Pages

Wednesday 23 February 2011

உடம்பு குறைய

 எனக்கு தெரிஞ்சதை சொல்ல போகிறேன்.வெற்றிகரமாக எடையை குறைத்துக் கொண்டிருக்கிறேன்....எப்படி எப்படி எப்படி என்று கேட்பவர்களுக்காக இதோ சில டிப்ஸ்

1)நேரா நேரத்திற்கு உணவை சாப்பிட வேண்டும்.
2)காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்..மதியத்திற்கு ஒரு அளவாக சாப்பிடவும்.இரவில் ரொம்ப கம்மியாக சாப்பிடவும்..இரவு கூடுமானவரை நான் வெஜ் தவிர்க்கவும்..அப்படியே எப்பவாவது பார்ட்டி அது இது என்றால் சாப்பிட்ட பின் 2 மணிநேரம் கழித்து கொஞ்சம் நடையோ உடற்பயிற்ச்சியோ செய்து விட்டு தூங்க போகலாம்
3)தண்ணீர் நிறையளவில் குடிக்க வேண்டும்..இப்படி பழக்கமில்லாதவர்கள் முதல் சில நாள் கஷ்டப்பட்டு அலாரம் வைத்தாவது குடிக்கலாம்..ஒரே வாரத்தில் தாகம் அந்தளவுக்கு வந்திருக்கும்..பிறகு நம்மையறியாமல் தண்ணீர் உள்ளே போகும்
4)ஒரு போதும் முழுக்க முழுக்க டயட் கன்ட்ரோல் என்று எதையுமே தொடாமல் இருக்க கூடாது..இது ஒரு வித வெறுப்பை உண்டாக்கும்..விரும்பியதை ஒன்றிரண்டு ஸ்பூன் வைத்து தினமும் சாப்பிடலாம்
5)ஐஸ் க்ரீம் ,சாக்கலேட் போன்றவற்றை தவிர்க்கவோ வாரம் ஒருமுறை சாப்பிடவோ செய்யலாம்
6)தினம் இரவு 1 கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பட்டை பொடியை கொதிக்க வைத்து சூடாறியதும் தேன் கலந்து இரவு படுக்கும் முன் 1/2 கப்பும் மீதத்தை காலை எழுந்ததும் வெறும் வயிற்றிலும் குடிக்கவும்..இது உடல் வேகமாக இளைக்க உதவும்
7)உடம்பு குறைக்க போகிறேன் என்று நாலு பேரிடம் சொல்லி வைக்கவும்..இதனால் அவர்களை அடுத்த முறை பார்க்கையில் குறைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்
8)ட்ரெஸ்ஸை 1 இன்ச் அதிகமாக கூடி தைக்க சொல்லாமல் சரியான அளவுக்கு கொடுக்கவும்
9)உடம்பு முதல் சில மாதங்களுக்கு தான் குறைக்க கஷ்டம் கொஞ்சம் குறைக்க தொடங்கிவிட்டால் பிறகு பழைபடி ரொம்பவும் கடுமையான உடற்பயிற்ச்சி கூட வேண்டாம் தாமாக உடம்பு குறையும்
10)இரவில் என்றுமே லைட்டாக உணவாக சாப்பிடவும்.காலையிலும் கூடுமானவரை ஓட்ஸ் ,சத்து மாவு,கார்ன் ஃப்லேக்ஸ் இது போல் சாப்பிடவும்..மதியம் மட்டும் 1 கப் சாதமும் மீதம் விதவிதமாக பொரியலோ குழம்போ சேர்த்து சாப்பிடலாம்..மீன் தாராளமாக சாப்பிடலாம்..சிக்கன் வாரம் ஒரு முறையும் சாப்பிடலாம்..மட்டனை கூடுமானவரை குறைப்பது நல்லது

