Pages

Tuesday 30 November 2010

தைய்யல்

இன்று வீட்டில் போடுவதற்கேற்ற பாகிஸ்தானி லான் மெடீரியல் எடுத்து வந்தேன்..துணி சும்மா பஞ்சு போல இருக்கும்..விலை ரொம்ப குறைவு..ஒரு செட்டுக்கு 25 திர்ஹம்ஸ் தான் ஆகும்..ஆனால் தைக்க கொடுக்கவோ 35 திர்ஹம்ஸ்..மனசு வருமா??வராது
அதனால் நான் இன்று ஒரு முடிவெடுத்திருக்கேன்...நானே தைப்பது என்று..ஏழு வருஷம் முன்பு இரண்டு வார தைய்யல் க்லாஸ் போணேன்..ஆனால் அதெல்லாம் மறந்து போச்சு ஆனால் மனசு வச்சு முயன்றால் தச்சுடலாம்னு தோனுது.
  என்ன சொல்றீங்க?
பிள்ளைகள்தூங்கும்போது தான் துணியை விரிக்கவே முடியும்..பார்ப்போம்

10 comments:

vanathy said...

தளி, தைக்கும் போது ஸ்டெப் பை ஸ்டெப்பா போட்டோ போடுங்க. நாங்களும் கத்துக்கிறோம்.

இமா க்றிஸ் said...
This comment has been removed by the author.
இமா க்றிஸ் said...

அதெல்லாம் அசத்திருவீங்க. ஆரம்பிங்க தளீ. ஆர்டருக்கா பண்ணப் போறீங்க? இல்லையே. மெதுவா முடியுற மாதிரி தைங்க. ;)

எனக்கு இங்க காரமல் கேக் கிடைக்குமா!! ;)

தளிகா said...

என்ன மாயமோ பதிவெல்லாம் போட்டேன் ரெப்ஃரெஷ் பண்ணி பார்த்தாலெ எதுவும் காணோம்.மண்டை காய்ந்து போய்விட்டு திரும்ப வந்து பார்த்தால் எல்லாம் திரும்ப வந்திருக்கு.
வானதி யோசிச்சு வச்சிருக்கேன்..புரியுற மாதிரி போடவும் வேணும்.ஒரு கை பாத்துருவோம்

ஆமாம் இமா தைக்கிறப்ப பைய்யன் எழுந்தால் ரோட்டில் மழை பெய்த மாதிரி எல்லாத்தையும் சுருட்டிட்டு ஓடிடனும்.

http://www.youtube.com/watch?v=EGE6vaKLG9c

இந்த link பாருங்க இமா..நான் பார்த்த ப்ரோக்ராம் இருக்கு..இவங்க செய்யும் எல்லா குறிப்பும் சுவையாக இருக்கும்...பாஷை புரியும் என்று நினைக்கிறேன் தெளிவா சொல்லுவாங்க

ஆமினா said...

ஆல் த பெஸ்ட் தளிகா

வெற்றியுடன் திரும்பி வா மகளே :)))

தளிகா said...

thank u Ami

இமா க்றிஸ் said...

தளீஸ்.. அவங்க குறிப்பு மட்டும் இல்ல, விபரிக்கிற விதமும் அழகா இருக்கு. நீங்கதானே அது!! ;))
பாஷை.. அங்கங்க எங்க பக்கத்து உச்சரிப்பு வருது. ;)) புதுசா கொஞ்சம் சொற்கள் கற்றிருக்கிறேன். ;)

ஹுஸைனம்மா said...

//வீட்டில் போடுவதற்கேற்ற பாகிஸ்தானி லான் மெடீரியல்//

அப்படின்னா என்ன? (ஹி.. ஹி.. கோச்சுக்காதீங்க, அவ்வளவுதான் என் அறிவு(?)!!) டாப்ஸ் தைக்கிற துணியா?

தளிகா said...

இமா அது நானே தான்..சமையலஒ கத்துக்கறேனோ இல்லையோ அவங்க போடும் வளையலை,மாலை, சேலையை பார்க்க நான் தவறியதே இல்லை:-)

தளிகா said...

ஹுசேனம்மா வாங்க வாங்க....இங்க பாகிஸ்தானி ஜிமுக்குஜிக்கா துணி வச்சிருக்கும் கடைகளில் கூட கிடைக்கும்..லான் துணி..பஞ்சு போல இருக்கும் துணி..மூனு பீசாக கிடைக்கும் சல்வார் கமீஸ் தைத்து வீட்டில் போட்டால் சுகமாக இருக்கும்..நைட்டியை தூக்கி வீசிடலாம்.இங்கு பாகிஸ்தானிகள் பாத்திருக்கீங்க தானே நீளமான வீதியுள்ள துப்பட்டாவும் அடர் நிறமுள்ள சல்வார் கமீசும் அது லான் துணி தான்
இப்ப புரிஞ்சிருக்கும் இல்லையா

Post a Comment