Pages

Tuesday 1 February 2011

மானங்கெட்ட மரமண்டைகள்

  சொன்னதையே சொன்னதையே திரும்ப நானும் சொல்கிறேன்..பல தளத்திலும் வெளியாகியிருந்தாலும் மக்களுக்கு அறிவு வருமா என்றால் இல்லவே இல்லை. பிள்ளைகளை வெக்கமில்லாமல் வளர்த்துவதால் பின்னாடி சூடு சொரணை இல்லாமலே இருப்பார்கள்..சின்ன குழந்தைகளாயினும் அடுத்தவர்கள் முன்னிலையில் உடுப்பில்லாமல் திரியக் கூடாது என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி வைக்க வேண்டும்..சிலர் வீட்டில் யார் இருந்தாலும் சரி ஒன்னுமில்லாமல் குழந்தைகளை திரிய விடுவார்கள்.
   இன்று உஷாராக இருந்தாலே அங்கங்கே மறைவாக கேமராவில் வீடியோ பதிவு செய்வது நடக்கிறது இதில் வெக்கமும் இல்லாமல் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்..குறிப்பாக வெக்கமில்லாத அம்மாக்களை பார்த்து வளரும் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் வாய்புகள் ரொம்பவே அதிகம்.
   சமீபத்தில் ஒரு பிரபல துணிக்கடைக்கு குழந்தைகளுக்கு துணியெடுக்க போயிருந்தேன் அங்கு ஃபிட்டிங் ரூமில் வெளியே ஒரு ஆளை நியமித்திருந்தார்கள்...அந்தம்மா வெளியில் காவல் நின்று கொண்டிருந்தது.நான் மகளின் ட்ரெஸ் போட்டு பார்ப்பதற்காக ஃபிட்டிங் ரூம் போக உள்ளே நுழைந்ததும் சரியான எரிச்சல் வந்தது.அந்த காவல் பெண்ணை தாண்டி உள்ளே போனதும் வரிசையாக பல பல குட்டி உடைமாற்றும் ரூம்கள்..அதில் இரு ரூமில் பெண்கள் கதவை அடைக்காமலேயே வெளியே  நிற்கும் அம்மாக்கள் அத்தைகளுக்கு போட்டு காட்டிக் கொண்டிருந்தார்கள் அங்கு சின்ன பிள்ளைகளும் அம்மாக்களின் இந்த கோலத்தை பார்த்துக் கொண்டிருந்தது .அட்லீஸ்ட் ஒரு கதவையாவது அடைத்து வைக்கலாம்..என் மகள் என்னிடம் "அய்யே "என்று சொல்லி சிரித்தாள்..சின்ன குழந்தைகளுக்கு தெரியும் இந்த வெக்கம் கூட இந்த பெண்களுக்கு இல்லையே என்று நொந்து கொண்டேன்.அதுவும் சமீப காலமாக இவ்வளவு படித்தும் கேட்டுமா இப்படி என்பதை நம்பவே முடியவில்லை.
   வெளியே வந்துவிட்டு அடுத்த துணிகளை பார்த்துக் கொண்டிருக்கையில் தான் மேலும் எனக்கு பயம் கவ்விக் கொண்டது..காவல் பெண் சில நிமிடங்களுக்கு எங்கோ சென்று விட்டது..எனக்கு உள்ளுக்குள் பக் பக் என்று இருந்தது..எதாவது ஆம்பிளைகள் தெரியாமல் கதவை திறந்தால் என்னவாகும் என்று நினைத்தேன்.
   ஆண் டெயிலர்கள் அழகாக தைப்பார்கள் என்று அக்குவேர் ஆணிவேறாக உங்கள் ப்லவுசின் அளவுகளை சொல்லி தைக்ககொடுப்பதை கேட்கவே அசிங்கமாக இருக்கிறது.அம்மாமார்களிடம் சொல்லவே கூச்சப்படும் விஷயங்களை ஒரு டெயிலரிடம் எந்த ஒரு வெக்கமுமில்லாமல் எப்படி இவர்களால் சொல்ல முடிகிறது?
   ஒரு அம்மா டெயிலரிடம் தன் மகளுக்கு பட்டுபாவாடை தைக்க வந்திருந்தார்.சுமார் 8 வயதுடைய குழந்தை அது.பாவாடையின் சட்டைக்கு திறந்த ஜன்னல் கழுத்து வேண்டும் என்றும் நல்ல இறங்கி தைக்கவும் சொன்னார்..நான் எதிர்பார்க்காதபடி டெயிலரே ஏங்க அது இந்த வயசுக்கு நல்லா இருக்காதுங்க..குழந்தைங்க இப்ப அப்படியெல்லாம் போட்டா அசிங்கமாக இருக்கும் என்று சொன்னார்..எனக்கு உள்ளுக்குள் ஒரே சந்தோஷம்.
  என்று தான் திருந்துவோம்?
 பெண்கள் சுடிதார் அணிகையில் தயவு செய்து உள்ளே உள்ளாடை அணியவும்...சேலைக்கு ப்லவுஸ் தைக்கையில் கணமான நிழலடிக்காத துணிகளாக வாங்கவும்...நிச்சயமாக உங்களுடைய உள்ளாடைகள் வெளியே தெரிவது யாரையும் கவருவதில்லை மாறாக ரொம்பவே அசிங்கமாக இருக்கிறது..இருசக்கர வாகனங்களில் சேலை கட்டி பயனிக்கும் பெண்கள் கட்டாயம் உடை சரியாக இருக்கிரதா என்று சரிபார்க்கவும்..கொஞ்சம் இறக்கமாக தைக்கவோ சேலை கொண்டு மறைக்கவோ செய்யலாம்..இல்லையென்றால் பின்னாடி வரும் ஆட்டோக்காரன் மாட்டிவண்டிக்காரன் கூட கேவலமாக தான் பார்ப்பான்

