ஆனால் நமக்கே உரியது வயிறு..வயிறு விழாத பெண்கள் நம்மில் ரொம்ப கம்மி தான்..பிரசவமானால் எப்படியும் வயிறு வந்துவிடும்..நாம சாப்பிடும் சாதமும் ஒரு காரணம் என்கிறார்கள்..எது எப்படியோ வயிறு குறைய ஒரு சின்ன உடற்பயிற்ச்சி
தரையில் ஒரு மேட்டை விரிச்சு குப்புற படுத்துக்கனும்..பிறகு வலது கைய்யால் வலது காலையும் இடது கைய்யால் இடது காலையும் பின்னால் பிடிச்சுக்கணும்..அதாவது கொலுசு போட்டதை போல கைய்யால் பிடிச்சிக்கனும்.பிறகு தலையை நெஞ்சோடு சிறிது உயர்த்தனும்..இப்ப பார்க்க நாம ஒரு சின்ன கப்பல் போல இருப்போம்...பிறகு இரண்டு காலுக்கும் இடையே அரையடி இடைவெளி மெயின்டெயின் பன்னிகிட்டே இடது புறம் வலது புறம் உருளணும்.இப்படி தினமும் 50 முறை உருளலாம்..முதல் சில நாள் கொஞ்சம் கொஞ்சமாக செய்து எண்ணத்தை கூட்டலாம்..செய்து பழகிட்டால் நிறைய முறை செய்யலாம்.செய்ய கஷ்டமா இருக்கவங்க செய்ய வேண்டாம் சுளுக்கிக்கும்
சுலபமா புரிஞ்சுக்க எனக்கு தெரிஞ்ச மாதிரி வரஞ்சு வச்சிருக்கேன்

7 comments:
ayyoo kaNdipaa suLukku thaan,
www.samaiyalattakaasam.blogspot.com
inkum vaangka , pazasau sariyaavarala
டிப்ஸ் அருமை.ப்ளாக் உலகிற்கு மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.வந்து அசத்துங்க.குழந்தைகள் நலமா?
ஜலீலக்கா
நீங்க சாதாரணமா சொன்னீங்க ஆனால் என்னால் சிரிப்பே அடக்க முடியவில்லை.
ஆசியாக்கா
ரொம்ப சந்தோஷம்..உங்கள் ப்லாகில் நான் ருமானாஸ் பகுதியை தான் ஆர்வமாக பார்த்து விட்டு போவேன்..ரொம்ப அழகாக குழந்தைகளை ரசித்து வளர்த்திருக்கிறார்கள்.ருமானாவை இன்னும் எங்களுக்கு செய்து காட்ட சொல்லுங்கள்
நல்ல டிப்ஸ் தளிகா! சிசேரியன் பண்ணி சில பிரச்னைகளால் வயிறு இறங்கிப்போனவர்கள் இப்படி செய்ய முடியாதுன்னு நினைக்கிறேன். அதற்கு வேறு எதுவும் வழி உண்டா தளிகா?
//சுலபமா புரிஞ்சுக்க எனக்கு தெரிஞ்ச மாதிரி வரஞ்சு வச்சிருக்கேன்//
படம் சூப்பரா வரைஞ்சிருக்கீங்களே.. என்ன, பெய்ண்ட்டில் போய் வரைஞ்சீங்களா? கொஞ்சம் சொல்லிதான் கொடுங்களேன் :)
தளி, நல்ல உடற்பயிற்சி. நான் எப்போது ட்ரெட் மில்லில் ஓடி ஒடி என் வெயிட்டை ஒரு லிமிட்டுக்குள் வைச்சிருக்கேன்.
படம் சூப்பரா இருக்கு.
ஹ்ம்ம் யோசிக்க வேண்டிய கேள்வி...இது யோகா மாஸ்டர் சொல்லி தந்தது...பெண்களுக்கான வயிறு,கர்பப்பை சம்மந்தமான ப்ரச்சனைகள் தீரவென்று இன்னொரு பயிற்சியும் சொல்லி தந்தார் ஆனால் நானும் முறையாக கற்றுக் கொள்ளாததால் சொல்ல பயமா இருக்கு..அஸ்மா ஆனால் சொல்றேனே யோகா கற்றுக் கொண்டால் இம்மாதிரியான ப்ரச்சனைகள் எல்லாம் போயே போய் விடும்..சில பெண்களுக்கு தும்மினால் சிறுநீர் கசியும் அது கூட மாறி விடும்
ஹிஹீ ஒரே வெக்கமா இருக்கு..எப்படி வரஞ்சேன்னு சொல்லி தறேன்;-)
வானதி உங்களை சொல்லவா வேணும்.இதை வரையும்போதே வானதியை இந்த போஸ்ட் பக்கமா வரவிடவே கூடாதுன்னு நெனச்சுட்டே படிச்சேன்;-)..அது உடம்பா அது புடலங்காய் கணக்கா வச்சிருக்கீங்க.
ட்ரெட் மில்னாவே எனக்கு சிரிப்பு தான்..அதை வாங்கி தர சொன்னேன் ஒருக்க கணவர் கேட்டார் "ஏம்பா இங்க இவ்வளவு எடம் இருக்கு இப்ப அது மேல தான் ஏறி ஓடனுமா" என்று:-)
தேன்க்ஸ் வானதி
Post a Comment