Pages

Tuesday, 15 February 2011

உணவு

நம்முடைய உணவு பழக்க வழக்கம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று..உணவு உறக்கம் சரியாக இருந்தால் பல பல நோயின் பிடியிலிருந்து தப்பலாம்.
  குறிப்பாக வயிறு சம்மந்தமான ப்ரச்சனைகள் பெரும்பாலும் தவறான உணவு பழக்கங்களால் வரும் வாய்ப்பு அதிகம்.
  அதனால் சிறு குழந்தைகள் முதலே உணவு விஷயங்களில் கவனமாக ஸ்ட்ரிக்டாக கடை பிடிக்க வேண்டும்..இந்த பதிவை எழுத தோன்றியதே இங்கு வெளிநாட்டு வாழ்க்கையில் அக்கம் பக்கத்து வீடுகளிலும் நாம் காணும் உணவு பழக்கவழக்கம் தான்.

இதில் ரொம்ப முக்கியமான ஒன்று காலை உணவு,,காலை உணவினை எக்க்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது.இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறிய குழந்தைகள் முதல் காலை உணவை தவறாமல் ஊட்டி பழக்க வேண்டும் என பிரபல மருத்துவர் சொன்னார்.
  ரொம்பவும் வயிற்றை நிரப்ப வேண்டும் என்றே இல்லை...ஒரு இட்லி அல்லது அரை இட்லியை கூட கொடுத்தாவது காலை உணவை ஊட்டி விட வேண்டுமாம்..குழந்தைகள் மறுத்தாலும் நாம் விடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து பழக்க வேண்டுமாம்...
  இங்கு பெரும்பாலும் குழந்தைகளோ பெரியவர்களோ காலை உணவு என்ற ஒன்றை பற்றி நினைப்பதே இல்லை...அப்படியே பட்டினியாக இருந்து மதியம் எதாவது கண்ட கண்ட திண்பண்டங்கள் அல்லது ஜன்க் ஃபுட் சாப்பிடுவது வழக்கமாக காண முடிகிறது.
  சமீபத்தில் எனக்கு தெரிந்த உற்வினர் பிள்ளைகள் ஒரே சிரித்து கொண்டு கிண்டலடித்து கொண்டிருந்தார்கள் எங்கள் க்லாசில் ஒரு பைய்யன் தினமும் சாதம் கொண்டு வருவான் என்று..இதில் சிரிப்பு என்ன வேண்டி கிடைக்கிறது என்றேன்...நாங்கல்லாம் சேன்ட்விச் மட்டுமே கொண்டு போவோம் அவன் சுத்த பட்டிக்காடு என்றார்கள்..இப்படி கெட்டுகிடக்கிறது காலம்.
  நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களால் உடல் ரொம்பவே கெட்டு போகிறது.இதனால் பின்னாளில் ரொம்பவே வேதனை தரக் கூடிய உடல் உபாதைகள் வந்து சேரும்
  சின்ன குழந்தைகளை ஜன்க் ஃபுட்டுக்கு பழக்கப்படுத்துவது நாமே தான்...ஒரு வயதில் எப்படியும் சாப்பிடுவார்கள் என்று சிறு வயதிலேயே பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கண்டகண்டதையும் குழந்தைகளுக்கு தருவது நாமே அவர்களது ஆயுளை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதற்கு சமம்.
   இயன்ற அளவு வீட்டில் தயாரித்து உணவுகளை கொடுக்கலாம்..நாம் சப்பிட்டு வளர்ந்த இட்லி,தோசை களை கூட இன்றைய பிள்ளைகளுக்கு ஏற்ற வகையில் அலங்காரப்படுத்தி பரிமாறலாம்.சிறு வயதிலேயே சத்தான உணவின் அருமையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் வளரும்போதும் அவர்களுக்கு மனதில் ஆழமாக பதிந்து நிற்கும்.
  அதனால் தாய்மார்களே தினமும் உங்கள் குழந்தைகளுக்கு 1/4 கப் கர்ன்ஃப்லேக்சையாவது நிர்பந்தித்து ஊட்டி விட்டு ஆரோகியமாக குழந்தையை வளர்க்கும் நிம்மதியோடு பள்ளிக்கு அனுப்புங்கள்
 

3 comments:

ஜெய்லானி said...

நம்ம ஊரில பரவாயில்லை ஸ்கூல் 9 இல்லை 10 மணிக்கு ஆரம்பிக்குது ஓக்கே..!! ஆனா இங்கே வெளிநாட்டில காலை 6 மணிக்கே பஸ்வர வெளியே அம்மாக்கள் பிள்ளையுடன் வெயிட் செய்வதை பார்த்தால் மனசுக்கு என்னவோ செய்கிரது .
அப்படி பார்க்கும் போது அத்தனை சீக்கிரம் எழுந்து வேலை செய்ய கஷ்டப்ப்ட்டுதான் பிரெட் சமாச்சாரம் ஓடுதுப்போல

ஆனா ஃபஜர் தொழுகை காக தினம் எழும் நமக்கு அத்தனை கஷ்டம் இருக்காது இருந்தாலும் சமையல் ஒரு பிரச்சனைதான் :-)

Jaleela Kamal said...

தளி நிறைய பேர் காலை உணவு சாப்பிடுவதில்லை இங்கு , வேலை வேலை என்று போய் விடுகிறார்கள், அதேஎ பிள்ளைகலும் , இது இப்ப ஒன்னும் தெரியலனாலும், பின்னாடி வயிறு பிராப்ளம் கண்டிப்பாக வரும்.
சாப்பாடு இல்லன்னா கூட பரவா யில்ல எங் க வீட்டுல்க் காலை கார்ன்பிலாக்ஸும், டிபனும் கண்டிப்பாக இருக்க்க்கனும்;


( மெயில் போட்டேன் , விபரம் எழுத முடியல யாஹூ பிரச்சனை>பிறகு பார்க்கலாம்

தளிகா said...

ஆமாம் ஜெய்லானி சார்..கஷ்டம் தான் இருந்தாலும் காலையிலும் மதியமும் ப்ரேக் இருக்கே அப்பவாவது சத்தானதா சாப்பிட கொடுத்து அனுப்பலாம்
காசு காசுன்னு ஆளாளுக்கு பிள்ளைகளை கவனிக்காமல் சம்பாதித்து மொத்தத்தையும் ஹாஸ்பிடலுக்கே கொடுப்பதில் அர்த்தமே இல்லை

அக்கா உங்களை போல எதாவது சில அம்மாக்கள் எங்காவது தான் இருப்பாங்க..வேலையையும் வீட்டையும் ஒழுங்கா ஒரு போல கொண்டு போவது கஷ்டம் தான்.

Post a Comment