பிரசவத்திற்கு பின் வரும் டிப்ரெஸ்ஷன் கேள்விப்பட்டிருக்கிறேன்.சொந்தங்களில் பார்த்ததும் உண்டு..ஆனால் இவ்வளவு பயப்பட வேண்டிய விஷயம் என்று நினைக்கவே இல்லை.
நேற்று எங்களுக்கு தெரிந்த உறவுக்கார பெண் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டது..முழுக்க முழுக்க டிப்ரெஷன் மட்டுமே காரணம் வேறெந்த ப்ரச்சனையும் இல்லாத சந்தோஷமான குடும்பம்
குழந்தை பிறந்ததிலிருந்து வழக்கத்துக்கு மாறாக அதிக ஆத்திரம் கொள்வதும், அழுவதுமாக இருந்தது ..ஆனால் எந்த நேரத்தில் அதற்கு அப்படி தோன்றியதோ ஆள் இல்லாது போன நேரம் இப்படி செய்து விட்டது.
இது நமக்கு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்,.நமது சொந்தபந்தத்தில் இப்படி யாருக்கேனும் இருந்தால் நிச்சயமாக நல்ல மனநலமருத்துவரிடம் காட்டி தக்க சிகிச்சை பெற வேண்டும்
இப்படிப்பட்ட நேரத்தில் புகுந்த வீடு பழைய வீடு என சடங்கு சம்பிரதாயம் பார்க்காமல் நல்லபடியாக சிகிச்சை செய்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்
இப்படிப்பட்டவர்கள் பிரசவமான பின் அதிக ஆத்திரம் கொள்வது,அழுவது,குழந்தையை கவனிக்காமல் இருப்பது,அல்லது குழந்தையை பற்றி அதிக பயம் கொள்வது,அனைவரிடமிருந்தும் ஒழுங்கி பேசாமல் இருப்பது,சம்மந்தமில்லாததை பேசுவது,இடம் பொருள் தெரியாமல் பேசுவது,தன்னம்பிக்கை இழந்தும் ஷக்தி இழந்தும் சோர்வாக காணப்படுவது,எதையோ பரிகொடுத்தது போல் சோகமாகவே இருப்பது,அவ்வப்போது காரணமில்லாமல் அழுவது,தூக்கமில்லாமல் தவிப்பது,சாப்பிட மறுப்பது,குழந்தையை அடிக்கவோ காயப்படுத்தவோ முயற்சிப்பது போன்ற அறுகுறிகளை காட்டுவார்கள்..
அதனால் இப்படிப்பட்ட எதுவேனும் தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
எனினும் சாதாரண்மாகவே சிலருக்கு கோபமும் அழுகையும் இந்த சமயத்தில் அதிகமாக காணப்படலாம்.நாள் செல்ல செல்ல இம்மாதிரி அறிகுறிகள் கூடிக் கொண்டே வந்தால் நிச்சயமாக நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்