Pages

Monday, 17 January 2011

உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணிட்டு பேசுங்க சார்

    ஏன்யா டிவி சானல் எல்லாம் வந்து எத்தன வருசமாகுது..சானலுக்கு கூப்பிட்டு பேசனுமா டிவி வால்யுமை குறச்சுட்டு பேசு பேசுன்னு பேசுன்னு ஹைதர் காலத்துலிருந்து கேட்டுகிட்டிருக்கீங்களே இருந்துமா அறிவு வரலை??
    இப்ப கொஞ்சம் முன்ன பாத்த ப்ரோக்ராம் தான்...என் கடுப்பை யார்ட தீக்குறது.
அது ஒரு மருத்துவரிடம் ஃபோன் போட்டு கேள்வி கேட்கும் நிகழ்ச்சி

ஹலோ வணக்கங்க ஹெல்த் டாக் நிகழ்ச்சியில டாக்டர்ட என்ன கேக்க போறீங்க சார்

ஹலோ ஹலோ ஹலோ

சார் கேக்குதுங்க உங்க பேர் என்ன ப்ரச்சனைன்னு சொல்லுஙக் சார்

ஹலோ நான் சரவணன் ஹலோ ஹலோ

சார் உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணிட்டு பேசுங்க சார்

ஹலோ நான் சரவணன் ஹலோ டாக்டர் ஹலோ ஹலோ

சார் ப்லீஸ் உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க சார்..பன்னியாச்சா?இல்லைங்க இன்னும் பண்ணலையே பன்னுங்க சார்(இப்ப அந்தம்மா அழுவுது)..உம்ம் இப்ப பேசுங்க சார்

ஹலோ நான் சரவணன் பேசறேங்க

சரிங்க சொல்லுங்க உங்க ப்ரச்சனை என்ன

எனக்கு சாபிட்டு முடிஞ்சதும் வயித்து வலி வரும்

சரிங்க எத்தன வருஷமா இருக்கு

ரெண்டு மாசம்

உம்ம் மேல சொல்லுங்க சரவணன்..டாக்டர்ட போனீங்களா

உம்ம் போணேன்

நிறைய காலர்கள் வெயிட் பன்றாங்க நீங்கப்ரச்சனையை தெளிவா சீக்கிரமா சொல்லுங்க சரவனன்

ஹலோ ஹலோ உம்ம் டாக்டர்ட போணேன் செக் பண்ணினேன்..என்டோஸ்கோபி கொலொனோஸ்கோபி பண்ணாங்க

உம்ம் சொல்லுங்க சரவணன் அதுல எதாவது ப்ரச்சனை இருந்ததா

இல்ல
மிஸ்டர் சரவணன் ப்ரச்சனை இல்லன்னா வேறென்ன சொன்னாங்க

ஹலோ ஹலோ ஒன்னும் சொல்லல குடல்ல லேசா கீறல் இருக்குன்னாங்க

சரிங்க நீங்க நல்ல கேஸ்ட்ரோஎன்டெராலஜிஸ்டை பாத்து எல்லா டெஸ்டையும் செய்து பாருங்க நிச்சயமா தீர்வு கிடைக்கும் நீங்க சரியா பேசாததால என்னால அதிக நேரம் ஒதுக்கி ப்ரச்சனையை புரிஞ்சுக்க முடியல

நேயர்களே(முட்டாள்களே) தயவு செய்து ஃபோன் பண்ணினா டாக்டரிடம் தெளிவாக கேள்விகளை உங்க டிவி வால்யூமை குறைச்சுட்டு கேளுங்க..

இது தான் இப்ப நான் பாத்த ப்ரோக்ராம் இப்ப எனக்கும் இதை பாத்த நிறைய பேருக்கு பிபி எகிறியிருக்கும்னு நினைக்கிறேன்
ஏன்யா அறிவே இல்லையா..என்ன காரணத்துக்காக நீங்க வால்யுமை குறைக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க..உங்க இனிமையாக குரல் டிவியில எப்படி ஒலிக்கிதுன்னு கேக்கவா?
  சரி ஃபோனை போட்டீங்க எதுக்காக?பேச தானே?பேசி தொலை வேண்டியது தானே..அதென்ன ஒரு வார்த்தையில பதிலை சொல்லி கேக்குறவங்களையெல்லாம் டென்ஷனாக்குறது
  இத்தன வருஷமா இந்த கொடுமையை ஏன் இன்னும் ஒழிக்க முடியலைங்கறது எனக்கு புரியவேயில்ல:-(

5 comments:

Jaleela Kamal said...

haa haa

Jaleela Kamal said...

எனக்கும் இப்படி பார்க்கும் போது எரிச்சலா வரும்
அங்கு என்ன சொல்றாஙக்ரதே
புரியது.
இதுக ரண்டும் ஹலோ ஹலொ பலோ சொல்லி முடிகக்வே
சரியா போகும்
கடைசியில் அவர்கலே கட் பண்ண்வாஙக் லா ந்னு தெரியல
( நேரம் லைன் கட் ஆகிவிட்டது, அடுத்த நபர் லைன்ல் இருக்கீறார் , என்பார்கள்
அங்கு அதே பல்லவியா தான் இருக்கும்

ஆமினா said...

எனக்குமே இந்த மாதிரி ப்ரோக்ராம் வந்தா செம எரிச்சலா இருக்கும் தளி

அஸ்மா said...

யூஸ்ஃபுல்லான எத்தனையோ ப்ரோக்ராம்கள் இப்படிதான் கேட்கமுடியாமல் போய்விடுகிறது தளிகா! எல்லாம் நீங்க சொல்வதுபோல் தன் இனிமையான(?) குரல் டிவியில் எப்படி ஒலிக்குதுன்னு கேட்கதான், வேறென்ன.. இல்லையென்றால் நீங்க கேட்டதுபோல் இந்த அறிவு கூட இல்லாத கேஸாக இருக்கலாம்!

இங்கு வந்து பாருங்க தளிகா!

தளிகா said...

வாங்க சிரிப்பழகி வந்து முதல்ல சிரிப்பீங்கன்னு தெரியும்;-).
ஆமினா என்ன செய்வது அப்போதைய கோவம் கொட்டிட்டேன்..30 நிமிஷத்தில் பல இன்ஃபர்மேஷன் கிடைக்கும் இது போன்ற நிகழ்ச்சியை இப்படி வேஸ்டா நேரம் கடத்தும்போது எரிச்சல் தான்
அஸ்மா நீங்க தந்த லின்கில் போய் பார்த்தேன்..முழுக்க படித்து விட்டு வருகிறேன்.

Post a Comment