Pages

Tuesday, 30 November 2010

தைய்யல்

இன்று வீட்டில் போடுவதற்கேற்ற பாகிஸ்தானி லான் மெடீரியல் எடுத்து வந்தேன்..துணி சும்மா பஞ்சு போல இருக்கும்..விலை ரொம்ப குறைவு..ஒரு செட்டுக்கு 25 திர்ஹம்ஸ் தான் ஆகும்..ஆனால் தைக்க கொடுக்கவோ 35 திர்ஹம்ஸ்..மனசு வருமா??வராது
அதனால் நான் இன்று ஒரு முடிவெடுத்திருக்கேன்...நானே தைப்பது என்று..ஏழு வருஷம் முன்பு இரண்டு வார தைய்யல் க்லாஸ் போணேன்..ஆனால் அதெல்லாம் மறந்து போச்சு ஆனால் மனசு வச்சு முயன்றால் தச்சுடலாம்னு தோனுது.
  என்ன சொல்றீங்க?
பிள்ளைகள்தூங்கும்போது தான் துணியை விரிக்கவே முடியும்..பார்ப்போம்

Monday, 29 November 2010

கடுப்பு

கறுப்பு காட்டன் பேனுட்டுக்கு ஏற்ற நல்ல லாங் டாப்ஸ் எதுவும் கிடைக்குமா என்று பார்க்க போணேன் ....நானும் பார்க்கிறேன் பார்க்கிறேன் எல்லாமே ட்ரான்ஸ்பரென்ட் சட்டைகள்..அதற்குள் ஒரு டீஷர்டை போட்டுவிட்டு தான் இதை அணிய முடியும்..நம்மூரில் கவுண்டமணி,வடிவேலு சட்டை தான் இப்ப இங்க ஃபேஷன்.. கலிகாலம்

Sunday, 28 November 2010

ஹிஹீ



In India
Outside India
Mother-in-law
A woman capable of making your life miserable.
A woman you never fight with, because where else you will find such a dedicated baby sitter for free ?
Husband
A boring human species, who listens more to his mother than you, and orders you around to serve him, his parents and siblings.
Still boring, but now a useful human species that comes in handy when the house needs to be vacuumed.
Friend
A person whose house you can drop into any time of the day or night and you'll always be welcome.
A person whom you have to call first to check and make sure he is not busy.
Wife
A woman who gives you your underwear and towel when you go to take a shower.
A woman who yells at you not to leave tub dirty when you go to take bath.
Son
A teenager, who without asking will carry your grocery bags from the market.
A teenager, who suddenly remembers he has lot of homework when you start mowing the lawn.
Daughter
A lovely doll, who brings tears to your eyes during her marriage.
A lovely doll, who brings you to tears long before her marriage.
Father
A person you are afraid of, and who is never to be disobeyed .
A person to whom you pretend to obey, after all he is the one paying your college tuition.
Indian Engineer
A person with a respectable job and earning lots.
A person without a secure job, who always dreams one day he will be rich.
Doctor
A respectable person with OK income.
A money making machine, who has a money spending machine at home called 'doctor's wife'.
Bhangra
A vigorous Punjabi festival dance.
A dance you do, when you don't know how to dance.
Software Engineer
A high-tech guy, always speaks in American accent, always anxious to queue in the consulate visa line.
The same hi-tech guy, who does Ganapati Puja everyday, and says 'This is my last year in the US (or whenever)'every year.
A Green Card holder bachelor
the guy can't speak Hindi, parents of good looking girls are dying to hook him, wears jacket in summer, says he has a BMW back there.
the guy can't speak proper English, wears jacket all the time, works in a Candy store at Manhattan, dreams of owning a BMW


Good one..lol :-)

Saturday, 27 November 2010

சுஷி

ரொம்ப நாளா என் கணவர் சுஷி வாங்கனும் சுஷி வாங்கனும்னு சொல்லிட்டிருந்தார்..வேணாங்க கண்டதெல்லாம் போட்டிருப்பாங்க என்றேன்..அதனால்  கேட்காமல் நானில்லாத போது போய் வாங்கிட்டு வந்தார்..
 நான் கிச்சனில் இருந்தேன்.  கிச்சன்லிருந்து நான் வெளிய வரவும் இவர் விளக்கெண்ணை குடிச்ச மாதிரி உக்காந்திருந்தார்..என்னாச்சு என்றேன்..இ ஹி ஹீ சுஷீ என்று ஒரு சிரிப்பு.
நல்லா இருக்கா என்றேன்..ஆன் பரவாயில்லை நல்லா தான் இருக்கு என்றார்...எனக்கு அவர் முகத்தை வைத்தே புரிஞ்சாலும் வெளிய காட்டிக்காம சரி அப்ப சாப்பிடுங்க எனக்கு வேண்டாம் என்றேன்..எனக்கு இப்ப வயிறு ஃபுல் பிறகு சாப்பிடுறேன் என்றார் நைசாக .பிறகு ஓரக்கண்ணால் ஒரு கள்ளச் சிரிப்பு.
  நான் தான் சொன்னேனே சஹிக்காதுன்னு பிறகேன் வாங்கினீங்க.பாக்க ஆசையா இருந்துச்சு ஆனா சஹிக்கலை என்றார்..பிறகென்ன வாங்கினதுக்கு ஃபோட்டோவாவது எடுப்போம்னு படம் புடிச்சேன்...என் மகள் கலரை கண்டு ஓடி வந்து மூடியை திறந்துட்டு மூக்கை பொத்திட்டு "யக்க்" என்று ஓடிட்டாள்

Friday, 26 November 2010

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்

ஒரு கப் அளவிற்கு 4 ஸ்ட்ராபெரி பழங்களும்,3/4 கப் குளிர்ந்த பாலும்,1 ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து அடிக்கவும்.இன்னும் சுவை கூட்ட ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீம் சேர்க்கலாம்.
  இதையெல்லாம் கண்டால் என்னை மாதிரி பயப்படுபவர்கள் லோ ஃபேட் மில்கும்,தேனும் சேர்த்து அடிக்கலாம்..சுவை அவ்வளவா இல்லாவிட்டாலும் நல்ல சத்தான பானமாக இருக்கும்

A Sales Girl in a Chennai Store- Truly Inspirational Real Story

 


 



A Sales Girl in a Chennai Store- Giri Trading (Truly Inspirational Real Story)

 
  ==========================================================
After the Temple Darshan at the Kapaleeswarar Koil at Mylapore we entered the "Giri Trading" stores and started searching for this Book on "Thatva Bodha" 
  
We found many people buying various Books and CDs and from their smart walks and accumulation of CDs from Bhajans to Bombay Jaishree, sent a nice feeling in us, that we have come to the right place indeed. 
  
I was looking for this Book while my wife started collecting Bharathiar's songs and MS's Music. I searched everywhere for this Book. 
  
There was this Girl, standing next to the Cashier, sincerely watching all our movements -a dark complexioned Girl, should be from a nearby Village, might be 17 or 18, should not have crossed 8th Std., might be out of poverty she is here.. all my Journalist's brain unnecessarily calculated about this Gullible Girl..and tho' she was repeatedly watching me, I ignored her and started searching for "Thathva Bodha" 
 
I saw many books from "Sandhya Vandanam" to Swami VIvekananda's "Chicago Speech" but having spent a good 40 minutes. I looked at her, she also looked at me curiously. I asked her, knowing fully well that such a girl cannot have any idea of anything, leave alone "Thathva Bodah" 
  
"Sir, may I help you?" (in Tamil)
"Yes. I am looking for 'Thatva Bodha' " 
"Sanskrit Text or English/Sanskrit?" 
 
