Pages

Saturday 20 November 2010

மருதாணி

என் பொண்ணு பிறந்த பிறகே பெருநாளுக்கு மருதாணி வைக்க முடியவில்லை...சில முறை அவசரமாக கிறுக்கியிருக்கிறேன்.ஆனால் முன்பு என்னை மருதாணி பைத்தியம் என்றே வீட்டில் கூப்பிடுவாங்க.
  சின்ன வயதில் சுமார் நாலு வயதிலெல்லாம் யாராவது மருதாணி வச்சா அழுதுட்டு ஓடிடுவேனாம் அவ்வளவு பயமாம்..என்ன காரணம்னெல்லாம் தெரியாது ஆனால் மருதாணி வச்ச கை தலையில் பூச்சு வச்சு பார்த்தால் எனக்கு ரொம்ப பயமாம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவேனாம்...அது எப்படி பிறகு மாறுச்சுன்னு நியாபகம் இல்ல.
  ஆனால் விவரம் தெரிஞ்சபின் எனக்கு மருதாணின்னா ரொம்ப இஷ்டம்..நடு ராத்திரி தூக்கத்துல கூட மருதாணி கலையாம இருக்க கைய்ய தூக்கி வச்சுட்டே தூங்குவேன்னு அம்மா சொல்வாங்க..அதுவும் நடுராத்திரி எங்காவது உதிந்து விழுந்திருக்கான்னு நைட் லேம்ப் பக்கமா போய் உத்து பாத்துட்டே இருப்பேனாம்..அந்தளவுக்கு தூக்கம் கெட்டாலும் மருதாணி கலையக் கூடாதுன்னு நெனைப்பேன்..
   என் கல்யாணத்துக்கு முன் வரை மருதாணி வைக்காத பெருநாளும் விசேஷமும் இல்லை..ஆனால் மகள் பிறந்தபின் அது நடக்கவே இல்லை..மருதாணி வச்சு அடுத்த அஞ்சு நிமிஷத்தில் எதாவது வேலை வரும் அதனாலேயே வைக்க மாட்டேன்.ஆனால் இம்முறை ஒரு தீரா ஆசை எப்படியும் வைத்து விட வேண்டும் என்று.
  அப்படியே பக்ரீதுக்கு முந்தின நாள் ராத்திரி பிள்ளைகள் தூங்கின பின் போடலாம் என காத்து காத்திருந்து மணி பனிரெண்டு..பொண்ணு ஒரு வழியா தூங்கிடுச்சு மகன் தூங்கவே காணோம்..ஒருவழியா ஆட்டி ஆட்டி அவனை 1 மணிக்கு தூங்க வச்சேன்..எனக்கு அதுக்குள்ள தூக்கம் கண்ணை சொக்க ஆர்ம்பிச்சுடுச்சு...இருந்தாலும் மருதாணி ஆசை ஒரு பக்கமா இருக்க விட போரதில்லைன்னு அவசர அவசரமா போட்டேன்...ரொம்ப சந்தோஷமா இருந்தது.

   அந்த டிசைன் தான் இது.அவங்கவங்களுக்கே போடுரப்ப இடது கைய்யில் மட்டும் தானே வைக்க முடியும்.அடுத்த நாள் மகள் கேட்டாள் அம்மா ஏன் இந்த கைய்யில் வைக்கவில்லை என்று..இந்த கைய்யால் எனக்கு போட முடியாதே என்றேன்..நான் வச்சுவிடவா என்றாள்..சரி பொண்ணு ஆசைபடுதே என்று கைய்யை காட்டினேன்...அவள் போட்டு விட்டாள்...


அவர் சிரித்து கொண்டே என்ன தைரியத்தில் கைய்யை கொடுத்தாய் என்றார்..மகள் ரொம்ப தெளிவாக "அப்பா நான் இடியப்பம் வரஞ்சுட்டிருக்கேன்" என்றாள்.

10 comments:

kavisiva said...

ரூபி மருதாணி டிசைன் ரொம்ப அழகா இருக்கு. ஆனால் ரீமா குட்டி போட்டதுதான் ரொம்ப ரொம்ப அழக இருக்கு. கவி ஆன்டிக்கும் போட்டு விடுவாங்களான்னு கேளுங்க.

