போட்டதா? நான் இப்ப தான் பார்க்கிறேன்,அப்ப நான் வலையுலகிற்கு கொஞ்சம் பிஸி போர்டு போட்டு மூன்று மாதம் கழித்து தான் வந்தேன்.அதனால் என் கண்ணில் படவில்லை..உங்க சிக்கன் ப்ரெட் சூப்பர்.பார்க்கவே ஆசையாக இருக்கு.

ஸாதிகா said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன்.பாரவை இட்டு தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

உங்க செய்முறையே எப்படியாவது இத சாப்பிட வச்சிடும்போல.....நல்ல செய்முறை அருமையான (வரைந்த)படங்கள்..

புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்

எனது தள கட்டுரைகளில் சில:
அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

Asiya Omar said...

Participate in my first event.

http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

Asiya Omar said...

Feast of Sacrifice Event - Results
http://www.asiyama.blogspot.com/2012/11/feast-of-sacrifice-event-results.html

Post a Comment