Pages

Tuesday, 17 May 2011

சிக்கன் ப்ரெட்

எனக்கு பிடித்தமானது சமையல் நிகழ்ச்சிகள் தான்..எங்கு போனாலும் எதை பார்த்தாலும் சமையல் என்ற அம்சம் அங்கு இருந்தால் ரொம்ப சுவாரசியமாக கேட்பேன் தெரிந்து கொள்வேன் அடுத்தது செய்து பார்த்து விட்டு தான் மறு வேலை..டிவி என்ற ஒன்றை நான் போடுவதாக இருந்தால் அது அதிகம் மசாலா சானலில் காணும் சமையல் நிகழ்ச்சிகள் தான்..அதில் செஃப் ஷிரீன் அன்வர் ஒரு முறை இந்த சிக்கன் ப்ரெட் செய்து காட்டினார்..அதில் சில மாற்றங்களோடு எனக்கு பிடித்த சுவையில் செய்து பார்த்துவிட்டேன்.நீங்களும் செய்து பாருங்கள்.


விளக்கமாக கட்டம் கட்டமாக புகைப்படம் எடுக்க நேரமும் இருக்கவில்லை பொறுமையும் இருக்கவில்லை..அதனால் வரைந்த ஒரு படத்தையும் போட்டு விடுகிறேன் புரியுதா பாருங்க





தேவையான பொருட்கள்
ப்ரெட் செய்ய
மைதா - 2 கப்
பால் பொடி - 3 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
முட்டை - 1
எண்ணை - 2 ஸ்பூன்
யீஸ்ட் - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - குழைக்க

மைதாவில் பால் பொடி,உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து நடுவில் ஒரு குழி செய்து வைக்கவும்..
யீஸ்டை வெதுவெதுப்பான 2 ஸ்பூன் பாலில் கரைய விடவும்.
பின்பு மாவில் எண்ணையில் கலக்கிய முட்டையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து குழைக்கவும்
சப்பாத்தி மாவு போல் குழைத்த பின் ஈரமான துணியை போட்டு மூடி இரண்டு மணிநேரம் பொங்க விடவும்

இப்போது சிக்கன் ஃபில்லிங் தயாரிக்க
சிக்கன் - 250 கிராம் எலும்பில்லாத சிக்கனில் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து ஊறவைத்து விடலாம்
வெங்காய்ம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி&பூண்டு - பொடியாக நறுக்கியது 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி இலை - சிறிதளவு நறுக்கி வைக்கவும்

இப்போது எண்ணை கொஞ்சமாக காயவைத்து வெங்காயம் பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை வதக்கவும்
பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
அதில் ஊறவைத்த சிக்கனும்,கரம் மசாலா தூளும்,மிளகு தூளும் சேர்த்து வதக்கி வேக விடவும்
நன்கு வெந்ததும் தீயை அணைத்து மல்லி இலை தூவி இறக்கவும்
பின்பு சிக்கனை நல்ல கனமான மேஷர் கொண்டு உடைத்து விடவும்
இக்கலவையை சூடு ஆற விடவும்

இப்பொழுது சிக்கன் ப்ரெட் தயாரிக்க
  • மாவினை முதலில் நாலு அல்லது ஐந்து பாகங்களாக பிரித்து உருட்டி வைக்கவும்
  • அதே போல் சிக்கனையும் பாத்திரத்திலேயே ஐந்தாக பிரித்து வைக்கவும்
  • மாவினை பலகையில் ஓவல் வடிவத்தில் சப்பாத்தியை விட சற்று கனமாக தேய்க்கவும்
  • பின்பு சிக்கனை நடுவில் நீளமாக வைக்கவும்
இரு ஓரங்களிலும் ஒவ்வொரு சென்டிமீட்டர் விட்டு விட்டு கீரல்கள் கொடுக்கவும்
கத்தியில் எண்ணை தொட்டால் அழகாக கீரலாம்
  • பின்பு முதலில் உள்ள இரண்டு கீரிய ரிப்பன் போன்ற மாவினை ஒன்றன் மேல் ஒன்றாக வருமாறு வைக்கவும்
  • அப்படியே ஒவ்வொரு கீரிய மாவினையும் இழுத்து இழுத்து மூடவும்.கடைசி ஓர மாவினையும் டைட்டாக அழகாக மூடி விடவும்
  • இப்படியே ஐந்து உருண்டைகளையும் தயாரித்தபின்பு மேலே கலக்கிய முட்டை சிறிது தேய்த்து விட்டு வெள்ளை எள் சிறிது தூவ அழகாக இருக்கும்
(வெள்ளை இல்லாமல் போகவே கறுப்பு போட்டேன்)
  • பின்பு முற்சூடு செய்யப்பட்ட அவனில் 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
சுவையான அழகான பார்த்தால் கடினமாக தோன்றும் ஆனால் எளிமையான சிக்கன் ப்ரெட் ரெடி.
விருந்தினர்களுக்கு கொடுத்து நீங்களே செய்தது என்றால் அசந்து போவார்கள்
:-)