God..she knows. 
"Sanskrit & English" 
"Do you like to have the Publication from Chinmaya Mission or Indu Publications or by Ramakrishna Mutt?" 
"I dont know..I just want to only Learn you see..I dont really know indeed" 
"Do you read Tamil Sir?" 
"Yes I am a Tamilian " 
(thinking to myself how most of mylife time I like to act in most otherplaces that I am not)
 
"Then Sir, you can take this"..she ran to the shelf where I had searched for 30 minutes, removed the books in the front and came out with a Book in Tamil. 
"This one in Tamil by N.Sivaraman by Indu Publications infact is simple and wonderfull. You have the Sanskrit Text too inside." 
My God. Why did I under estimate such a Genius. Just because of my Arrogance that I am an NRI. Or Just because I presumed such a Black, dark complexioned, gullible girl, who would have come for this job out of absolute poverty, wouldn't have any idea of "Thatva Bodha" 
  
I decided to change my attitude and realized that I am absolutely an 'Idiot' at this moment in front of this wonderful girl and submitted myself in all humility. 
  
"Madam, I really don't have any idea of even who wrote 'Thatva Bodha' till yesterday. I just attended a lecture on this subject and was fascinated by the lecture and hence...."
"Did you attend Goda Venkateswara Sastri's lecture in Bharathiya Vidya Bhavan?" 
"Oh God. How did you know?" 
"He regularly takes classes on such subjects. In fact he is one of the best Sir, in the city on such subjects." 
"You are interested in such subjects?" 
"Yes Sir, I read a lot about Swami Vivekananda and Ramakrishna and Thathva Bodha incidentally is my favorite Subject" 
"You mean to say you have read Thatva Bodha?"
"I have read this one by Sivaraman and once you read it you won't feel like keeping that book on the table at all." 
"Why what is so great about this Book?" 
"Sir,you must be joking that you don't know about 'Thatva Bodha'." 
"Really I accept my ignorance." 
 
My wife was watching from the corner, admiring all her CD collections. 
"Sir,according to me if you read this it gives the entire Vedanthic Saramsam and to say it in-one-word you become a bit more humble in life, leaving Ahamkaram once for all."
"Is it a fact that reading this simple book one would get so humble?" 
"Of course one should  be involved totally into the text. Needs lot of conviction and devotion." 
  
My wife joined the conversation and she felt this girl is indeed a very very talented intelligent girl, so she told me "Why don't you interview her for Washington Post. Why at all you should think of Paris Hilton?" 
I also felt that I owe something to her. So I asked her whether she can spare sometime for an interview. 
She politely refused saying "My boss is to give me permission. Besides many people are looking for guidance like you and hence I have to go." 
"What is your name?" 
"Kalaivani" 
  
My wife's admiration for her devotion to duty and her total involvement in her work, made her go direct to the Boss "Sir,that girl Kalaivani." 
"Yes very hard working Girl." 
"This is my husband Viswanath." 
"Nice meeting you Sir" 
"He is the Senior Journalist in Washington Post." 
The Boss stood up."Washington Post?" 
"Yes Sir. I wd like to interview this girl. I am highly impressed with her ethics." 
Boss called her. Time was 5:45 Pm. 
"Kalaivani, they have come all the way from USA, they would like to spend sometime with you. Can you?" 
"Sir, there are so many customers waiting for some guidance. it is a rush time. If they can come again tomorrow." 
"OK. I can come again tomorrow." 
I again came next day morning leaving all my appointments with 'Times of India' just to see this girl. It was no rush hour. My wife and myself found out. 
  
Kalaivani is from a nearby village near Arcot. She has 5 sisters. She is the eldest one. Her father was a drunkard and he died a few years ago caring for none of them. Her mother used to work as a helper in Masonry and passed away two years back, leaving all the 6 on the streets.
This girl who had completed her 9th std decided to search for a job and 'Giri Trading' came forward to help her out. She brought all her 5 sisters with her and with her meagre salary she is taking care of them. All the 5 sisters are going to a nearby Chennai Corporation School. 
"Kalaivani. But when did you get this enthusiasm to learn about 'Thatva Bodha'?" 
"Sir after joining here,I decided that the best way to be of help to the customers is to know the Subject first. I took small Books on Swami Vivekananda and started reading..I found the subject so fascinating..I decided to read other books in Tamil like Bagavad Gita and Viveka Choodamani. Thats how." 
"What is your salary?" 
"Rs 2500, Sir." 
"Are you able to manage all your expenses with the 5 sisters?" 
"Not at all Sir, but the Boss helps me a lot." 
"What is your aim in LIfe?" 
"I want all my sisters to get education. Then they would get easily employments is it not?" 
 
"If I give monthly Rs 10,000 for meeting all your expenses, would that suffice?" 
"It is indeed too much, but that also I would accept only through my Boss." 
  
We took her to the Boss and told him that we would like to send Rs.10,000 every month so that all her sisters' education would be completed.  
The Boss said "She deserves it Sir. You can trust me - I will hand over the amount to her every month or alternately you can open an account in her name and start transferring to the account." 
  
My friend John Paul, who is the Regional Manager of 'Times of India' had also come with me. He said "You have done a good thing." 
My wife said "I pray that 'Karpagambal' helps Kalaivani to become an expert in 'Vedantha' and start giving lectures in USA. We can arrange for her lectures."
We left wonder struck! If we go into the interiors of India, how many more 'Jewels' like Kalaivani can be found!!        
I really became humbled.


மெயிலில் வந்தது..ரொம்பவே என்னை கவர்ந்தது

Wednesday, 24 November 2010

வயிறு குறைய

    அப்படியே பலகை போல ஒட்டின நடிகைகளின் வயிறை கண்டால் யாருக்கு தான் ஆசை வராது.கொஞ்சம் குண்டா இருந்தாலும் பரவாயில்லை ஆனால் தொப்பை விழாமல் பார்த்துக் கொண்டால் என்ன உடை அணிந்தாலும் அழகாக தெரியும்...
    ஆனால் நமக்கே உரியது வயிறு..வயிறு விழாத பெண்கள் நம்மில் ரொம்ப கம்மி தான்..பிரசவமானால் எப்படியும் வயிறு வந்துவிடும்..நாம சாப்பிடும் சாதமும் ஒரு காரணம் என்கிறார்கள்..எது எப்படியோ வயிறு குறைய ஒரு சின்ன உடற்பயிற்ச்சி
தரையில் ஒரு மேட்டை விரிச்சு குப்புற படுத்துக்கனும்..பிறகு வலது கைய்யால் வலது காலையும் இடது கைய்யால் இடது காலையும் பின்னால் பிடிச்சுக்கணும்..அதாவது கொலுசு போட்டதை போல கைய்யால் பிடிச்சிக்கனும்.பிறகு தலையை நெஞ்சோடு சிறிது உயர்த்தனும்..இப்ப பார்க்க நாம ஒரு சின்ன கப்பல் போல இருப்போம்...பிறகு இரண்டு காலுக்கும் இடையே அரையடி இடைவெளி மெயின்டெயின் பன்னிகிட்டே இடது புறம் வலது புறம் உருளணும்.இப்படி தினமும் 50 முறை உருளலாம்..முதல் சில நாள் கொஞ்சம் கொஞ்சமாக செய்து எண்ணத்தை கூட்டலாம்..செய்து பழகிட்டால் நிறைய முறை செய்யலாம்.செய்ய கஷ்டமா இருக்கவங்க செய்ய வேண்டாம் சுளுக்கிக்கும்