10 comments:

ஹுஸைனம்மா said...

எந்தக் காலத்தில இருக்கீங்க தளிகா? இப்பல்லாம் “அப்படியிப்பிடி” தெரியிற மாதிரி டிரஸ் பண்ணாத்தான் புதுமைப் பெண்கள். என்னது, ஆண் டெய்லர்கள்ட்ட அளவுகள் சொல்றதுக்கு வெக்கப்படுறதா? சம உரிமை, ஆண்-பெண் சமத்துவம் இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு? ஹி.. ஹி.. :-)))))))))))

இப்படியெல்லாம் சொன்னா நம்மளை “பழமைவாதி”, “முஸ்லிம்னாலே இப்படித்தான்”னு முத்திரை குத்திடுவாங்க தளிகா. காலம் போற போக்கு அப்படியிருக்கு. டிவில டான்ஸ் ஷோக்களில் சின்னப் புள்ளைங்க உடுத்திருக்க டிரஸ்சைப் பாத்தாலே ‘பக்’னு இருக்கு, அம்மாமார்கள் எப்படித்தான் அனுமதிக்கிறாங்களோன்னு. ஒண்ணூம் சொல்ற மாதிரியில்லை. நாமதான் கவனமா இருந்துக்கணும்.

ஜெய்லானி said...

நான் சொல்ல வந்ததை பாதியை ஹுஸைனம்மாவே சொல்லிட்டாங்க ...டெய்லர் ஷாப்பில அவங்களே நேரிடையா அளவு குடுப்பதை (எடுப்பதை ) இன்னும் நீங்க பாக்கலைன்னு தோனுது. கேட்டா அப்பதான் ‘கரெக்டா’ இருக்குமாம் ..இதை எங்கே போய் சொலறது....

எது சம உரிமைன்னு இன்னும் குழப்பத்திலதான் பெரும்பாலோனேர் இருக்காங்க ...!!!!!!

ஜெய்லானி said...

***என்னுடைய அட்வைஸ் ஒன்னு ஏற்கனவே என் பிளாகிலேயே போட்டுட்டேன்****

மறந்தும் கூட டிரையல் ரூம் பக்கம் போய்டாதீங்க. உங்களுக்கே தெரியாத கேமராக்கள் அங்கே இருக்கு. எதுவாக இருந்தாலும் வீட்டிலேயே போய் பார்த்துக்கொள்ளவும்

RAZIN ABDUL RAHMAN said...

சகோ தளிக்கா

இதை உங்களை போன்ற பெண்கள் தான் பேசமுடியும் இந்தக்காலத்தில்,அப்படி நீஙக பேசினாலும்,இப்போ உங்களை பட்டிக்காடு அது இதுன்னுடுவானுக..
குறிப்பா இதப்பத்தி ஆண்கள் தப்பித்தவறி வாய் எடுத்துவிடக்கூடவே கூடாது...ஆணாதிக்கம் அது இதுன்னு சண்டைக்கு வந்துருவாங்க..