11)குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய முடியவில்லையே என்று வருத்தம்  வேண்டாம்.அவர்களோடு எண்ணி,பாடிக் கொண்டே ஸ்கிப்பிங் செய்வதும் படுத்துக் கொண்டு முட்டியில் அவர்களை வைத்து முட்டியை மடக்கி மடக்கி தூக்கி விளையாடுவது அவரகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.உடம்பும் மெலியும்
12)துணி கைய்யால் துவைப்பது,தரை துடைப்பது நல்ல எக்செர்சைஸ்..
13)மூச்சுப் பயிற்ச்சி சிறந்த ஒன்று.அதற்கு முறையாக பயிலவோ சில தளங்களை பார்த்து கற்றுக் கொள்ளவோ செய்யலாம்
14)பகலில் தூங்குவது நல்லது தான் ஆனால் வெறும் 30 நிமிடம் தான்..மனிக்கணக்கில் தூங்குவதை தவிர்க்கவும்
15)கூடுமானவரை சும்மா இருக்காமல் எதாவது வேலையில் ஈடுபடவும்..முக்கியமாக டிவி பார்ப்பதை குறைக்கவும்..மெகா சீரியால் பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்
16நேரத்துக்கு தூங்க போய் நேரத்துக்கு எழுந்து பழகவும்

27 comments:

ஹுஸைனம்மா said...

எல்லாமே நல்ல டிப்ஸ். சரியான வழிமுறைகள். எதையுமே முழுதாகத் தவிர்க்கவும் கூடாது.

//மீன் தாராளமாக சாப்பிடலாம்//

ஆனால், நம்மவர்கள் செய்யும் தப்பு என்னன்னா, ஒண்ணு தேங்காய் மற்றும் எண்ணை அநியாயத்துக்குச் சேத்து குழம்பு வைக்கிறது. இல்லைன்னா, நல்லா பொறிச்சு சாப்பிடுறது. நான்-வெஜ் சாப்பிடறதைத் தவிர்க்கச் சொல்றதே இதனாலத்தான்.

Jaleela Kamal said...

எம்மாடி இத்தனை டிப்ஸ் களா?எல்லாம் அருமை, எல்லோருக்கும் பயன் தரும். அலாரம் வைத்து தண்ணி இது கொஞ்சம் ஓவரா இல்ல

( சாதம் சாப்பிடுவதை 2 மாதத்துக்கு விட்டு பாருங்கள் சும்மா ஜம்முன்னு ஆகிடலாம்( உண்மை தான் அதுக்குன்னு என்ன கேட்காதீஙக், என்னால சாதம் சாப்ப்பிடாமல் இருக்க முடியாது. )

அஸ்மா said...

அஸ்ஸலாம் அலைக்கும் தளிகா! அத்தனையும் அருமையான டிப்ஸ். தெரிந்ததும் தெரியாததும் கலந்து இருப்பதால் அப்படியே காப்பி பண்ணி வைத்துக் கொண்டேன் :) ஒரு நாளைக்கு 1/2 மணி நேரமாவது வாக்கிங் போவது சேர்க்கலயா?

//2)காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்..மதியத்திற்கு ஒரு அளவாக சாப்பிடவும்.இரவில் ரொம்ப கம்மியாக சாப்பிடவும்..// காலையில் அரசன் போல், மதியம் அரசி போல், இரவில் ஆண்டி போல் சாப்பிடணும் என்று இதைதான் சொல்வார்களோ.. ;)?

//3)தண்ணீர் நிறையளவில் குடிக்க வேண்டும்..//பலமுறை ட்ரை பண்ணிட்டு விட்டுட்டேன். இது ரொம்ப கஷ்டமா இருக்கு :( மீண்டும் ட்ரை பண்ணனும்.

//6)தினம் இரவு 1 கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பட்டை பொடியை கொதிக்க வைத்து சூடாறியதும் தேன் கலந்து...// அத்துடன் எலுமிச்சை சாறு..?