  சுலபமா புரிஞ்சுக்க எனக்கு தெரிஞ்ச மாதிரி வரஞ்சு வச்சிருக்கேன்

Tuesday, 23 November 2010

பாவம் அம்மா

  தெரிந்தவரது குழந்தை சுடுநீரில் கைய்யை போட்டு விட்டு வெந்துவிட்டது.சரி தப்பு தான் கவனிச்சிருக்கனும் ஆனால் இதெல்லாம் நடந்து முடிந்தபின் என்ன செய்யனும்..இனி இருக்கும் வேலையை பாக்கனும் கவனமாக இருக்கனும்
   அதை விட்டுவிட்டு ஆள் ஆளுக்கு அந்த பெண்ணையே திரும்ப திரும்ப திட்டலாமா...அது பாவம் பல வருஷம் கழிச்சு கிடைத்த குழந்தை நல்ல கவனித்து கொள்வாள் .அன்று சிலின்டர் திடீரென தீர்ந்துவிட்டதென அவசரத்தில் குழந்தையோடு கிச்சனில் போயிருக்கிறாள்.சைடில் குழந்தை கைய்யை போட்டுவிட்டது.
  நானும் எல்லோரும் திட்டுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தேன்..செம்ம கடுப்பு.குழந்தைகள் விஷயத்தில் கவனமா இருங்க இப்படி எல்லாருமே அம்மாவுக்கு தான் டோஸ் தருவார்கள்.

கட்லெட்டுக்கு கிழங்கு

யார் சொன்னது கட்லெட்டுக்கு உருளை கிழங்கு தான் போட்டு மசிக்க வேண்டுமென்று..வாழைக்காய் வேக வைத்தது,மரவள்ளி கிழங்கு,கருணைகிழங்கு, என எல்லா கிழங்கு வகைகளும் மசித்து சேர்க்கலாம்

Monday, 22 November 2010

கீத்ரி சிறிதானாலும் மூத்ரி பெரிசு

என் குட்டி கசின் கவிதா க்ரிஷ்ணமூத்ரி என்றாள்..அவளிடம் "கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரிசு "என்று சொல்ல சொன்னேன்..இப்படி தான் சொன்னாள்:-D

Sunday, 21 November 2010

பேனா பிடித்த மான்குட்டி

என் பொண்ணுக்கு புடிச்ச பொழுதுபோக்குன்னா அது புத்தகமும் பேனாவும் தான்..அதை வச்சுட்டு எழுதுவாங்க எழுதுவாங்க எழுதிகிட்டே இருப்பாங்க.
  நாள் முழுக்க சுவற்றோட ஒட்டி நின்னுகிட்டு எழுதுறது,சாப்பிட சாப்பிட இடது கைய்யால் எழுதுறதுன்னு கற்பனையால் பார்த்த எல்லாத்தையும் வரைந்தும் வைப்பாள்...
   ஒருநாள் வெளியே போகிறப்ப பேபர் பேனா கொண்டு போகனும் என்று கெஞ்சினாள் ....ஒரு வழியாக சம்மதித்தேன்..எனக்கோ கோவம் ரோட்டிலும் நின்று நின்று அங்கங்க கடைகளின் சுவற்றில் வைத்தும் எழுதிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்..எனக்கோ கடுப்பு ஆனால் அவளோ பெருமையாக நான் அம்மா மாதிரியே எழுதுவேன் என்று சொல்வாள்.
   ரோட்டில் போகிறவர்கள் சின்ன பிள்ளை என்னமா எழுதுது என்று  ஆச்சரியத்துடன் எட்டி பார்த்து விட்டு என்னையும் பார்த்து சிரித்து விட்டு போவார்கள்..எப்படி அவ பாஷையில் எழுதினது தான் இது


என் மகள் இப்படி ஒருநாள் இதை வரைந்து வைத்திருந்தால் ..என்ன வரைஞ்சிருக்கே என்றதற்கு "இதுவா ஸ்பாஞ்ச் பாப் க்ரூப் டான்ஸ் பன்னுறாங்க"என்றாள்

Saturday, 20 November 2010

மருதாணி

என் பொண்ணு பிறந்த பிறகே பெருநாளுக்கு மருதாணி வைக்க முடியவில்லை...சில முறை அவசரமாக கிறுக்கியிருக்கிறேன்.ஆனால் முன்பு என்னை மருதாணி பைத்தியம் என்றே வீட்டில் கூப்பிடுவாங்க.
  சின்ன வயதில் சுமார் நாலு வயதிலெல்லாம் யாராவது மருதாணி வச்சா அழுதுட்டு ஓடிடுவேனாம் அவ்வளவு பயமாம்..என்ன காரணம்னெல்லாம் தெரியாது ஆனால் மருதாணி வச்ச கை தலையில் பூச்சு வச்சு பார்த்தால் எனக்கு ரொம்ப பயமாம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவேனாம்...அது எப்படி பிறகு மாறுச்சுன்னு நியாபகம் இல்ல.
  ஆனால் விவரம் தெரிஞ்சபின் எனக்கு மருதாணின்னா ரொம்ப இஷ்டம்..நடு ராத்திரி தூக்கத்துல கூட மருதாணி கலையாம இருக்க கைய்ய தூக்கி வச்சுட்டே தூங்குவேன்னு அம்மா சொல்வாங்க..அதுவும் நடுராத்திரி எங்காவது உதிந்து விழுந்திருக்கான்னு நைட் லேம்ப் பக்கமா போய் உத்து பாத்துட்டே இருப்பேனாம்..அந்தளவுக்கு தூக்கம் கெட்டாலும் மருதாணி கலையக் கூடாதுன்னு நெனைப்பேன்..
   என் கல்யாணத்துக்கு முன் வரை மருதாணி வைக்காத பெருநாளும் விசேஷமும் இல்லை..ஆனால் மகள் பிறந்தபின் அது நடக்கவே இல்லை..மருதாணி வச்சு அடுத்த அஞ்சு நிமிஷத்தில் எதாவது வேலை வரும் அதனாலேயே வைக்க மாட்டேன்.ஆனால் இம்முறை ஒரு தீரா ஆசை எப்படியும் வைத்து விட வேண்டும் என்று.
  அப்படியே பக்ரீதுக்கு முந்தின நாள் ராத்திரி பிள்ளைகள் தூங்கின பின் போடலாம் என காத்து காத்திருந்து மணி பனிரெண்டு..பொண்ணு ஒரு வழியா தூங்கிடுச்சு மகன் தூங்கவே காணோம்..ஒருவழியா ஆட்டி ஆட்டி அவனை 1 மணிக்கு தூங்க வச்சேன்..எனக்கு அதுக்குள்ள தூக்கம் கண்ணை சொக்க ஆர்ம்பிச்சுடுச்சு...இருந்தாலும் மருதாணி ஆசை ஒரு பக்கமா இருக்க விட போரதில்லைன்னு அவசர அவசரமா போட்டேன்...ரொம்ப சந்தோஷமா இருந்தது.

   அந்த டிசைன் தான் இது.அவங்கவங்களுக்கே போடுரப்ப இடது கைய்யில் மட்டும் தானே வைக்க முடியும்.அடுத்த நாள் மகள் கேட்டாள் அம்மா ஏன் இந்த கைய்யில் வைக்கவில்லை என்று..இந்த கைய்யால் எனக்கு போட முடியாதே என்றேன்..நான் வச்சுவிடவா என்றாள்..சரி பொண்ணு ஆசைபடுதே என்று கைய்யை காட்டினேன்...அவள் போட்டு விட்டாள்...


அவர் சிரித்து கொண்டே என்ன தைரியத்தில் கைய்யை கொடுத்தாய் என்றார்..மகள் ரொம்ப தெளிவாக "அப்பா நான் இடியப்பம் வரஞ்சுட்டிருக்கேன்" என்றாள்.

