Pages

Monday, 6 December 2010

செருப்பும் நானும்

   நானும் இருக்கேன் எனக்கொரு செருப்பும் இருக்கு...ப்ரவுன் கலரும் பொன்னிறமும் கலந்தது போல் மேலே வெள்ளை கட்கள் பதித்த செருப்பு..வாங்கி இரண்டு வருடம் ஆகிறது..இந்த இரண்டு வருடமும் கிட்டத்தட்ட எல்லா நாளும் அதனை தான் உபயோகித்திருப்பேன்.
   இதிலென்ன விஷேஷம்னா கேக்கறீங்க?நம்மூர் காசுக்கு சுமார் 400 ரூபாய்க்கு வாங்கினது அது..இங்கு அது ரொம்ப சீப் என்று சொல்லலாம்..அது இன்னொரு நாலு வருஷத்துக்காவது தாங்கும் என நினைக்கிறேன் ..ஆனால் எல்லாரும் திட்ட ஆரம்பித்து விட்டார்கள் வேற செருப்பே இல்லையா என்று.
   நானும் இதை விட நாலு மடங்கு காசு போட்டு செருப்பு வாங்கினேன் எனக்கு இந்த சவுகரியம் கிடைப்பதே இல்லை...ஒன்னு பின்பக்கம் காலில் தேய்ந்து தோல் உரியும் இல்ல எதாவதொரு விரல் அமுங்கி வீங்கும்..அதுவுமில்ல எது மேலயோ ஏறி நடக்கிற மாதிரி வினோதமா இருக்கும்..இப்ப எனக்கு சவுகரியமா நடக்கனும் ஸ்டைலா பெரிசுன்னு அதை கழட்டி போட்டுட்டு என் ராசியான செருப்பையே போட்டுக் கொள்வேன்.
  என் காலுக்கு எப்ப ஒரு விடிவுகாலம் வருமோ தெரியாது..என் காலுக்கேத்த சவுகரியமான செருப்பு எப்ப மார்க்கெட்டில்  வருமோ என்று காத்துக் கொண்டே இருக்கேன்.

5 comments:

Jaleela Kamal said...

சேம் பின்ச், ஞாபகம் வருதா? பந்தம் என்ன பந்த ம் புர்வ ஜென்ம பந்தம்/

vanathy said...

இங்கேயும் அதே கதை தான்.இப்ப வின்டர் தொல்லை ஆரம்பமாக போகுது. என்னிடம் இருக்கும் மியூசியம் ஷூவை எறிய சொல்லி என் கணவர் சொல்கிறார். எனக்கு அதை எறிய மனம் இல்லை. எனக்கு பூட்ஸ் போட்டாலே கடுப்பா வரும். இந்த வின்டருக்கும் இந்த ஷூவினை வைச்சு ஓட்டிடலாம் என்றே நினைக்கிறேன்.

இமா க்றிஸ் said...

;)))) இங்க இருக்கிறது (சம்மர்) வெற்றிகரமான நாலாவது வருஷமா 'விவிட்' மேக்கப்ல திரியுது. இன்னும் ஒரு 2 வருஷமாச்சும் வரும் போல. ஆனா.. ஸ்கூல், ஷாப்பிங் தவிர வேற எங்காச்சும் போறதானா அதுக்கு என்று ஒரு 'ஸ்பேர்' இருக்கு.

கிடைக்கிறப்ப ஒண்ணுக்கு ரெண்டா வாங்கி வச்சுக்கங்க தளீ.

அஸ்மா said...

எனக்கும் அதேதான் தளிகா! 'கட்டுற‌ பொண்டாட்டி அமைவதற்கும், காலுக்கு செருப்பு அமைவதற்கும் கொடுத்து வைத்திருக்கணும்'னு சும்மாவா சொன்னாங்க? :-)

தளிகா said...

அட என்ன போல எத்தன பேர் இருக்கீங்க இப்ப தான் மனசுக்கு ஆறுதலா இருக்கு;-).என் செருப்பு பாக்க அழகா இருந்தாலும் தேவலை.என்னை மாதிரி நாலு கால் உள்ள போகும்னு அவர் சொல்வார்.முன்பக்கம் முழுக்க கவரான மாதிரி தொள தொள செருப்பு.
அனேகமா அது பிஞ்சு போனா நான் தேம்பி அழுவேன்னு நினைக்கிறேன் அந்தளவுக்கு ஒட்டி உறவாடிட்டோம்:-D

Post a Comment