Pages

Thursday, 4 November 2010

நடை உடை பாவனை

  அழகு என்று வரும்போது அதனை சொல்லும் வரிசையில் கூட நடை தான் முன்னாடி வருது..பிறகு தான் நம் உடையும் பாவனையும்.
   ஒரு மனுஷன் அழகா தெரியனும்னா முதலில் ஒழுங்கா நடக்க பழகனும்.அதுக்காக கேட் வாக் எல்லாம் வேண்டாம்...முதுகை வளைக்காமல் தோளை தளர்த்தாமல் நடக்க வேண்டும்.
   பிறகு சிலர் காலை தேய்த்து தேய்த்து நடப்பார்கள் ..பார்க்க சஹிக்காது.சின்ன குழந்தைகளாக இருக்கும்போதே இது மாதிரி விஷயங்களை சொல்லி சரி செய்து விடலாம்..அப்ப அது பழக்கத்தில் வரும்.சில பிள்ளைகள் சும்மா நிக்கிறப்பவே கால் இரண்டையும் அப்படியே முடிச்சு போட்ட மாதிரி ஒன்றின் பின் ஒன்றை வளைத்துக் கொண்டு நிற்பார்கள்.
   என்ன தான் அழகு பதுமையா இருந்தாலும் வயிற்றை தள்ளிக் கொண்டு நிக்கிறது,கூன் போட்டுக் கொண்டு நிக்கிறது நல்லாவே இருக்காது.
  ஆண் பிள்ளைகள் கூட சின்ன வயதில் ஒரு மாதிரி பெண்கள் போல நடப்பதாக இருந்தால் நல்ல முறையில் எடுத்து சொல்லி நடையை மாற்றலாம்.
  நான் பார்த்து நம் கர்பிணிகள்  ரொம்பவுமே ஒரு மாதிரி தான் நடக்கிறாங்க...மனசில் எதுவோ பெரிய நோய் வந்து விட்டது போல கர்ப்பனை பண்ணிக் கொள்வதால் தான் அப்படி சோந்து போய் முதுகை தள்ளி நடக்கிறாங்க..
  இதை பற்றி நான் நோட் பன்னினது ஒருமுறை ஒரு பாகிஸ்தானி பெண் என்னிடம் கேட்டார் ஏன் உங்க ஊர் பெண்கள் மட்டும் கர்பமானால் இப்படி சோந்து போயிடறீங்க நடக்கவே உயிரில்லாத மாதிரி தெரியுறீங்க என்று..அதன் பின் தான் எனக்கும் தோன்றியது.
   இது ஒரு இயற்கையான விஷயம் சின்ன சின்ன அசவுகரியங்கள் ரொம்ப சகஜம் அதையே பெரிசா மனதில் போட்டுக்காம எப்பவும் போல நடந்தால் பார்க்க ஒரு மாதிரியா இருக்காது.
  என்ன நான் சொல்றது?
 

4 comments:

இலா said...

Super.. I used to wonder abt the same abt some peoples walk :)

தளிகா said...

நன்றி இலா..இதை எழுதுறதுக்கு கொஞ்ச நேரம் முன் எனக்கு பழக்கமுள்ள பழைய நண்பியை மாளில் பார்த்தேன் நான் பேசி முடிக்கும் வரை அவருடைய ப்லஸ் டூ படிக்கும் மகள் காலை முடிச்சு போட்டுட்டே நின்னுட்டிருந்தது...அப்ப மட்டும்னா நான் கண்டிப்பா அவசரமா ஒன் டாய்லெட் போலன்னு நெனச்சிருப்பேன் ஆனால் அதுக்கு முன்பு மீட் பன்னின போதும் அதே மாதிரி தான் நின்னுகிட்டிருந்தது.

ஆமினா said...

தளிகா!

நல்லா சொன்னீங்க. கர்ப்பினி பெண்கள பத்தி சொல்லும் போது தான் எனக்கு ஒன்னு சொல்ல தோணியது. என்னமோ குழந்தை கீழே விழுந்து விடுவது போல் கையை வைத்தே ரோட்டில் நடப்பார்கள். அருகில் இருப்பவர்கள் “இவுக மட்டும் தான் அதிசயமா புள்ள பெத்துக்குற மாதிரி நடக்குறா” அப்படின்னு சொல்ல கேக்கும் போது மனசுக்கு கஷ்ட்டமா இருக்கும். அழகா சொல்லியிருக்கீங்க தளிகா!

வாழ்த்துக்கள்

Learn said...

பாராட்டுகள் ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க

நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Post a Comment