Monday, 15 November 2010

தாளிக்கிற பொழுது

 தாளிக்கிற பொழுது என்றும் கடுகு போட்டதும் ஒரு மூடி போட்டு மூடிவிடவும்.தீயை அணைத்த பிறகு கறிவேப்பிலையும் போட்டு மூடி விடவும்..இப்படி செய்தால் சமையல் மேடை எல்லாம் எண்ணை பிசுபிசுப்பாக இருக்காது.

Sunday, 14 November 2010

child proofing

அதாவது சின்ன குழந்தைகளை தைரியமாக நாமே ஒரு ஐந்து நிமிடம் கண் படாமல் போனால் கூட ஆபத்தில்லாமல் தனியாக விடக் கூடிய அளவுக்கு வீட்டை தயார்படுத்துவது தான் இது.
 இதனை செய்ய குழந்தை பிறந்து தவழும் வரை காத்திருக்க தேவையில்லை ஏன்னா அப்ப நேரம் பத்தாது.பிரசவத்துக்கு முன்னமே இதனை செய்து விடுவது நல்லது.
  பொதுவாகவே குழந்தைகளுக்கான எந்த பொருளுக்கும் விலை அதிகம் தான்...ஏன்னா நமக்குன்னா கூட வேண்டாம் என்று அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம் பிள்ளைகளுக்குன்னா விலையை பற்றி அதிகம் யோசிக்க மாட்டோம்.


எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் டிப்ஸ் 


1)முதலில் மாடிப்படி இருந்தால் அங்கு ஒரு தடுப்பு வைக்கவும்...இல்லையென்றால் குழந்தைகளை அதிலிருந்து இறக்கவே ஒரு ஆளை நியமிக்க வேண்டும்.
2)மெயின் டோர் ,கிச்சன் இதற்கு தடுப்பு வைப்பது ரொமவே அவசியம்..ஊரில் என்றால் நாம் விரும்பிய மாதிரி சின்ன மரத்தாலான தடுப்பு நாமே செய்ய கொடுக்கலாம்
3)எல்லா அலமாரிகளுக்கும்,குளிர்சாதரனபெட்டிக்கும் நல்லதொரு சைல்ட் லாக் வைத்து விடலாம்.
4)கூர்மையான முனை கொண்ட ஃபர்னிசர்கள் இருந்தால் அதன் ஓரங்களில் மண்டை இடித்தாலும் பெரிசா அடிபடாத்ற்கான கார்னர் குஷன்ஸ் கிடைக்கும்..அதனை பொருத்தி விடலாம்
5)வீட்டிலுள்ள எல்லா கூர்மையான பொருட்கள்,முக்கியமான பொருட்கள் மற்றும் இதர திரவங்கள்,ஸ்ப்ரே முதலியவற்றை குழந்தையின் கைபடாதவாறு முன்னமே இடம் மாற்றி விடலாம்..ரொம்ப அதிகம் செலவில்லாமல் சின்ன சின்ன பலகைகள் கிடைக்கும் அதனை சுவற்றில் ஆங்காங்கு பொருத்தி விட்டால் எல்லாத்தையும் ஸ்டோரேஜ் பாக்சில் போட்டு உள்ளே வைத்து விடலாம்
6)டைனிங் டேபிளில் என்றுமே வைத்திருக்கும் எண்ணை,சாஸ்,உப்பு சர்க்கரை கூட குழந்தைகள் விட்டு வைக்காமல் ஏறி எடுக்கும்..டைனிங் டேபிளில் மேலும் இப்படி மரப்பலகைகளை பொருத்தினால் அங்கு அத்தியாவசிய பொருட்களை வைக்கலாம்
7)ஃபோனை மேலே ஆணி அடித்து மாட்டி விடலாம்
8)இப்பல்லாம் ஒரு ஸ்டைல் சாவிய மறந்து வெளிய போனால் புருஷன் ஆஃபீசிலிருந்து சாவிய கொண்டு வந்து தரும்வரை நாம தெருவில் தான்..சின்ன குழந்தைகளை உள்ளே வைத்துக் கொண்டு சும்மா ஒரு கார்பேஜ் ரூமுக்கு என்னவோ நியாபகத்தில் போனால் கூட இப்படி நேரலாம்..கூடுமானவரை இம்மாதிரியான கொடைச்சல்களை மாற்றி விட்டு சாதா அந்தகால தாழ்ப்பாளகளை வைப்பது தான் நல்லது.
   எல்லா ரூமுக்கு வெளியேயும் குட்டி தாழ்ப்பாளை பொருத்தினால் உபயொகித்தாத நேரம் ரூமை அடைத்து போடலாம்
9)ஜன்னல் பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் உட்கார்ந்தோம் என்றால் அழகு போனாலும் பரவாயில்லையென்று சோஃபாவை அங்கிருந்து மாற்றி வேறிடத்தில் வைக்கலாம்...வெளிநாட்டில் ஜன்னல்களுக்கு தடுப்புகம்பிகள் அதிகம் வைப்பதில்லை...பிள்ளைகள் குதிக்கும் கதைகளை அடிக்கடி கேட்கிறோம்
10)எல்லா பவர் சாக்கெட்டிலும் குழந்தைகள் விரல் நுழையாதவாறு பொருத்தப்படும் தடுப்புகளை பொருத்திக் கொள்ளவும்..இது ரொம்பவே முக்கியம்
  11)கதவுகளில் கைவைத்தால் விரல் நசுங்கி விடும்..இதனை தடுக்கவும் டோர் ஸ்டாப்பர் கிடைக்கும்.இதனை கதவுகளில் பொருத்தி வைப்பதோடு அடுத்தவர்கள் வீட்டுக்கு போகிறபொழுது முக்கியமாக கைப்பைய்யில் போட்டு எடுத்து செல்ல வேண்டும்.
குழந்தைகள் அதிகம் உள்ள வீட்டில் எல்லா வாண்டுகளும் கதவை அடைத்து தான் விளையாடும் ..நாம் குழந்தை உள்ள அறை கதவில் பொருத்தி விட்டு நம்ம அரட்டையை பார்க்கலாம்
மேலே சொன்ன பல பொருட்களும் ஒரு கிட் டாகவே குழந்தைகளுக்கான கடைகளில் கிடைக்கும்..

Friday, 12 November 2010

இப்ப உன்கிட்ட கிட்ட கேட்டேனா??

   பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை..வழக்கம்போல் நான் காண்பிக்கும் மருத்துவரிடம் தான் கொண்டு போவேன்.எனக்கு தெரிந்தவர்களின் அட்வைஸ்
"நீங்க காம்மிக்கிற டாக்டர் சரியில்ல இல்லன்னா இப்படி அடிக்கடி சளி பிடிக்குமா"இது அவங்க

"ஏங்க அடிக்கடி சளி பிடிக்கிறதுக்கு டாக்டரா காரணம்..மகள் ஸ்கூளுக்கு போய் கொண்டு வர்ரது தான்..இது சகஜம் தான்" இப்படின்னு நான்
"அய்யோ பிள்ளைக பாரு சளி வந்து வந்து சோந்து போயிடுச்சுக(அப்படியொன்னும் அம்மா எனக்கே தோனலை)  எங்க டாக்டர்ட கூட்டிட்டு போங்க நல்லா பாப்பார்"

தெரியாதனமா இதுக்கு நான் சொன்ன பதில் "இல்லைங்க எனக்கு இந்த டாக்டர் தான் பிடிச்சிருக்கு..தேவையில்லாம மருந்து எழுதி தள்ள மாட்டார்..மட்டுமில்ல த்வையில்லாம ஆண்டிபயாடிக்கும் தரமாட்டார்"..தேவையா எனக்கு??