//7)உடம்பு குறைக்க போகிறேன் என்று நாலு பேரிடம் சொல்லி வைக்கவும்..இதனால் அவர்களை அடுத்த முறை பார்க்கையில் குறைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்// என்ன‌ காமெடியா..? :))

//8)ட்ரெஸ்ஸை 1 இன்ச் அதிகமாக கூடி தைக்க சொல்லாமல் சரியான அளவுக்கு கொடுக்கவும்// அது ஏன் தளிகா? நைட்டி அதிகமா போடுபவர்களுக்கு (அது லூஸாக இருப்பதால்) உடல் குண்டாகும் என்று ஒரு டாக்டர் சொன்னதாக கேள்விப்பட்டேன், ஆனால் நம்பல. அது மாதிரி காரணமா?

//11)... ஸ்கிப்பிங் செய்வதும்..// 19, 20 வயதுக்கு மேல் ஸ்கிப்பிங் பண்ணினால் கருப்பை சம்பந்தமான கோளாறுகள் வரும் என்று படித்திருக்கேனே தளிகா? ஒருவேளை அது தவறான செய்தியோ?

ஜெய்லானி said...

அஸ்ஸலாம் அலைக்கும் (வரஹ்)

நல்லா படிச்சிட்டேன் இது பெண்களுக்கு மட்டும்தானே சொன்னீங்க ..!!

என்னதான் சொன்னாலும் குண்டும் ஒரு அழகுதான் .:-))

ஜெய்லானி said...

நல்ல அருமையான டிப்ஸ் ..ஆனா தொடர்ந்து செய்யனுமே..!! :-))

இலா said...

kalakkalree daa.. hmm hmm nee asaththu...btw.. thanks for the tips :)

தளிகா said...

மிசஸ் ஹுசேன்,
சரியா சொன்னீங்க ஹுசேன்.தணலில் அல்லது அவனில் சுட்டு சாப்பிடுவது பெஸ்ட் .அல்லது மீன் குழம்பாகவும் சாப்பிடலாம்.நீங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.thank youu


ஜலீலக்கா சுமார் ஆறு வருஷத்துக்கு முன் என்னுடன் நடக்க வரும் பெண் சொன்னாள் அலாரம் வைத்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தால் சுலபமாக தாகம் அதிகரிக்கும் என்று..அதன் பின் நானும் ட்ரை பன்னினேன்..முயற்சி செய்து பாருங்க உடம்பு குறைய மட்டுமில்ல சருமமும் நல்லா இருக்கும்.. thank you jaleelakka

தளிகா said...

வஸ்ஸலாம் அஸ்மா

இதில் உள்ள அத்தனை டிப்ஸும் முழுக்க முழுக்க நான் எப்படி குறைத்தேனோ அது மட்டுமாக போட்டிருக்கிறேன்..மட்டுமல்ல பொதுவாக எல்லாருக்கும் தெரியும் டிப்ஸ்களை சேர்க்கலை.நான் வாக்கிங் இல்லாமல் தான் குறைத்தேன்;-)
தண்ணீர் நான் சொன்னது போல் முதல் மூனு நாளாவது கஷ்டபட்டு குடிங்க கண்டிப்பா பிறகு தாகம் அதிகரிக்கும்
இதுவும் அதே பட்டை பொடி தேன் மட்டும் தான் நான் எடுத்துக் கொண்டிருந்தேன்..எலுமிச்சை சாறு ட்ரை பண்ணியதில்லை
காமெடி தான் இருந்தாலும் எனக்கு இது கைகொடுத்தது.போன் முறை ஊருக்கு போன்பொழுது ஒரே திட்டு என்ன உடம்பு இதுன்னு..அப்பவே சொல்லிவிட்டு வந்தேன் அடுத்த முறை குறைப்பேன் என்று..சொன்ன வாக்கு காப்பத்தனும் என்றால் செய்து விடுவோம்.
நான் சொன்னது தைப்பதை இல்லை. 1 இன்ச் அதிகமா உள்ள விடுங்க என்று சொல்லும்போதே இன்னும் குண்டாக போகிறேன் என்ற எண்ணம் தான் வெளிப்படுகிறது.அளவாக தைக்கலாம் அதனால் பர்சை நினைத்தாவது உடம்பை கட்டி காப்போம்

ஸ்கிப்பிங் கர்பப்ப்பை ப்ரச்சனைகளை உண்டாக்கும் என்பதற்கு இதுவரை எனக்கு சரியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை..என் கைனகாலஜிஸ்டிடம் கேட்டதற்கு பிரசவம் முடிந்து ஓரிரு மாதம் முடிந்ததும் ஸ்கிப்பிங் செய்யலாம் என்றார்..நான் ஸ்கிப்பிங் தான் விரும்பி செய்வேன்.என் பிள்ளைகளும்;-)

அப்பாடி;-D

ஜெய்லானி said...

