Pages

Sunday, 21 November 2010

பேனா பிடித்த மான்குட்டி

என் பொண்ணுக்கு புடிச்ச பொழுதுபோக்குன்னா அது புத்தகமும் பேனாவும் தான்..அதை வச்சுட்டு எழுதுவாங்க எழுதுவாங்க எழுதிகிட்டே இருப்பாங்க.
  நாள் முழுக்க சுவற்றோட ஒட்டி நின்னுகிட்டு எழுதுறது,சாப்பிட சாப்பிட இடது கைய்யால் எழுதுறதுன்னு கற்பனையால் பார்த்த எல்லாத்தையும் வரைந்தும் வைப்பாள்...
   ஒருநாள் வெளியே போகிறப்ப பேபர் பேனா கொண்டு போகனும் என்று கெஞ்சினாள் ....ஒரு வழியாக சம்மதித்தேன்..எனக்கோ கோவம் ரோட்டிலும் நின்று நின்று அங்கங்க கடைகளின் சுவற்றில் வைத்தும் எழுதிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்..எனக்கோ கடுப்பு ஆனால் அவளோ பெருமையாக நான் அம்மா மாதிரியே எழுதுவேன் என்று சொல்வாள்.
   ரோட்டில் போகிறவர்கள் சின்ன பிள்ளை என்னமா எழுதுது என்று  ஆச்சரியத்துடன் எட்டி பார்த்து விட்டு என்னையும் பார்த்து சிரித்து விட்டு போவார்கள்..எப்படி அவ பாஷையில் எழுதினது தான் இது


என் மகள் இப்படி ஒருநாள் இதை வரைந்து வைத்திருந்தால் ..என்ன வரைஞ்சிருக்கே என்றதற்கு "இதுவா ஸ்பாஞ்ச் பாப் க்ரூப் டான்ஸ் பன்னுறாங்க"என்றாள்

5 comments:

kavisiva said...

ஹா ஹா ரூபி ரீமா குட்டி என்னோட சின்ன வயசை ஞாபகப் படுத்திட்டா :). நானும் சின்ன வயசில் அப்பா மாதிரி எழுதறேன்னு சிலேட் முழுக்க இப்ப ரீமா எழுதியிருக்கற மாதிரியே எழுதுவேன் :).

ஸ்பாஞ்ச் பாப் குரூப் டான்ஸ் ரொம்ப அழகா இருக்கு!

தளிகா said...

ஹிஹிஹீ..ஒரு ரகமா தான் இருக்கீங்க.இதுல வேற ஹேன்ட் ரைட்டிங் அழகா இருக்கான்னு கேப்பா:-)

ஆமினா said...

சின்ன வயசுல ஆபிஸ்ல வேலைபாக்குறவங்க சீனை டீவியில் பார்த்துட்டு நானும் இப்படி தான் பேப்பரில் எழுதுவேன். அதுவும் எல்லாரும் கொடுக்கும் பாராட்டுக்கு அதிகமாகவே எழுதுவேன் :) . என் மகனும் கூட இப்ப பேனா,நோட் கொடுத்தா ஒருவழி பண்ணாம விடமாட்டான்.

உங்க பசங்க ஞாபகப்படுத்திட்டீங்க

vanathy said...

என் பிள்ளைகளும் இப்படி நிறைய கிறுக்குவார்கள். எல்லாத்தையும் சேர்த்து வைச்சிருக்கேன்.

தளிகா said...

ஆமினா.அப்ப ஏறக்குறைய எல்லா பிள்ளைகளும் இப்படி தான் செய்வாங்க போலிருக்கு.

நானும் தான் வானதி எல்லாம் எடுத்து வைத்திருக்கேன் ஆனா அதுக்கே ஒரு பெரிய பெட்டி வேணும் போலிருக்கு

Post a Comment