அடுத்த நாள் அங்க ரவுன்ட் கட்டி குடும்பத்தோட நிக்கிறாங்க..அந்தம்மாவின் கணவர் எனக்கு அட்வைஸ்
"ஏங்க பிள்ளைக என்ன அவஸ்தை படுது(எனக்கில்லாத கவலையா உங்களுக்கு???)

எங்க டாக்டர் போனதும் ஒரு ஆண்டிபயாடிக் எழுதி தருவார் எல்லாமே சீக்கிரம் மாறிடும்(ஓஹ் அப்படியா சரி சரி)

மட்டுமல்ல பிறகு ரொம்ப நாளைக்கு வேற எதுவுமே வராது(அடேங்கப்பா சூப்பர் கண்டுபிடிப்பு)

நீங்க இப்படி இந்த டாக்டர்ட காமிப்பதனால தான் இப்படி..இந்தாள் சளிக்கு இருமலுக்கு சரியா மருந்து தர்ரதில்ல(போயா நீ வேலையா பாத்துட்டு)"

வயசுக்கு ரொம்ப பெரியவங்கன்னதால சும்மா இருந்துட்டேன்..தவறான கருத்துக்களை புரிஞ்சு வச்சதுமில்லாம அடுத்தவங்களுக்கு இது தான் சரின்னு அழுத்தமா சொல்லியும் கொடுக்க அப்பப்பா ரொம்ப திறமை தான் வேணும்.
 அதென்னமோ நம்மாளுக நிறைய பேருக்கு இப்படி ஒரு ப்ரச்சனை இருக்கு..சின்ன குழந்தைகளுக்கு தேவையில்லாமல் இருமல் சளி மருந்து கொடுக்க கூடாது...நல்ல டாக்டர்கள் அதை தேவையில்லாமல் எழுதவும் மாட்டார்கள்
   ஆண்டிபயாடிக் என்பது பேக்டீரியல் இன்ஃபெக்ஷனுக்காக தருவது அதற்கு மட்டும் தான் கேட்கும்..ஆனால் சாதாரணமாக குழந்தைகளுக்கு வைரல் இன்ஃபெக்ஷன் தான் அதிகம் வரும்...பேக்டீரியல் இன்ஃபெக்ஷன் என்றால் காய்ச்சல் ரொம்ப அதிகமாகவும் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்தும் போய் விடும்.
   சில நல்ல டாக்டர்கள் ஓரிருநாள் பொறுத்து பார்ப்பார்கள்..சிலர் எனக்கென்ன போச்சு என்று முதல் முறையே எழுதி அனுப்பி விடுவார்கள்..அவங்களை எதுக்கு சொல்லனும்..நம்ப பேஷன்ட்ஸ் அப்படி..மருந்தே தரமாட்டார் அந்த டாக்டர் என்று தான் சொல்லுவாங்க.
   இப்படி வேண்டாத அட்வைசை தேவையில்லாம அடுத்தவங்களுக்கு கொடுக்க வேண்டாமே.

தொண்டை வலி

குழந்தைகளுக்கு தொண்டை வலி/ இன்ஃபெக்ஷன் இருந்தால் சின்ன  வெங்காயம் 3 ஐ மிக்சியில் ஒரு அடி அடித்து சிறிது தண்ணீர் சேர்த்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதனுடன் கல்கண்டு கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனால் கொடுக்கலாம்..தினம் இருவேளை இப்படி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்

பெரியவர்களுக்கும் இது நல்ல மருந்து தான்

Monday, 8 November 2010

அம்மாவுக்கு தான் லொள்ளு

ரெண்டு வாரம் முன்னாடி ஒரு தோழி வீட்டுக்கு போயிருந்தேன்...தோழி என் அம்மா வயதொத்த தோழி நான் தான் விவரமா ஆண்டின்னு கூப்பிட்டு கவுத்திருக்கனும்;-)...அக்கான்னு தான் கூப்பிடுவேன்.
    இதுவரை அவங்களை தான் பாத்திருக்கேன் ஒழிய பிள்ளைகளை பார்த்தது கிடையாது.மூத்த பெண் போஸ்ட் க்ரேஜுவேஷன் முடிந்து வேலக்கு போகிறது..சுமார் 23 வயதிருக்கும்.
    அன்று நான் போனபொழுது வேலை விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தர் மகள்..இவங்க என்னை காட்டி "இந்த ஆண்டியை தெரியுமா உனக்கு"
  நான் ஒரு கண் துடிதுடிக்க விவேக் மாதிரி நிலைகுலைந்து விழலாம் என்று இருந்தேன் அப்ப சரியா அந்த பொண்ணு "ச்சீ ஆண்டியா போங்கம்மா..."என்று அக்கா என்று அழைத்தாள்....
   எனக்கு மூச்சு வந்தது..ஹிஹீ
இந்த வயசை மறைச்சுட்டு குறைச்சுட்டு நடக்கும் கேஸ் நானில்லை என்றாலும் ஒரு நாலு வயசு வித்யாசத்துக்கு ஆண்டின்னெல்லாம் கூப்பிட்டா நான் பேஜாராகிடுவேன்னு நினைக்கிறேன்.
   பரவாயில்லை பொண்ணு விவரமா தான் இருக்கு போணா போகட்டும்..
    இந்த டிவியில பாத்திருக்கீங்களா...புதுசா கல்யாணம் ஆன சின்ன பசங்களையெல்லாம் கூட அன்கில் அன்கில் நு வெக்கமில்லாம கூப்பிடுவாங்க சில ஆன்கர் பொம்பளைகள்

