ரெண்டு வாரம் முன்னாடி ஒரு தோழி வீட்டுக்கு போயிருந்தேன்...தோழி என் அம்மா வயதொத்த தோழி நான் தான் விவரமா ஆண்டின்னு கூப்பிட்டு கவுத்திருக்கனும்;-)...அக்கான்னு தான் கூப்பிடுவேன்.
இதுவரை அவங்களை தான் பாத்திருக்கேன் ஒழிய பிள்ளைகளை பார்த்தது கிடையாது.மூத்த பெண் போஸ்ட் க்ரேஜுவேஷன் முடிந்து வேலக்கு போகிறது..சுமார் 23 வயதிருக்கும்.
அன்று நான் போனபொழுது வேலை விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தர் மகள்..இவங்க என்னை காட்டி "இந்த ஆண்டியை தெரியுமா உனக்கு"
நான் ஒரு கண் துடிதுடிக்க விவேக் மாதிரி நிலைகுலைந்து விழலாம் என்று இருந்தேன் அப்ப சரியா அந்த பொண்ணு "ச்சீ ஆண்டியா போங்கம்மா..."என்று அக்கா என்று அழைத்தாள்....
எனக்கு மூச்சு வந்தது..ஹிஹீ
இந்த வயசை மறைச்சுட்டு குறைச்சுட்டு நடக்கும் கேஸ் நானில்லை என்றாலும் ஒரு நாலு வயசு வித்யாசத்துக்கு ஆண்டின்னெல்லாம் கூப்பிட்டா நான் பேஜாராகிடுவேன்னு நினைக்கிறேன்.
பரவாயில்லை பொண்ணு விவரமா தான் இருக்கு போணா போகட்டும்..
இந்த டிவியில பாத்திருக்கீங்களா...புதுசா கல்யாணம் ஆன சின்ன பசங்களையெல்லாம் கூட அன்கில் அன்கில் நு வெக்கமில்லாம கூப்பிடுவாங்க சில ஆன்கர் பொம்பளைகள்
Monday, 8 November 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
I feel you ma.. my neighbor kids will call me only akka ( including 3 year olds).. nalla naalula poduree age pathi pathivu :(
ஹாஹா..
இந்த வம்பெல்லாம் வேண்டாம் என்று நான் எல்லோரையும் பெயர் சொல்லியே கூப்பிடுவேன். கொஞ்சம் வயசானவங்களை அவங்களின் அனுமதி கேட்ட பின்னர் ஆன்டி/அக்கான்னு கூப்பிடுவேன்.
இப்ப தான் தளி எழுத முடியுது. நேத்துல இருந்து போராடிட்டு இருக்கேன்!
என் பக்கத்து வீட்டில் உள்ள பெண் கூட(இத்தனைக்கும் 4 வயது தான் வித்தியாசம்) என்னை ஆண்ட்டி என கூப்பிட்டாள். எனக்கு பயங்கர கோபம் தான். ஆனாலும் வெளிக்காட்டாமல் அவள் அம்மாவை நானிமா என கூப்பிட்டு விடுவேன். நான் சொல்லும் போது மட்டும் அந்த அம்மாவுக்கு முகம் வாடிவிடும் :)
இலா யார் அந்த நெய்பர்...ஃபோன் நம்பர் வேணும் எனக்கு..மூனு வயசு குட்டிகிட்ட எனக்கு பேச வேண்டியிருக்கு
வானதி ..அதானே..நானும் பேர் தான் சொல்லி கூப்பிடுவேன்..கொஞ்சம் வயசானவங்கன்னா நாசூக்கா கூப்பிட்டு பாப்பேன்:-)..சில மரமாக்ரிகள் தான் இப்படி
ஆமினா அது என்னப்பா நானிமா..பாட்டியா?நானும் கூப்பிடலாம்னு பாக்கிறேன்:-)
Post a Comment