//அலாரம் வைத்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தால் சுலபமாக தாகம் அதிகரிக்கும் என்று..அதன் பின் நானும் ட்ரை பன்னினேன்..//

நானும் அப்படிதான் செய்தேன்.. ஆனா ஒரு நாள் கூட அலாரம் அடிக்கல...!! நானும் எழுந்திருக்கல...!! அலாரத்துக்கு பேட்டரி போடனுமா...??? ஹி..ஹி..

தளிகா said...

வஸ்ஸலாம் ஜெய்லானி சார்
அஸ்கு புஸ்கு..ஆணும் பெண்ணும் ஒரு போல உடம்பை ஒழுங்கா,அளவா வச்சுக்கனும் என்கிற எண்ணம் வேனும்.
நீங்க ஜெயலலிதா ரசிகர் போல

தளிகா said...

தேன்க்ஸ் தேன்க்ஸ் இலா..ரொம்ப ரொம்ப சந்தோஷம் ..
அது சரி தனியா ஈ ஓட்டிட்டிருந்தேன் உடம்பு குறையன்னதும் அடிச்சு புடிச்சு எல்லாருமா பதிவு போடுறீங்களே..ஹிஹிஹீ

தளிகா said...

நீங்க வில்லங்கம் புடிச்ச ஆளுன்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன்.ஆனால் இவ்வளவு எதிர்பார்க்கல..சேவ் மீ மை லார்ட்

ஜெய்லானி said...

//நீங்க வில்லங்கம் புடிச்ச ஆளுன்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன்.ஆனால் இவ்வளவு எதிர்பார்க்கல../

ஏங்க ஒரு சந்தேகம் கேக்குறது தப்பா ..? :-))எங்கே போனாலும் விரட்டுறாங்களே...அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...

//2)காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்.. //
இங்கே ((ஷார்ஜா)) எந்த ஹோட்டல்லையும் காலையில வட்டலாப்பமோ இல்லை இடியாப்பமோ கிடைக்கிறதில்லை . முனிசிபாலிட்டில கம்ளைண்ட் செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை.. யாரை போய் கேட்கலாம் ..? :-)) (( பிளீஸ் யாராவது ஒரு ஐடியா சொல்லுங்களேன் ))

Asiya Omar said...

அருமையான டிப்ஸ்.பகிர்வுக்கு நன்றி தளிகா.

இலா said...

Even I was surprised about so many comments.. thani illatha kaathila nee yarukku tea podareennu .. now you know what attracts :) I am starting pattai :)) podi let me try for a week and tell you

தளிகா said...

ஜெய்லானி சார் அதான் காஞ்ச பரோட்டாவும் கோதுமை புட்டும் கிடைக்குமே காலைல அதுவும் ஹெவ்வியா தான் இருக்கும்..திருமதியை கூட்டிட்டு வந்துடுங்க சார்


வருகைக்கு ரொம்ப சந்தோஷம் ஆசியாக்கா..thanx Asiyakka

Ila, ஆமாம் ஆமாம் ;-D..எனக்கு ஒரே சிரிப்பா வருது.ஒரு வாரம் இல்ல அட்லீஸ்ட் 3 வாரம் டைம் கொடு கூட எக்செர்சைஸ் பண்ணு...குறையும்

Jaleela Kamal said...