Sunday, 7 November 2010

கீரை பாட்டி

எனக்கு வயது 12.எங்கள் வீதியில் காலை ஏழு மணிக்கெல்லாம் ஆஜராகிடுவார் கீரை பாட்டி.
   "கரிசிலாங்கண்ணி,பொன்னாங்கன்னிகீரே,முருங்கை,அகத்திக்கீரே,கீரே கீரே கீரே "
  இப்படி அவர் சவுன்ட் கொடுத்தால் வீதியே கேட்கும்...பச்சை பசேல் என்ற கீரையும் தலையில் கூடையுமான கீரை பாட்டி தான் சிறு வயது என்று வருகையில் என் மனதில் அடிக்கடி வந்து போகும் படம்.
   கீரை பாட்டி பார்க்க ஐஸ்வர்யமாக இருப்பார்..தலையில் பெரிய கொண்டை அதை சுற்றி கறுப்பு வலையால் கொண்டையை பத்திரமாக கலையாமல் வைத்திருப்பார்..,லேசாக முன்னோக்கி நிற்கும் பல்லும் ,ஒல்லியாக தேகமுமாக அழகாக இருப்பார் பார்க்க.
   ஒருநாள் அடுத்த வீதியில் கீரே கீரே கேக்குது..அம்மாவுக்கு அன்று கீரை வேண்டுமென்பதால் கீரை பாட்டியை மிஸ் பன்னிவிடாமல் நான் முன்னாடியே ஓடி போய் அழைக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த ரோட்டுக்க்கு போய்விடுவார்.
  நான் பின்கதவு வழியாக சத்தம் கேட்டு எட்டி பார்த்தேன் கீரை பாட்டியை வர சொன்னேன்.
  அன்றும் வழக்கம் போல் வந்தார்.அம்மா கீரை வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது பாட்டி கேட்டார்
"என்னாம்ணீ இன்னைக்கி 3 கட்டு கீரை"
"அண்ணன் வந்திருக்கார் பாட்டி..அண்ணனுக்கு கீரை ரொம்ப பிரியம்"சொன்னது அம்மா
"எந்த ஊருலிருந்தம்னி அவிக வந்தது?"
"துபாயிலிருந்து பாட்டி"
"அதேன் கீரைக்காசப்படுறார்..அங்கெல்லாம் வாடி வதங்கி போய் தானே கெடைக்கும்"
"அதெப்படி பாட்டி உங்களுக்கு தெரியும்" நான் கேட்டேன்
"துபாய் போனதில்லம்னீ ஆனா சிஙப்பூர்,மலேஷியா,பேங்காக் போயிருக்கேன்"
"என்ன பாட்டி சொல்றீங்க??" நான் ஆவலுடன்
"ஆமாம்மா தாத்தா இறந்தப்றம் கீரை விக்க வந்துட்டேன் அதுக்கு முன்ன இந்த மூனு ஊரு மட்டுமில்ல நம்ம நாட்டுல நான் சுத்தி பாக்காத ஊரு இல்ல தெரியுமா"
"எப்படி பாட்டி???நான் கேரளா மட்டும் தான் பாத்திருக்கேன்..அங்கெயெல்லாம் எப்படி போணீங்க"
"ப்லைட்டுல தேன்"
"போங்க பாட்டி விடாதீங்க..இதெல்லாம் ரீல் நம்ப மாட்டேன்..நீங்க ஃப்லைட்டுல போணீங்களா"
அசட்டு சிரிப்போடு என் அம்மாவை பார்த்து "புள்ளக்கி சந்தேகம் பாரம்னீ"
"கண்ணு நான் சொன்னா நம்ப மாட்டே..ஃப்லைட்ல ஏறினா தக்காளிப்பளமாட்டம் கொமரிக நம்ப சினிமா நடிகைகள காட்டிலும் அழகா இருப்பாங்க ஃப்லைட்ல முட்டாய் தருவாங்க,சாப்பாடு போடுவாங்க,சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க..ஃப்லைட்ல பறக்குறப்ப பெரிசா தெரியும் நம்ப வீடெல்லாம் மேல போக போக குட்ட்டியாகிடும்..அப்படியே மேகத்துக்குள்ள ஃப்லைட் பறக்கும்பாரு சினிமாவா நெசமான்னு நம்பவே முடியாது..உம்ம் அதெல்லாம் ஒரு காலம்
  ஆனா கண்ணு அங்கன இருக்கும் டாய்லெட் நல்லா இருக்காது..வெள்ளைக்காரனுகளுக்கு அதான் போல சேர் போட்டாப்ல இருக்கும்.குட்டியா இருக்கும்..அங்கன இங்கன நிண்ணு திரிய எடம் பத்தாது"
"ஃப்லைடல இதெல்லாம் கூட உங்களுக்கு தெரியுமா பாட்டி" நான் நம்பவே இல்லை
"அட பாப்பாவுக்கு சந்தேகம் தீரவே இல்ல " என்று வாய் விட்டு ஒரு சிரிப்பி சிரித்து விட்டு சொன்னார்
"அப்பாருக்கு சொத்து சொகத்துல பஞ்சமே இருக்கல.கணேஸ்(மகன்) பொறந்துதல இருந்து எங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..ஊருல இருக்குற பல ஏக்கர் நெலம் எங்களுது தான்...அந்த காலத்துல எங்களுக்கு மாச வருமாணம் பல ஆயிரம்..அப்பாருக்கு ஊர் சுத்த ரொம்ப இஷ்டம் அதனால நாங்களும் ஒன்னா நல்லாவே சுத்தியிருக்கோம்
  தாஜ் மஹால் கூட பாத்திருக்கேன்,உங்கூர்ல கூட போய் பல நாள் தங்கியிருக்கோம்..பைய்யன் கனேஸ் நல்லா படிப்பான்.ஒரே மகன்..வூட்டுக்கரருக்கு கொஞ்சம் குடிப்பழக்கம் இருந்தது..லிவர் போயிடுச்சு..அவுரு உடம்பு சரியில்லாம சீக்கிர செத்து போயிட்டாரு..யார் கண்ணு பட்டுச்சோ எப்படியெல்லாமோ எங்கள விதி துரத்த ஆரம்பிச்சுது...ஏக்கர் ஏக்காரா தோப்புக்களை விக்க வேண்டி வந்துச்சு.மிச்ச மீதி எதுவுமில்லாம வித்தோம்..எனக்கான ஒரே சொத்து எம்பைய்யன் கனேஸ் தான்"
இப்ப நான் சற்று மவுனமாகிவிட்டேன்..ஆனால் என் ஆவல் இன்னும் கூடிக் கொண்டே போனது..."இப்ப ஏன் பாட்டி கீரை விக்கிறீங்க"
கண்ணில் தரதரவென கண்ணீர்..நான் கொஞ்சம் பயந்து விட்டேன் ..தப்பா கேட்டுட்டேனோ என்று பயந்து விட்டேன்
என் முகமெல்லாம் மாறியதை கண்டு "பயப்புடாதே கண்ணு..கனேஸ் நல்லா படிப்பான்..சின்ன வயசுல நல்ல கான்வென்ட் ல படிக்க வச்சோம்.அவிக அப்பா இறந்தப்ரம் கவரமன்ட் பள்ளிக் கூடத்துக்கு மாத்திட்டேன்..பைய்யன் எதுவும் சொல்லாம நல்லா படிப்பான்...அவன் பள்ளுகூடத்துல அவந்தேன் எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட்
  பைய்யனுக்கு வக்கீலாகனும்னு ஆசை...ஆசைக்கேப்பா அவன் ராத்திரி பகலில்லாம படிப்பான்.பட்டப்படிப்பு முடிச்சான் மேற்படுப்பெல்லாம் படிச்சாணாத்தா...
  அன்னிக்கு ஒரு நாள் ஓடி வந்தான் "அம்மா நல்ல வேலை கெடச்சுடுச்சுன்னு..இனி நீ கீரையெல்லாம் விக்காதேன்னான்
  அவன் ப்ரெட்னுக இனிப்பு வேனும்னு கேட்டானுக..எல்லாருக்கும் இனிப்பும் வாங்கி மதியானம் சாப்பாடும் வச்சு ப்ரென்டுகளுக்கெல்லாம் விருந்து வச்சேன்..னைட் வரைக்கும் ப்ரென்டுகளோட அரட்டையடுச்சான்..அடுத்த நாளுக்கு வேலைக்கு சேரனும்..காலைல எழுந்து நேரமா குளிச்சு சாமி கும்பிட்டு புது வேலைக்கனுப்பலாம்னு போணேனாத்தா"
  மறுபடியும் அழுகை..நிசப்தம்
"பாட்டி வேண்டாம் பாட்டி விட்ருங்க"
  என்னை தட்டி தந்து விட்டு "காலைல கட்டில தூங்கிட்டிருந்தவனை எழுப்பினேன்...திரும்பாம படுத்திருந்தான் ...நான் திருப்பி போட்டேன் அவ்வா அவ்வா ந்னு என்னை கூப்பிடறான் வாய் வரல...நாக்கு சுருண்டுடுச்சு.கை கால் அசையல..உடம்பெல்லாம் மரத்து போச்சு..என்ற கண்ணுக்கென்னாச்சுன்னு எனக்கொண்ணும் புரியல..என்னை விட உசரமான எம்புள்ளைய என் மடியில இழுத்து வச்சுட்டு கத்தினேன்..பக்கத்துலிருந்து ஆளுக கூடி ஆஸ்பத்திரி கொண்டு போணோம்..வாதம்னு சொன்னாங்க..அதோட எல்லா கனவும் தீந்து போனது"
இது சொல்லி முடிக்க நானும் அம்மாவும் அழுதோம்
"இப்ப?" அம்மா தயக்கத்துடன்
"தங்கப்பல் அண்ணாச்சி கட தெரியுமாம்னீ??? அங்கன காலங்காத்தால 7 மணிக்கு ஓரமா ஒக்காந்திருப்பான் அதேன் என் கணேஸ்"
என்னால் நம்ப முடியவில்லை...ஒரு கறுப்பு சட்டையும் சில புத்தகங்களுமாக ஒரு கம்பீரமான வக்கீலை நான் கர்ப்பனை செய்து வைத்திருந்தேன்.
 அண்ணாச்சிக்கடையில் நான் பார்த்த கணேஸ் ஒடிந்து போன உருவம்,இழுத்து இழுத்து உடம்பை தள்ளி கொஞ்சம் தூரம் போக முடியும்..என்னவோ பேசுவார்..வழக்கமாக கேட்பதால் தங்கப்பல் அண்ணாச்சிக்கு மட்டும் சிலது புரியும்..நான் அதுநாள் வரை ஏதோ ஒரு மனநோயாளி என்று நினைத்திருந்தேன்"
"இப்ப அம்மான்னு கூப்பிடுவாம்மா..வேறெதுவும் வெளங்காது..வகீலு பேசாம போனா எப்படிம்மா??.ஆனா நான் பெத்தவளாச்சே எம்புள்ள பேச்சு எனக்கு புரியும்..எங்கண்ணு அம்மா நான் ஒரு நா வக்கீலாவேன்னு தான் இன்னிக்கும் சொல்லிகிட்டிருக்கு"
கண்ணை துடைத்து விட்டு மீதி காசை தந்து விட்டு வார்த சிரிப்பை வரவழைத்து விட்டு எழுந்து போய் விட்டார்..

