Pages

Sunday, 14 November 2010

child proofing

அதாவது சின்ன குழந்தைகளை தைரியமாக நாமே ஒரு ஐந்து நிமிடம் கண் படாமல் போனால் கூட ஆபத்தில்லாமல் தனியாக விடக் கூடிய அளவுக்கு வீட்டை தயார்படுத்துவது தான் இது.
 இதனை செய்ய குழந்தை பிறந்து தவழும் வரை காத்திருக்க தேவையில்லை ஏன்னா அப்ப நேரம் பத்தாது.பிரசவத்துக்கு முன்னமே இதனை செய்து விடுவது நல்லது.
  பொதுவாகவே குழந்தைகளுக்கான எந்த பொருளுக்கும் விலை அதிகம் தான்...ஏன்னா நமக்குன்னா கூட வேண்டாம் என்று அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம் பிள்ளைகளுக்குன்னா விலையை பற்றி அதிகம் யோசிக்க மாட்டோம்.


எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் டிப்ஸ் 


1)முதலில் மாடிப்படி இருந்தால் அங்கு ஒரு தடுப்பு வைக்கவும்...இல்லையென்றால் குழந்தைகளை அதிலிருந்து இறக்கவே ஒரு ஆளை நியமிக்க வேண்டும்.
2)மெயின் டோர் ,கிச்சன் இதற்கு தடுப்பு வைப்பது ரொமவே அவசியம்..ஊரில் என்றால் நாம் விரும்பிய மாதிரி சின்ன மரத்தாலான தடுப்பு நாமே செய்ய கொடுக்கலாம்
3)எல்லா அலமாரிகளுக்கும்,குளிர்சாதரனபெட்டிக்கும் நல்லதொரு சைல்ட் லாக் வைத்து விடலாம்.
4)கூர்மையான முனை கொண்ட ஃபர்னிசர்கள் இருந்தால் அதன் ஓரங்களில் மண்டை இடித்தாலும் பெரிசா அடிபடாத்ற்கான கார்னர் குஷன்ஸ் கிடைக்கும்..அதனை பொருத்தி விடலாம்
5)வீட்டிலுள்ள எல்லா கூர்மையான பொருட்கள்,முக்கியமான பொருட்கள் மற்றும் இதர திரவங்கள்,ஸ்ப்ரே முதலியவற்றை குழந்தையின் கைபடாதவாறு முன்னமே இடம் மாற்றி விடலாம்..ரொம்ப அதிகம் செலவில்லாமல் சின்ன சின்ன பலகைகள் கிடைக்கும் அதனை சுவற்றில் ஆங்காங்கு பொருத்தி விட்டால் எல்லாத்தையும் ஸ்டோரேஜ் பாக்சில் போட்டு உள்ளே வைத்து விடலாம்
6)டைனிங் டேபிளில் என்றுமே வைத்திருக்கும் எண்ணை,சாஸ்,உப்பு சர்க்கரை கூட குழந்தைகள் விட்டு வைக்காமல் ஏறி எடுக்கும்..டைனிங் டேபிளில் மேலும் இப்படி மரப்பலகைகளை பொருத்தினால் அங்கு அத்தியாவசிய பொருட்களை வைக்கலாம்
7)ஃபோனை மேலே ஆணி அடித்து மாட்டி விடலாம்
8)இப்பல்லாம் ஒரு ஸ்டைல் சாவிய மறந்து வெளிய போனால் புருஷன் ஆஃபீசிலிருந்து சாவிய கொண்டு வந்து தரும்வரை நாம தெருவில் தான்..சின்ன குழந்தைகளை உள்ளே வைத்துக் கொண்டு சும்மா ஒரு கார்பேஜ் ரூமுக்கு என்னவோ நியாபகத்தில் போனால் கூட இப்படி நேரலாம்..கூடுமானவரை இம்மாதிரியான கொடைச்சல்களை மாற்றி விட்டு சாதா அந்தகால தாழ்ப்பாளகளை வைப்பது தான் நல்லது.
   எல்லா ரூமுக்கு வெளியேயும் குட்டி தாழ்ப்பாளை பொருத்தினால் உபயொகித்தாத நேரம் ரூமை அடைத்து போடலாம்
9)ஜன்னல் பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் உட்கார்ந்தோம் என்றால் அழகு போனாலும் பரவாயில்லையென்று சோஃபாவை அங்கிருந்து மாற்றி வேறிடத்தில் வைக்கலாம்...வெளிநாட்டில் ஜன்னல்களுக்கு தடுப்புகம்பிகள் அதிகம் வைப்பதில்லை...பிள்ளைகள் குதிக்கும் கதைகளை அடிக்கடி கேட்கிறோம்
10)எல்லா பவர் சாக்கெட்டிலும் குழந்தைகள் விரல் நுழையாதவாறு பொருத்தப்படும் தடுப்புகளை பொருத்திக் கொள்ளவும்..இது ரொம்பவே முக்கியம்
  11)கதவுகளில் கைவைத்தால் விரல் நசுங்கி விடும்..இதனை தடுக்கவும் டோர் ஸ்டாப்பர் கிடைக்கும்.இதனை கதவுகளில் பொருத்தி வைப்பதோடு அடுத்தவர்கள் வீட்டுக்கு போகிறபொழுது முக்கியமாக கைப்பைய்யில் போட்டு எடுத்து செல்ல வேண்டும்.
குழந்தைகள் அதிகம் உள்ள வீட்டில் எல்லா வாண்டுகளும் கதவை அடைத்து தான் விளையாடும் ..நாம் குழந்தை உள்ள அறை கதவில் பொருத்தி விட்டு நம்ம அரட்டையை பார்க்கலாம்
மேலே சொன்ன பல பொருட்களும் ஒரு கிட் டாகவே குழந்தைகளுக்கான கடைகளில் கிடைக்கும்..

7 comments:

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி தளிகா படத்தில் இருக்கும் ரெண்டு குட்டீஸுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

இமா said...

பார்த்து வைக்கிறேன். பின்னால் உதவும். ;)

இலா said...

டிப்ஸ் அருமை.. நேரம் வரும் போது உபயேகப்படும் :)

தளிகா said...

சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு,
நீங்களும் என் வீட்டுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம்...இரண்டு கண்மணிகளுக்கும் உங்கள் வாழ்த்து போய் சேர்ந்து விட்டது:-)

தளிகா said...

இமா,இலா

எனக்கு என்னென்னவோ டவுட் எல்லாம் வருது;-)..இருந்தாலும் அதிகமா கேட்களை ..எப்ப உபயோகப்படுதோ அப்ப சொல்லிட்டு போங்க:-)

ஆமினா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

தளிகா said...

தேன்க்ஸ் ஆமினா.அங்கு ஈத் எப்படி போனது..இம்முறை எங்களுக்கு எல்லா பெருநாளை விடவும் சிறப்பாக இருந்தது.

Post a Comment