ரொம்ப நாளா என் கணவர் சுஷி வாங்கனும் சுஷி வாங்கனும்னு சொல்லிட்டிருந்தார்..வேணாங்க கண்டதெல்லாம் போட்டிருப்பாங்க என்றேன்..அதனால் கேட்காமல் நானில்லாத போது போய் வாங்கிட்டு வந்தார்..
நான் கிச்சனில் இருந்தேன். கிச்சன்லிருந்து நான் வெளிய வரவும் இவர் விளக்கெண்ணை குடிச்ச மாதிரி உக்காந்திருந்தார்..என்னாச்சு என்றேன்..இ ஹி ஹீ சுஷீ என்று ஒரு சிரிப்பு.
நல்லா இருக்கா என்றேன்..ஆன் பரவாயில்லை நல்லா தான் இருக்கு என்றார்...எனக்கு அவர் முகத்தை வைத்தே புரிஞ்சாலும் வெளிய காட்டிக்காம சரி அப்ப சாப்பிடுங்க எனக்கு வேண்டாம் என்றேன்..எனக்கு இப்ப வயிறு ஃபுல் பிறகு சாப்பிடுறேன் என்றார் நைசாக .பிறகு ஓரக்கண்ணால் ஒரு கள்ளச் சிரிப்பு.
நான் தான் சொன்னேனே சஹிக்காதுன்னு பிறகேன் வாங்கினீங்க.பாக்க ஆசையா இருந்துச்சு ஆனா சஹிக்கலை என்றார்..பிறகென்ன வாங்கினதுக்கு ஃபோட்டோவாவது எடுப்போம்னு படம் புடிச்சேன்...என் மகள் கலரை கண்டு ஓடி வந்து மூடியை திறந்துட்டு மூக்கை பொத்திட்டு "யக்க்" என்று ஓடிட்டாள்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
சென்ற வருடம் carrefour offer சரி என்று வாங்கி சாப்பிட்டோம்,நல்லாதானே இருந்தது,அந்த ஸ்டிக்கும் ப்லேட்டும் வைத்து இருக்கிறேன்,அந்த சோய் சாஸில் டிப் செய்து raw ,prawn,salmon fish,rice roll,its different taste.
:)))))))))))
இதுக்கு தான் பெரியவக சொன்னா கேக்கணும்குறது :))
ஒரு முறை வெஜிடேரியன் சுஷி சாப்பிட்டு இருக்கிறேன். பெரிதாக ஆர்வப்படவில்லை என்றாலும் சுவை நன்றாக இருந்தது. 'யக்' சொல்லும் அளவுக்கு இருக்கவில்லை. வேறு இடத்தில் வாங்கிப் பாருங்கள். நீங்களே வீட்டில் செய்து பாருங்கள்.
முதல் முறை... மூக்கால் சாப்பிட ட்ரை பண்ணக்கூடாது. ;)) சுவை பிடித்துப் போனால் பிறகு பொறுத்துக் கொள்வீர்கள். ;)
என்னமோ தெரியல ஆசியாக்கா..நான் முதலில் ஒருத்தர் வீட்டில் சாப்பிட்டேன் எனக்கு பிடிக்கலை..அதன் பிறகு இது இதுல கஷ்டபட்டு 2 சாப்பிட்டிருக்கேன்:-)..எனக்கு அதை சுற்றியுள்ள சீவீடின் சுவை தான் பிடிக்கவில்லைன்னு நினைக்கிறேன்
அத சொல்லுங்க ஆமினா ..உங்களுக்கு புரியுது:-)
இமா கீழே என்னவோ pink காக விரிக்கப்பட்டிருந்தது..என்னவென்று பார்த்தேன் பிறகு தான் பச்சை மீன் என்று புரிந்தது அதை முதலில் தூக்கி போட்டு விட்டு தான் படம்புடிச்சேன்..இனி என் மூக்கு தான் அப்படியோ என்னவோ...என் மகள் ஐயர் ஆத்து பிள்ளை ஓடியே போய்விட்டாள்.
http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,பெற்று கொள்ளவும்.
அட.. வீகன் மக்களே சூஷி ( தமிழ்ல எழுதினா சின்ன வயசில படிச்ச ராணி காமிக்ஸ் = கொலொரோடோவின் மாஷை எனும் சூனியகாரி மாதிரி இருக்கு :))) சப்பிடுறாங்க... எனக்கு பிரவுன்ரைஸ் அவகாடோ சூஷி பிடிச்சது.
தளி, எனக்கும் இந்த பொருளை கண்ணில் காட்டவே கூடாது. அந்த கடல் பாசியின் மணம் பிடிப்பதில்லை. என் கணவர் சாப்பிடுவார். சால்மன் மீனை சமைக்காமல் அப்படியே போட்டு சாப்பிடுவார்களாம்.
கடவுளே யாராச்சி உதவுங்களேன்..ஆசியாக்கா பூச்செண்டை(அவார்ட்) நீட்டிட்டு நிக்கிறாங்க எனக்கு எப்படி போய் வாங்குறதுன்னு தெரியலையே.அப்படின்னா நான் பாசாயிட்டேனா ??
இலா என்ன ஒரு கற்பனை.நானில்லப்பா இந்த வெளையாட்டுக்கு ..ரங்குவை ட்ரை பண்ண சொல்லுவோம்
அப்ப வானதியின் மூக்கும் என் மூக்கும் ஒண்ணு.எனக்கு நெனச்சு பாத்தாலும் உவ்வே நு இருக்கு
Post a Comment