Friday, 5 November 2010

ஊருக்கு போறீங்களா??

வெளிநாட்டில் உள்ளவர்கள் ஊருக்கு போகும்போதும் சரி ஊருக்கு போய் வந்ததும் சரி எல்லா பொருட்களும் அலைமோதும் அதில் பல முக்கியமானவைகள் காணாமற்போகும்
 எப்பொழுதும் ஊரில் இருக்கும்போது என்று தனியாக ஒரு ட்ரேவெல் பேக் வைத்து அதில் ஊரிலுள்ள லாக்கர் சாவி,அங்கு உபயோகிக்கும் க்ரெடிட் கார்டுகள்,அங்கு உபயோகிக்கும் சிம் கார்டுகள்,அங்கு பயணிக்கும்பொழுது உபயோகிக்கும் ட்ராளியின் சாவிகள் முதலியவற்றை வைக்கலாம்
   இந்த மாதிரி விஷயங்களை அங்கு போய் தேட வேண்டாம்

விபத்துக்கள்

எதிர்பாராமல் சில விபத்துக்கள் யாருக்கும் எப்பொழுதும் ஏற்படலாம்..உதாரணத்திற்கு தீ விபத்து .எவ்வளவோ குடும்பங்களில் தீ விபத்துக்கள் நேர்ந்தால் பிறகு மிச்ச மீதி எதுவுமே இருக்காது.
  என்றுமே முக்கியமான டாக்யுமென்ட்ஸை ஒரே இடத்தில் வைக்க வேண்டும்...நமது வார்ட்ரோபிலேயே ஒரு இடத்தில் வேறேதையும் வைக்காமல் அதில் ஒரு சூட்கேசினுல் எல்லா முக்கியமானவைகளையும் வைக்கலாம்.
    1)குடும்ப அங்கத்தினர்களுடைய பாஸ்போர்டுகளை ஒரு சின்ன பாஸ்போர்ட் பேகில் வைக்கலாம்
    2)நாம் படித்த செர்டிஃபிக்கேட்டுகளை எல்லாம் ஒரு பைய்யில் அடுக்கி வைக்கலாம்
    3)நகைகளை சேகரிக்கும் பழக்கம் இருந்தால் இடையிடையே தங்க நாணயங்களையும் வாங்கி சில நாணயங்களை அதில் போட்டு வைக்கலாம்
    மேற்கண்ட எல்லாவற்றையும் ஒரே பெட்டியில் வைத்தால் அவசரத்திற்கு எடுத்துக் கொண்டு ஓட வசதியாக இருக்கும் 
   

Thursday, 4 November 2010

நடை உடை பாவனை

  அழகு என்று வரும்போது அதனை சொல்லும் வரிசையில் கூட நடை தான் முன்னாடி வருது..பிறகு தான் நம் உடையும் பாவனையும்.
   ஒரு மனுஷன் அழகா தெரியனும்னா முதலில் ஒழுங்கா நடக்க பழகனும்.அதுக்காக கேட் வாக் எல்லாம் வேண்டாம்...முதுகை வளைக்காமல் தோளை தளர்த்தாமல் நடக்க வேண்டும்.
   பிறகு சிலர் காலை தேய்த்து தேய்த்து நடப்பார்கள் ..பார்க்க சஹிக்காது.சின்ன குழந்தைகளாக இருக்கும்போதே இது மாதிரி விஷயங்களை சொல்லி சரி செய்து விடலாம்..அப்ப அது பழக்கத்தில் வரும்.சில பிள்ளைகள் சும்மா நிக்கிறப்பவே கால் இரண்டையும் அப்படியே முடிச்சு போட்ட மாதிரி ஒன்றின் பின் ஒன்றை வளைத்துக் கொண்டு நிற்பார்கள்.
   என்ன தான் அழகு பதுமையா இருந்தாலும் வயிற்றை தள்ளிக் கொண்டு நிக்கிறது,கூன் போட்டுக் கொண்டு நிக்கிறது நல்லாவே இருக்காது.
  ஆண் பிள்ளைகள் கூட சின்ன வயதில் ஒரு மாதிரி பெண்கள் போல நடப்பதாக இருந்தால் நல்ல முறையில் எடுத்து சொல்லி நடையை மாற்றலாம்.
  நான் பார்த்து நம் கர்பிணிகள்  ரொம்பவுமே ஒரு மாதிரி தான் நடக்கிறாங்க...மனசில் எதுவோ பெரிய நோய் வந்து விட்டது போல கர்ப்பனை பண்ணிக் கொள்வதால் தான் அப்படி சோந்து போய் முதுகை தள்ளி நடக்கிறாங்க..
  இதை பற்றி நான் நோட் பன்னினது ஒருமுறை ஒரு பாகிஸ்தானி பெண் என்னிடம் கேட்டார் ஏன் உங்க ஊர் பெண்கள் மட்டும் கர்பமானால் இப்படி சோந்து போயிடறீங்க நடக்கவே உயிரில்லாத மாதிரி தெரியுறீங்க என்று..அதன் பின் தான் எனக்கும் தோன்றியது.
   இது ஒரு இயற்கையான விஷயம் சின்ன சின்ன அசவுகரியங்கள் ரொம்ப சகஜம் அதையே பெரிசா மனதில் போட்டுக்காம எப்பவும் போல நடந்தால் பார்க்க ஒரு மாதிரியா இருக்காது.
  என்ன நான் சொல்றது?
 

