வாங்க வாங்க எல்லாரும் முட்டி மோதாம பாத்து லைன் ல வந்து படிங்க..
என்ன தான் செய்தாலும் எடை குறையவே மாட்டேங்குது..செய்ய நேரமே இல்ல இதெல்லாமே வெறும் நொண்டி சாக்கு தான்..முதலில் குறைத்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்து விட வேண்டும்..கணவன்மார்களும் மனைவிகள் புறம்போக்காக வளரும் வரை விட்டு வைக்காமல் கொஞ்சம் எடை போடும்போதே உடம்பு ஏறுது கம்மி பண்ணிக்க என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து கொண்டே இருங்க அப்ப தான் ஒரு ஆர்வமும் ரோஷமும் வரும்
எனக்கு எதாவது கொரிச்சுட்டே இருக்கனும் எப்படி வாயை கட்டுறது என்கிறீர்களா...யார் சொன்னது சாப்பிடவே கூடாதென்று லைட் பாப்கார்ன் சாப்பிடலாம்,கொஞ்சம் வால்னட் சாப்பிடலாம்,கொஞ்சம் தர்பூசணி விதை வாங்கி சாப்பிடலாம்.நேரம் போவதே தெரியாது உலிச்சுக் கிட்டே நேரம் போகிடும்.இல்ல உங்களுக்கு இனிப்பாக சாப்பிட ஆசையா 1 பவுல் அவல் வெல்லம் தேங்காய் துருவல் கலந்து தாரளமாக சாப்பிடலாமே.இது சத்தானதும் கூட.
அவல் மட்டுமல்ல ராகி சேமியா கம்பு சேமியா இதையெல்லாம் கூட வெல்லம் தேங்காய் கலந்து சாப்பிடலாம்..
கை கால் உடம்பு வலிக்க உடற்பயிற்ச்சி செய்து நட நடையோன்னு நடந்து வெய்யிங் மெஷினில் தினமும் ஏறி நின்று பத்து நாள் பார்த்து விட்டு இது இறங்காது என்று நொந்து கொள்ள கூடாது..உடம்பு இளைக்க முதலில் உடம்புக்கே புரிய வேண்டும்...ஓ அம்மா நம்மை உருக்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நம்ப பருப்பு வேகாது என்று உடம்பு புரிந்து கொள்ள சில நாள் எடுக்கும்..மெல்ல குறைய ஆரம்பித்தால் அதன் பிறகு சுலபம்..அதே அளவு உடற்பயிற்ச்சியும் உணவு கட்டுப்பாடும் சரியான அளவு தூக்கமும் இருந்தாலும் நிச்சயமாக போக போக குறையும்
உடம்பு குறைகிறபொழுது எடையை மட்டும் பார்க்காமல் முகத்தையும் கண்ணாடியில் பார்க்க வேண்டும்..சிலர் வி எல் சிசி அது இது போய் குறைப்பார்கள் உடம்பு தான் போயிருக்கும் ஆனால் எல்லாரும் என்ன ஆச்சு உனக்கு எதாவது உடம்புக்கு ப்ரச்சனையா என்று கேட்கும் அளவுக்கு முகத்தில் ஒரு களையே போயிருக்கும்.
எடையை குறைக்கும்பொழுது கவனமாக குறைக்க வேண்டும்..தினசரி நிறைய பழவகைகள் பச்சை சாலட்கள் சாப்பிட பழ வேண்டும்..இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் குறிப்பாக காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.நிச்சயமாக முகம் வாடாது மாறாக முகம் பொலிவு பெறும்..கூடவே வாரம் ஒரு முறை தலைக்கு உடம்புக்கு எண்ணை தேய்த்து குளித்தால் பளபளவென ஆகி விடலாம்.
எனக்கு திருமணமாக போகிறது அல்லது ஒரு விசேஷத்துக்கு போகனும் நான் என்னென்ன செய்யலாம் என்று கேட்பவர்கள் தினமும் நிறிய பழவகிகள் சாப்பிடுங்கள் நிறைய தண்ணீர் குடியுங்க போதும்..சருமம் அவ்வளவு அழகாக இருக்கும்
தினசரி உணவில் ஒரு வேளை காய்கறி சாலட்டும் ஒரு வேளை பழங்களும் சாப்பிட பழக வேண்டும்..உடம்பை குறைக்க புதிய புதிய உணவுகளும் வித்யாசமான குறிப்புகளும் தேவையே இல்லை.
சாதத்துக்கு பதில் சப்பாத்தி சாப்பிடலாம்..எந்த குழம்பும் பொரியலும் தாராளமாக சாப்பிடலாம்...இதில் கவனிக்க வேண்டிய ஒன்று எதை சமைத்தாலும் ஒரே ஸ்பூன் எண்ணையில் சமைக்க பழக வேண்டும்.