நானும் சரியான மருதாணி பைத்தியம். தீபாவளிக்கு ரெண்டு கையிலும் ரெண்டு பக்கமும் போட்டுக்கிட்டேன். அடுத்த வாரம் இங்கே தீபாவளி செலிப்ரேஷன் இருக்கு. அதுகும் போட்டுக்கணும். போட்டு விடணும் நிறைய பேருக்கு. ஒரு கையில் உங்க டிசைன் தான் :). கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணினா நாமே வலது கையிலும் போட்டுக்கலாம். நானேதான் எனக்கு வலது கையிலும் போட்டுக்குவேன் :)

Jaleela Kamal said...

்்அம்மா சுடும் இடியாப்்ம், பொண்ணு ்னதில் பதிந்து விடது,
பொ்்ணுக்கும் அம்்ாவுக்கு மருதாணி வைத்த சந்தஓஷம்.

Jaleela Kamal said...

நா யோசித்தேன் யாரது என்்ை மாதிரியே போட்டு இருக்காங்கன்னு

ஆமினா said...

எனக்கும் வைக்க ஆசை தான். பெருநாள் என்றால் மருதாணி இல்லாமல் இருந்ததே இல்லை என்ற காலம் மாறி இப்போ ஏங்க வேண்டியதா இருக்கு! ஆனாலும் கோன் வைக்க புடிக்கல தளி. அரைச்ச மருதாணியில் இருக்கும் சுகமே தனி தான்...

குட்டி பொண்ணு போட்ட டிசைன் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! :)

தளிகா said...

கவி என் பொண்ணு ஆளை கிடைக்காம கவலையோட இருக்கா..கைய்ய நீட்டுங்க இப்பவே ரெடி..ச்சீச்சீ இதை போட்டுடாதீங்க இதை பாத்து வரஞ்ச ஒரிஜினல் படம் அனுப்புறேன் போடுங்க அது அழகா இருக்கும்.
இனி வலது கைய்யில் போட்டு பாக்கனும்.அதுகெல்லாம் பொறுமை வேனும் கவி

தளிகா said...

ஜலீலாக்கா.அப்ப நீங்களும் இதே டிசைனா அக்கா?அவங்க அடுத்த முறை பரோட்டா போட்டு தருவாங்களாம்:-)

தளிகா said...

அத சொல்லுங்க ஆமினா..எனக்கும் ஆசை தான்..கைபடாத பக்குவமா அம்மியில் மை போல அரைச்சு நடுவில் தோசையும் சுற்றிலும் மினி இட்லியும் விரல் மேல் தொப்பியும் அப்படியே கைய்யை காட்டி காட்டி ஒரு பரதநாட்டியம் ஆடலாம் போல இருக்கும்..சின்ன வயதில் இப்படி போட்டுகிட்டு கண்ணாடியில் கைய்ய பாத்துகிட்டு ரசிச்சுட்டே இருப்பேன்:-)

kavisiva said...

நிஜம்மாவே நீங்க கையில் போட்டிருக்கறது அழகா இருக்குப்பா! ஒரிஜினலையும் அனுப்பி வைங்க. இங்கே நிறைய கைகள் காத்துக்கிட்டு இருக்கு. ரீமாவையும் அனுப்பி வச்சீங்கன்னா எனக்கு வேலை குறையும் :)

தளிகா said...

ஹஹஹா..சும்மா ஒரு வெளையாட்டுக்கு கேட்டேன் மருதாணி வெக்க ஒரு ஆண்டி வீட்டுக்கு போறியா அங்க எல்லாருக்கும் போட்டு கொடுக்கனுமாம்னு...ஒரு வெக்கத்தோட சிரிச்சுகிட்டே எங்க போனும் எப்ப கொண்டு போய் விடுவீங்கன்னு கேக்கிறா

kavisiva said...

ஹையா எனக்கு இப்பவே அந்த வெட்கப் படற ரீமா குட்டியைப் பார்க்கணுமே!

Post a Comment