பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை..வழக்கம்போல் நான் காண்பிக்கும் மருத்துவரிடம் தான் கொண்டு போவேன்.எனக்கு தெரிந்தவர்களின் அட்வைஸ்
"நீங்க காம்மிக்கிற டாக்டர் சரியில்ல இல்லன்னா இப்படி அடிக்கடி சளி பிடிக்குமா"இது அவங்க
"ஏங்க அடிக்கடி சளி பிடிக்கிறதுக்கு டாக்டரா காரணம்..மகள் ஸ்கூளுக்கு போய் கொண்டு வர்ரது தான்..இது சகஜம் தான்" இப்படின்னு நான்
"அய்யோ பிள்ளைக பாரு சளி வந்து வந்து சோந்து போயிடுச்சுக(அப்படியொன்னும் அம்மா எனக்கே தோனலை) எங்க டாக்டர்ட கூட்டிட்டு போங்க நல்லா பாப்பார்"
தெரியாதனமா இதுக்கு நான் சொன்ன பதில் "இல்லைங்க எனக்கு இந்த டாக்டர் தான் பிடிச்சிருக்கு..தேவையில்லாம மருந்து எழுதி தள்ள மாட்டார்..மட்டுமில்ல த்வையில்லாம ஆண்டிபயாடிக்கும் தரமாட்டார்"..தேவையா எனக்கு??
அடுத்த நாள் அங்க ரவுன்ட் கட்டி குடும்பத்தோட நிக்கிறாங்க..அந்தம்மாவின் கணவர் எனக்கு அட்வைஸ்
"ஏங்க பிள்ளைக என்ன அவஸ்தை படுது(எனக்கில்லாத கவலையா உங்களுக்கு???)
எங்க டாக்டர் போனதும் ஒரு ஆண்டிபயாடிக் எழுதி தருவார் எல்லாமே சீக்கிரம் மாறிடும்(ஓஹ் அப்படியா சரி சரி)
மட்டுமல்ல பிறகு ரொம்ப நாளைக்கு வேற எதுவுமே வராது(அடேங்கப்பா சூப்பர் கண்டுபிடிப்பு)
நீங்க இப்படி இந்த டாக்டர்ட காமிப்பதனால தான் இப்படி..இந்தாள் சளிக்கு இருமலுக்கு சரியா மருந்து தர்ரதில்ல(போயா நீ வேலையா பாத்துட்டு)"
வயசுக்கு ரொம்ப பெரியவங்கன்னதால சும்மா இருந்துட்டேன்..தவறான கருத்துக்களை புரிஞ்சு வச்சதுமில்லாம அடுத்தவங்களுக்கு இது தான் சரின்னு அழுத்தமா சொல்லியும் கொடுக்க அப்பப்பா ரொம்ப திறமை தான் வேணும்.
அதென்னமோ நம்மாளுக நிறைய பேருக்கு இப்படி ஒரு ப்ரச்சனை இருக்கு..சின்ன குழந்தைகளுக்கு தேவையில்லாமல் இருமல் சளி மருந்து கொடுக்க கூடாது...நல்ல டாக்டர்கள் அதை தேவையில்லாமல் எழுதவும் மாட்டார்கள்
ஆண்டிபயாடிக் என்பது பேக்டீரியல் இன்ஃபெக்ஷனுக்காக தருவது அதற்கு மட்டும் தான் கேட்கும்..ஆனால் சாதாரணமாக குழந்தைகளுக்கு வைரல் இன்ஃபெக்ஷன் தான் அதிகம் வரும்...பேக்டீரியல் இன்ஃபெக்ஷன் என்றால் காய்ச்சல் ரொம்ப அதிகமாகவும் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்தும் போய் விடும்.
சில நல்ல டாக்டர்கள் ஓரிருநாள் பொறுத்து பார்ப்பார்கள்..சிலர் எனக்கென்ன போச்சு என்று முதல் முறையே எழுதி அனுப்பி விடுவார்கள்..அவங்களை எதுக்கு சொல்லனும்..நம்ப பேஷன்ட்ஸ் அப்படி..மருந்தே தரமாட்டார் அந்த டாக்டர் என்று தான் சொல்லுவாங்க.
இப்படி வேண்டாத அட்வைசை தேவையில்லாம அடுத்தவங்களுக்கு கொடுக்க வேண்டாமே.
Friday, 12 November 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
People dont understand . Some think they know all answers
ஆமாம் இலா..நமக்கே குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாம டென்ஷன் இதுல இப்படி அட்வைசை கேட்டால் அப்பத்திக்கி எரிச்சல் தான் வரும்.
இமா என்ன அங்க சிரிப்பு...ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்..என்ன காரணம்னு சொல்லிட்டு உக்காந்தா போதும்
Post a Comment