நல்ல பெரிய அடி கனமான நான் ஸ்டிக் பேன் வாங்கிக் கொண்டு குறைந்த எண்ணையில் சமைக்க பழகிக் கொள்ளுங்கள்.எப்பவுமே நாம் பிறந்து வளர்ந்தபொழுது எதை சாப்பிட்டு பழகினோமோ அது தான் கடைசி வரை நம் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளும் என்பது என்னுடைய நம்பிக்கை
தினசரி ஒன்றிரண்டு பேரீத்தம்பழம் சாப்பிடலாம்.முன்று பாதாம் பருப்பு சாப்பிடலாம்.கொரிக்க எப்பவுமே எதையாவது வீட்டில் வைத்துக் கொள்ளலாம்..ப்ரவும் ரஸ்க் கூட வாங்கி வைத்து சாப்பிடலாம்.
மல்லாந்து தரையில் படுத்துக் கொண்டு கைகள் இரண்டையிம் இடுப்போடு நேராக தரையில் வைத்து மூச்சு இழுத்து கால்கள் இரண்டையும் உயர்த்தி சைக்கில் ஓட்டுவது போல் க்லாக் வைஸ் ஆன்ட்டி க்லாக்வைஸ் நாலு நாலு முறை சுழற்றி கீழே கலை இறக்கும்பொழுது மூச்சு விடவும்.இந்த பயிற்சி கூட உடம்பு குறைய உதவும்...

12 comments:
முட்டி மோதி வந்தவங்க எல்லாரையும் அடைச்சி வச்சிருக்கீங்களா?சீக்கிரம் திற்ந்து விடுங்க,தளிகா.
டிப்ஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,பின் பற்றனும்,மெலியனும் என்ற அந்த வைராக்கியம் தான் வரமாட்டேங்குது,கொஞ்சம் நாள் டயட் இருக்க வேண்டியது,அப்புறம் பழைய குருடி கதவை திறடி கதை தான்...
ஹி ஹி இப்போதைக்கு முடியாஹ்டு
வழக்கம்போல் அருமையான டிப்ஸ்கள் தளிகா! ஹ்ம்.. எப்போதான் குறையுமோ பார்க்கலாம்.
உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். http://payanikkumpaathai.blogspot.com/2011/04/blog-post_24.html
இந்த லிங்க்கைப் பாருங்கள்.
கொஞ்சம் நாள் டயட் இருக்க வேண்டியது,அப்புறம் பழைய குருடி கதவை திறடி கதை தான்...
நானும் இப்படிதான்....
any updates on weight loss ?? kutty pillakaga easya kakka poga vaikka ( potty train) tips koduththaa... ha ha en marumagan morning to evening .. kakka.. no kakka nnu sollittu thiriya maattaarlla... pls
நன்றி ஆசியாக்கா..ஆமாம் கொஞ்சம் கஷ்டம் தான் அதுவும் நம்ப ஊர் சமையலுக்கு வாயை கட்டி உடம்பை குறைக்கிறது பெரும்பாடு இருந்தாலும் ஒரளவுக்கு மேல பெருத்து விடாமலாவது பாத்துக்கனும் இல்லையா
உடம்பு குறையவும் வேனும் ஒரு மூட்.மூட் சரியில்லையென்றால் உடம்பை கவனிக்காமலும் உடம்பு ஏறும் .பழையபடி உஷாரான பிறகு குறைச்சுடுங்க
நன்றி அஸ்மா..தொடர்பதிவு பொறுமையாக எழுத வேண்டுமல்லவா.எதாவதொன்று கை வைப்பதற்குள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலமை..பார்ப்போம் சின்னவர் கொஞ்சம் பெரிசாகும் வரை இப்படி தான் இருக்கும்
நீங்களுமா மஹாவிஜய்..நம்மாளுக எல்லாருமே இப்படி தான்.இருந்தாலும் முப்பது வயசுக்கு மேலாவது கண்டிப்பா உடல் மேல் கவனம் செலுத்தனும்
நன்றி ஸ்னேஹிதி
இரண்டு கிலோ குறைத்திருக்கேன்..மனசும் எந்த டென்ஷனும் இல்லாம இருந்தா தான் உடம்பு குறைக்கவும் சவுகரியமாக இருக்கு.இடையில் கொஞ்ச நாள் விட்டுட்டேன் இருந்தாலும் குறைச்சுடுவோம்ல.
குட்டிப் பைய்யனுக்கு டிப்ஸ் தருகிறேன் சரியா
Thanks 4 ur information
Post a Comment