Tuesday, 2 November 2010

ரொம்ம்ம்ப பெரிய்ய பாடகர்

நான் சின்ன வயதில் இந்த பாட்டு கேசட்டை எங்க பாத்தாலும் அதன் கவரில் யார் பாடியிருக்கா என்று படிப்பேன்..ஊரில் வாலிப வயதில் நிறிய மாமாக்க்ள் இருந்ததால் அவர்களுடைய பழைய கேசட் கலெக்ஷனிலும் எல்லாம் படித்து பார்ப்பேன்.
  ஒரு நாள் வீட்டில் எல்லோரும் மதியம் சாப்பாடு முடிந்து அரட்டை போட்டுட்டிருந்தாங்க..நானும் நடுவே போய் நிக்கவும்..அம்மா கேட்டாங்க இத்தனை நேரம் எங்க போயிருந்தேன்னு..நான் சொன்னேன் அம்மா கேசட்டை படிச்சுட்டிருந்தேன்
  பிறகு என் சந்தேகத்தையும் அவிழ்த்து விட்டேன்
"அம்மா இந்த கோரஸ் கோரஸ் நு சொல்ரவரு ரொம்ப பெரிய பாடகரா இருப்பார் போல...நிறைய பாட்டு அவர் தான் பாடியிருக்கார்"
  இது சொல்லி முடித்தேன்...எல்லாரும் டைனிங் டேபிளில் சிரித்து சிரித்து படுத்து விட்டார்கள்..ஏனென்று பின்னாடி தான் புரிந்தது
  அது வரை கோரஸ் ஒரு க்ரிஸ்டியனா இருப்பார்  என்று கூட நினைத்து வைத்திருந்தேன்:-(

நானா கெடச்சேன்??


   சில வருடங்களுக்கு முன்பு இங்கு நான் மதியம் ஹாஸ்பிடலுக்கு போய்விட்டு திரும்பி வறேன்..சரியா ஒரு மணி ஆகிட்டதால சாலையில் ஒரே ட்ராஃபிக் ஜாமாகிவிட்டது..நிக்கிறேன் நிக்கிறேன் டாக்சியை காணோம்.
  உச்சி வெயில் வேறு..வயிறு ஒரு பக்கம் வா வாங்குது.45 நிமிஷம் நின்னுட்டேன் என்ன செய்றதுன்னே தெரியல..அப்ப சரியா அதே இடத்தில் பார்க் பன்னியிருந்த ஒரு காரில் இருந்து ஒரு பெண் எட்டி பாத்து லிஃப்ட் வேனுமா என்றாள்..முதலில் குழம்பி போய் அருகில் சென்று பார்த்தேன் சுமார் 25 வயது மதிகத்தக்க ஒரு பெண் எங்கு போறீங்க என்றாள்...இன்ன இடம் என்றதும் நானும் அங்கு பேகரிக்கு தான் போகிறேன் லிஃப்ட் தரவா என்று கேட்டாள்..பார்த்தால் நல்ல குடும்ப பெண் போல் இருக்கிறாள் என்று கணவரிடம் ஃபோன் பன்னி கேட்டேன் ..அவருக்கு நைசாக கார் நம்பரை சொல்லிவிட்டு நான் காணாம் போனேன்ன என்னை தேடி கண்டுபுடிக்க ஏதுவா இருக்கும்னு சொன்னேன்:-)..பிறகு ஏறி உட்கார போணேன்..அப்ப தான் அவ வில்லங்கம் புரிந்தது.
    அவ கைய்யில் 1 வயதொத்த அவளது குழந்தை அதனை மடியில் வச்சுட்டு பின்னாடி உக்காறுவீங்களா ப்லீஸ் என்றாள்..அட பாவி என்னை பேபி சிட்டிங் பன்ன தான் கூப்பிட்டியா என்று மனசில் நினைத்துக் கொண்டே லட்டு போன்ற குழந்தையை வாங்கி மடியில் வைத்து பின்னால் உட்கார்ந்து கொண்டேன்..
  அப்பப்பா பிறகு நடந்ததெதுவும் நினைவிலில்லை..எல்லாம் அந்த குழந்தை பன்னின கூத்து...உருளுதா பிறளுதா ஓடுதா குதிக்குதா என்னையும் சப் சப்புன்னு அடி வேற ..அதுக்கு செம்ம பசி போல...

  பிறகு அம்மா சொன்னாள் பின்னாடி இருக்கும் பேகில் பால் புட்டி இருக்கும் அதை கொடுப்பீங்களா என்று...அம்மா தங்கமே முதல்ல அத கொடு என்று பாட்டில வாங்கி குழந்தைக்கு கொடுத்தேன்..மெல்ல அது குடித்து அளும்பு குறைந்ததும் எங்கள் இடம் வந்தது அங்கு தான் பேகரியும்.
  இறங்கி எனக்கு நன்றி சொல்ல மனசில்லாமல் நிக்கிறப்பவே அவள் காலில் விழாத குறையாக எனக்கு ஒரு பெரிய நன்றி சொன்னாள்..பொறுக்க முடியாமல் கேட்டேன் நான் இல்லையென்றால் என்ன செய்திருப்பாய் என்று.
   அதெல்லாம் பாத்தா ஷாப்பிங் போக முடியுமா மடியில் வச்சுட்டே ஓட்டுவேன் என்றாள் படுபாவி

பிரியாணி

பிரியாணிக்கு நெய்யை தான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியமே இல்லை..விருந்தினர்கள் வருகையில் மட்டும் நெய் கொண்டும் அல்லாத சமயத்தில் நமக்கு மட்டும் என்றால் சூரியகாந்தி எண்ணை அல்லது தேங்காய் எண்ணை கொண்டும் செய்யலாம்..கடைசியில் 1 ஸ்பூன் நெய்யை விரும்பினால் சேர்த்து இறக்கிக் கொள்ளலாம்.
  மேலே படத்தில் காண்பது  இறால் பிரியாணி

குழந்தைகளுக்கு எழுத்து

எழுத்துக்களை கற்றுக் கொள்ளும் சுமார் மூன்று நாலு வயதில் பிள்ளைகளுக்கு பல எழுத்துக்களும் அதுவா இதுவா என்று குழப்பமாக இருக்கும்.ரொம்ப அதுகளை தொந்தரவு செய்யாமல் ஒரு 30 நிமிடம் படிக்க வைத்து விட்டு முக்கியமானவைகளை அல்லது குழப்பும் எழுத்துக்களை சுவற்றில் பெரியதாக எழுதி கலரடித்து ஒட்டிவிடலாம்...அவர்கள் விளையாட்டுக் கிடையில் அவ்வெழுத்துக்களை பார்த்து தானாக சீக்கிரம் மனதில் பதியும்.
   என் வீட்டில் எப்ப்பொழுதுமே சுவற்றில் மகளது பாடங்கள் இருக்கும்.நான் என் மகளுக்கு ஸ்டூடென்ட் போல உக்காந்து கொள்வேன்...அப்பப்ப நல்ல கொட்டு விழுந்தாலும் கூட நான் அதிகம் கஷ்டப்படாமல் அவள் எனக்கு டீச்சராக சொல்லி தந்தே படித்து விடுவாள்.

எண்ணையில் தேதி

இப்பல்லாம் எல்லாருமே உணவு விஷயத்தில் ரொம்பவுமே கட்டுப்பாடோடு தான் இருக்கோம்.
 சாதாரண சமையலுக்கு பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணையை பிரிக்கும் அன்று அந்த பாட்டிலிண் மேல் பெர்மனென்ட் மார்கர் கொண்டு தேதியை குறித்து வைத்து விடலாம்...பிறகு அது தீரும்பொழுது எத்தனை நாளுக்கு வந்தது என்று சரியாக கணக்கு தெரியும்.இப்படி தொடர்ந்து செய்வதால் எண்ணை செலவில் நம்மையறியாமல் ஒரு கட்டுப்பாடு வந்து விடும்