தளி நானும் வெயிட்ட குறைக்க ஈடுபட்டு சக்ஸஸ் ஆனாலும், பிற்கு நாளைடைவில் மறுபடி அதே நிலை தான் ,
பட்டை பொடி தேன் நல்ல வொர்க் அவுட் ஆகும் ஆனால் யார் செய்து கொடுக்க, தேன் பட்டை பொடி முன்பு மெயிலில் வந்தது நிறைய பேருக்கு பார்வேட் பண்ணேன் ஆனால் நமக்குன்னும்பொது சோம்பேறி தனம் வந்துவிடுது,
இப்ப நீங்க ஞாபகப்படுத்திட்டீஙக், அதே போல் அன்று அப்சாரவிடம் பேசும் போதும், இருமலுக்கு சொன்னாங்க
பட்டை பொடிய பொடித்து 1 மாதம் ஆகுது தேனும் ரெடி ஆன கலக்கி குடிக்க முடியல, \
கடைசியில் உங்கள் டிப்ஸ் நான் ஏற்கன்வே சொல்லி இருந்தாலும் , இத பார்த்த்தும் முயற்சிக்கலாம் என்று
முன்று நாளா குடிக்கிறேன்,
வெயிட் குறையுதோ இல்லையோ , டிசம்பரில் இருந்து அலர்ஜி இருமல், தூக்கமே போச்சு. 3 முறை ஆண்டிபயட்டிக் எடுத்து இன்னும் முடிந்த பாடில்லை. என் கை வைத்தியம் ஏதும் செல்லுபடி ஆகல (வாத்தியார் பையன் மக்கு என்பது போல)
இப்ப இது இரவு குடித்து விட்டு காலையும் குடிக்கிறேன், இருமல் கொஞ்ச்ம குறைந்து , தூக்கமும் பரவாயில்லை.

Jaleela Kamal said...

வாங்க என் பக்கமும் வந்து போங்க,,,

Jaleela Kamal said...

//நீங்க வில்லங்கம் புடிச்ச ஆளுன்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன்.ஆனால் இவ்வளவு எதிர்பார்க்கல..//

ஹா
ஹா

Suni said...

Hi thalika,
Very useful blog.
I have a 11 month old baby.
நான் தாய்ப்பால் குடுக்கிறேன். பட்டை பொடி தேனில் கலந்து குடிக்கலாமா? இதனால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா?

தளிகா said...

"வாத்தியார் புள்ள மக்கு"ஹஹஹா எத்தன நேரமா சிரிக்கிறேன்னு சொல்ல முடியல.
அதப்படி தான் அக்கா எனக்கும் அதே குணம் உண்டு..தோ உங்க வீட்டுக்கு தான் அடிக்கடி பசிம்கும்போது வந்து பாத்து ஜொள் விடுவேன்..கமென்ட் பன்றேன்

தளிகா said...

ஹாய் சுனிதா பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இருக்கும்போது டயட் எதுவுமே கூடாது என்பார்கள்...எனினும் 11 மாசம் ஆகிவிட்டதே மற்ற உணவுகளும் நிறைய கொடுத்து பழக்கியிருப்பீர்கள்..அதனால் குடிக்கலாம் என்றே நினைக்கிறேன்..ஆனால் ஓரிருனாள் குழந்தையிடம் எதாவது மாற்றம் தெரிகிறதா என்று பாருங்க.நீங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம் சுனிதா

இலா said...

not bad ! 5 lb between the time i posted here and today. i have miles(kallu :)) to go ...i feel awesome.. thank you thank you thank you. for me some one who did it shd tell me. all the ollipechans giving weight loss advice nah nah...

Unknown said...

நான் 22வயது பெண்.என்னுடைய எடை 100.5 அதனால்
gym செற்தேன்.6 மாதங்களில் 75 ஆக குறைந்தேன்.இதனால் எனக்கு side effect வருமா>

Unknown said...

நான் 22வயது பெண்.என்னுடைய எடை 100.5 அதனால்
gym செற்தேன்.6 மாதங்களில் 75 ஆக குறைந்தேன்.இதனால் எனக்கு side effect வருமா>

Post a Comment