ஆடையில் தவறும் ஒழுங்கு குழந்தைகளையும் பாதிக்கும் என்ற கருத்து நாம் உணராத ஒன்று..அதை உணரச்செய்கிறது இந்தப்பதிவு..

ஆள் பாதி ஆடை பாதி என்பர்..ஒருவரின் நடத்தை,ஒழுங்கு,அவரை பாதி தீர்மானித்தால்,மீதியை அவரின் ஆடைதான் தீர்மானிக்கிறது...

பெண்களின் இத்தகைய ஆபாசமான ஆடை,அவர்களைவிட பார்ப்பவர்களை அதிகம் கூசச்செய்யும்..

நிறைய எழுதலாம்..

அன்புடன்
ரஜின்

Jaleela Kamal said...

தளி என்ன செய்ய சில ஜென்மங்களுகு ஏறுவதே இல்லை

//பெண்கள் சுடிதார் அணிகையில் தயவு செய்து உள்ளே உள்ளாடை அணியவும்...சேலைக்கு ப்லவுஸ் தைக்கையில் கணமான நிழலடிக்காத துணிகளாக வாங்கவும்.../
சரியா சொல்லி இருக்கீங்க
நானும் நிறைய பேருக்கு இப்படி போகிரவரக்ளாஈ நேருக்கு நேராவே போய் சொல்லி இருகேன்

தளிகா said...

ஹுசேனம்மா ரொம்ப குறும்பி.நாம என்ன பர்தா போடு என்றா சொல்கிறோம்..இன்றைய ஜெயலலிதா,சோனியா காந்தி அவங்க அளவுக்கு கன்னியமா உடையணியாட்டாலும் பேசிக்கான சில மானப்ப்ரச்சனைகளான சில உடை விஷயங்களை கடைபிடிக்கலாமே என்று தானே சொல்றோம்..உங்கட வேலை மாறுதல் ஸ்டேஷனரி டிப்ஸை படிச்சு இன்னமும் என் சிரிப்பை நிறுத்தின பாடில்லை;-)

தளிகா said...

வாங்க ஜெய்லாணி சார்..ஆம்பிளைகள் கூட இதை சொல்லி புரியவைக்க வேண்டிய நிலமை..ஹூம் பதிவு போட்டதில் சதோஷம்..

வாங்க சகோதரர் ரசின்.நீங்கல்லாம் சொன்னாலாவது புரியுதா பார்ப்போம் யாரும் இம்மாதிரியானவர்களை ரசிப்பதில்லை என்று..

தளிகா said...

ஆமாம் அக்கா...எனக்கு சந்தேகமெல்லாம் எப்படி அவங்க கணவன்மார்கள் இதையெல்லாம் விட்டு வைக்கிறார்கள் என்பது தான்.சரி சொந்தமாக நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியாட்டாலும் அவங்க கண்ணு எங்க போகும்??
சொல்லி ப்ரியோஜனம் இல்லை..நகைச்சுவை ஒன்றை சொல்ல வேண்டும்னா என் கணவர் தனது ஃப்ரென்டை பாத்து பேசிட்டு திரும்புகையில் ஃப்ரென்ட் சொன்னாராம் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு போங்க இப்ப என் வைஃப் ஆஃபிஸ் விட்டு வந்துருவாங்க அவங்க ரொம்ப அழகா இருப்பாங்க பாத்துட்டு போங்க என்று..அவர் வந்து சொல்லி வியக்கிறார் இப்படியும் இரு ஆளா என்று;-)

Asiya Omar said...

நல்ல நச்சின்னு சொல்லி இருக்கீங்க.

தளிகா said...

நன்றி ஆசியாக்கா..
நல்ல தலை முதல் கால் வரை உடையால் மறைத்து கொண்டு காலை தேய்த்து தேய்த்து சரக் சரக் என்று நடந்தால் அதுவும் கேவலமாக தான் இருக்கும் பார்க்க.
அதுவே சேலை கட்டினாலும் அழகாக அங்கிங்கு தெரியாமல் ஒழுங்காக நடந்தால் பார்க்க ரம்மியமாக இருக்குமில்லையா ஆசியாக்கா

Post a Comment